இன்ஜினியரிங் முடித்தவர்களா நீங்கள் ? மத்திய அரசில் காத்திருக்கிறது அருமையான வேலைவாய்ப்பு !

By Raghupati R  |  First Published Aug 17, 2022, 11:57 PM IST

THDC இந்தியா லிமிடெட் ஆட்சேர்ப்பு பற்றிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.


தேசிய அனல் மின் கழகம் லிமிடெட்  நிறுவனத்தின் கீழ் இயங்கும், மத்திய அரசு நிறுவனமான தெஹ்ரி ஹைட்ரோ டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் இந்தியா லிமிடெட் தற்போது வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் சமீபத்திய THDC India Limited Recruitment 2022 Associate காலியிடங்கள் 2022 விவரங்களைச் சரிபார்த்து ஆன்லைனில் அதிகாரபூர்வ இணையத்தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

தொடக்கத் தேதி : 20/07/2022

Tap to resize

Latest Videos

கடைசித் தேதி : 19/08/2022 (மாலை 05:30)

கட்டணம் கடைசி தேதி : 21/08/2022

தேர்வு தேதி : விரைவில் அறிவிக்கப்படும்

வயது வரம்பு : அதிகபட்சம் 32 ஆண்டுகள்

வயது வரம்பு : 01/08/2022

மேலும் செய்திகளுக்கு..UPSC வெளியிட்ட சூப்பர் வேலைவாய்ப்பு அறிவிப்பு - முழு தகவல்கள் இதோ !

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் இணையதளம் மூலம் தகுதி மற்றும் இன்ன பிற விவரங்களை சரிபார்க்க வேண்டும், அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி விண்ணப்பதாரர்கள் B.Tech / B.E முடித்திருக்க வேண்டும். தகுதி பற்றிய விரிவான விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

காலியிடங்கள்

பொறியாளர்கள் (சிவில்) - 34 

பொறியாளர் (மின்சாரம்) - 41

பொறியாளர் (மெக்கானிக்கல்) - 31

பொறியாளர்கள் (சுற்றுச்சூழல்) - 03

மேலும் செய்திகளுக்கு..38,000 சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் அருமையான வேலைவாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க !

சிவில் இன்ஜினியரிங் இளங்கலை பட்டம், எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் இளங்கலை பட்டம், மெக்கில் இளங்கலை பட்டம் & ஆட்டோ இன்ஜினியரிங், சுற்றுச்சூழல் பொறியியலில் இளங்கலை பட்டம் என வரிசையாக அவரவர் வேலைக்கேற்ப தகுதி தெரிவிக்கப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வு / தனிப்பட்ட நேர்காணல் / மருத்துவத் தேர்வு / ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதும் அவர்கள் THDC இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் அசோசியேட்டாக நியமிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த வேலைக்கான இடம் டேராடூன் ஆகும். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 20/08/2022 ஆகும். தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள்  ஆன்லைன் / ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு..மாதம் 10,000/- ஊக்கத்தொகை.. வேலைவாய்ப்புடன் பட்டப்படிப்பு - தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு

click me!