மொபைல் உற்பத்தியில் 1,50,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் எனவும் இதில் 40 ஆயிரம் பேர் நேரடியாகவும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் மறைமுகமாகவும் பயன் அடைவார்கள் எனவும் அறிக்கை கூறுகிறது.
அதிக தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் இந்தியாவிற்கு வருவதற்கு அரசாங்கம் முக்கியத்துவம் அளிக்கும் வகையில், மொபைல் உற்பத்தியில் 1,50,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என எகனாமிக் டைம்ஸின் அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது. பிரபல மொபைல் உற்பத்தியாளர்கள் இந்தியாவில் பெரிய அளவில் பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக அந்த அறிக்கை கூறியுள்ளது.
சீனாவைத் தாண்டி உற்பத்தி செய்வதற்கான உலகளாவிய மாற்றம் மற்றும் இந்திய அரசாங்கத்தின் உற்பத்தி-இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (பிஎல்ஐ) திட்டத்தால் இது இயக்கப்படுகிறது என்று அறிக்கை மேலும் கூறியது.
undefined
முதல் முறையாக மனிதருக்குப் பரவிய தாவரப் பூஞ்சை நோய்! மருத்துவர்கள் அதிர்ச்சி!
பிரபல மனிதவள நிறுவனங்கள், இந்தத் துறையில் இந்த நிதியாண்டில் உருவாக்கப்படும் 120,000-150,000 புதிய வேலைவாய்ப்புகளில் சுமார் 30,000–40,000 பேர் நேரடியாக வேலை பெறுவரா்கள் என்றும் மீதமுள்ளவர்கள் மறைமுக வேலை பெறக்கூடும் என்றும் கூறியுள்ளன. சாம்சங், நோக்கியா, ஃபாக்ஸ்கான், விஸ்ட்ரான், பெகாட்ரான், டாடா குரூப் மற்றும் சால்காம்ப் போன்ற பெரிய கார்ப்பரேட் ஜாம்பவான்கள் தங்கள் பணியாளர்களை அதிகரிக்கக்கூடும் என்று அறிக்கை கூறுகிறது.
டீம்லீஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கார்த்திக் நாராயண் கூறுகையில், "பெரும்பாலான மொபைல் பிராண்டுகள் மற்றும் அவற்றின் உதிரிபாக உற்பத்தியாளர்கள் ஏற்கனவே இந்தியாவில் ஏதேனும் ஒரு வகையில் உற்பத்தியை அதிகரிக்க விரும்புகின்றனர்" எனக் கூறியுள்ளார். டீம்லீஸ் மூலம் தற்போது 2,000 க்கும் மேற்பட்டவர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர் எனவும் குறிப்பிட்டார்.
கடந்த நிதி ஆண்டைக் காட்டிலும் இந்த நிதியாண்டில் பணி நியமன ஆணைகள் 100 சதவிகிதம் அதிகரித்திருக்கும் என்று Quess மற்றும் Ciel மனிதவள நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
EMI ல் மாம்பழம் வாங்கலாம்! புகழ்பெற்ற அல்போன்சா மாம்பழத்தை ருசிக்க சூப்பர் சலுகை!
"இந்தியாவில் மொபைல் உற்பத்தியாளர்கள் தேவை அதிகரிப்பை எதிர்பார்த்து பணியமர்த்துவதை மீண்டும் தொடங்கியுள்ளனர். சிப் பற்றாக்குறையின் விநியோகச் பிரச்சினை இப்போது தொந்தரவு செய்வதாகத் தெரியவில்லை. தொழில்நுட்ப வல்லுநர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் தர உத்தரவாத பரிசோதனைகளின் தேவை கிட்டத்தட்ட இருமடங்காக இருப்பதைக் கண்டுள்ளோம்,” என்று Ciel நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதித்ய நாராயண் மிஸ்ரா கூறினார்.
"அரசாங்கத்தின் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டமும் பல நிறுவனங்களின் தொரைநோக்குத் திட்டமும் இந்தியாவில் உற்பத்தியைப் பெறுக்க ஊக்குவிக்கின்றன. முதலில் உள்ளூர் சந்தையைத் வலுப்படுத்தியதும் உலகின் பிற நாடுகளுக்கும் கணிசமான ஏற்றுமதி செய்ய முன்வருகின்றன. இதனால், வேலைவாய்ப்புகள் பெருகுகின்றன" என டீம்லீஸின் நாராயண் கூறுகிறார்.
சமூகநலத்துறையில் வேலை! தேர்வு இல்லாமல் நேரடி நியமனம்! விண்ணப்பிப்பது எப்படி?