தமிழக அங்கன்வாடிகளில் 10,000-க்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளன.
தமிழக அரசு சார்பில் பல அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் 10,000-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாக உள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
D.Ted படித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும், கலப்பு திருமணம், மாற்றுத்திறனாளிகள், கணவரால் கைவிடப்பட்ட ஆதரவற்ற பெண்கள், விதவை பெண்கள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : இந்தியாவில் ஓரினச்சேர்க்கை திருமணம்: உச்சநீதிமன்றம் பரிசீலிக்க வேண்டிய 3 கேள்விகள்..
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கல்வி சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கையெழுத்து தகுதி சான்றிதழ், விண்ணப்பக்கடிதம், அனுபவ சான்றிதழ், விதவை சான்றிதழ், சாதி சான்றிதழ், குடியிருப்பு சான்றிதழ் ஆகியவை அவசியம்
தேர்வு முறை : நேர்முகத்தேர்வு, எழுத்துத்தேர்வு, ஆவண சரிபார்ப்பு ஆகியவற்றின் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது 18 முதல் அதிகபட்ச வயது 45 ஆண்டுகள். இந்த பணிகளில் சேர விருப்பமுள்ளவர்கள் https://icds.tn.nic.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இந்த பணியில் சேர்ந்தால் மாதம் ரூ.6,500 முதல் பணிக்கு தகுந்தாற்போல் சம்பளம் வழங்கப்படும். கூடுதல் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
இதையும் படிங்க : பிரதமர் மோடியின் மன் கி பாத் நிகழ்ச்சிக்காக ரூ.830 கோடி செலவு.. ஆம் ஆத்மி தலைவர் மீது வழக்குப்பதிவு