பணியாளர் தேர்வு ஆணையம் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதை அடுத்து தகுதியும் விருப்பமும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி விவரம்:
பணி:
Combined Graduate Level (ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வு) காலிப்பணியிடங்கள்:
இதையும் படிங்க: கல்லூரி வேலையை உதறிவிட்டு போட்டித் தேர்வு எழுத பயிற்சி அளிக்கும் பேராசிரியர்!
வயது வரம்பு:
8-27, 18-30, 18-32 மற்றும் 20-30 வயதிற்குள் உள்ள வெவ்வேறு பதவிகளுக்கு வயது வரம்பு மாறுபடும். அறிவிக்கப்பட்ட பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு தளர்த்தப்பட்டுள்ளது. கல்வித்தகுதி:
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையங்களில் குறைந்தபட்சமாக ஒரு இளங்கலை டிகிரி படித்திருக்க வேண்டும். சம்பளம்:
பணிக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு Pay Level-4 முதல் Pay Level-8 வரையிலான ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யும் முறை:
SSC CGL 2023 கணினி அடிப்படையிலான தேர்வு அடுக்கு-I மற்றும் அடுக்கு-II என இரண்டு முறையில் நடத்தப்பட இருக்கின்றன. அடுக்கு-II தேர்வில் விண்ணப்பதாரர்களின் ஒட்டுமொத்த செயல்திறனின் அடிப்படையில் மட்டுமே தகுதி பட்டியல் தயாரிக்கப்படும். இதையும் படிங்க: மாதம் ரூ.1.12 லட்சம் சம்பளத்தில் அரசு வேலை.. டிகிரி இருந்தால் போதும்.. விவரம் உள்ளே..
விண்ணப்பக் கட்டணம்:
விண்ணப்பதாரர்கள் (பெண்கள்/SC/ST/PwD/ESM தவிர) ஆன்லைனில் படிவத்தை பூர்த்தி செய்யும் போது விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் கட்டணத்தை மே 4 வரை செலுத்தலாம். விண்ணப்பிப்பது எப்படி?
அதிகாரப்பூர்வ இணையதளமான ssc.nic.in க்கு செல்லவும். முகப்பு பக்கத்தில் (ஹோம் பேஜ்) பதிவு இணைப்பை கிளிக் செய்யவும். போர்ட்டலில் உள்நுழைந்து SSC CGL 2023க்கு விண்ணப்பிக்கவும். ஆவணங்களை (documents) பதிவேற்றம் செய்து, கட்டணம் செலுத்தி, சமர்ப்பிக்கவும். கடைசி தேதி:
Subscribe to get breaking news alertsSubscribe