மத்திய அரசு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. கணக்காளர், ஜூனியர் மொழிபெயர்ப்பாளர், உதவியாளர், டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் (கிரேடு - 3) ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளது.
கணக்காளர் மற்றும் அலுவலக மேற்பார்வையாளர் பணிக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இளங்கலை வணிகவியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஆடிட்டிங் உள்ளிட்ட பணிகளில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ஜூனியர் மொழிபெயர்ப்பாளர் பணிக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இந்தியில் இளங்கலை பட்டம் பெற்றவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
இந்தியில் இருந்து ஆங்கில மொழியில் மொழிபெயர்ப்பதில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உதவியாளர் பணிக்கு ஏதாவது ஒரு துறையில் இளங்கலை பட்டம் படித்திருக்க வேண்டும். டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். கம்ப்யூட்டர் அப்ளிகேஷனில் டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்.
35 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
சம்பள விவரம் :
கணக்காளர் - ரூ.35,400 - ரூ.1,12,400
ஜூனியர் ஹிந்தி மொழிபெயர்ப்பாளர் : ரூ.35,400 - ரூ.1,12,400
உதவியாளர் - ரூ.35,400 - ரூ.1,12,400
டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் ரூ.19,000 - ரூ.63,200
தேர்வு முறை : எழுத்துத்தேர்வு மற்றும் திறனறி தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்
விண்ணப்பக் கட்டணம் : ரூ.1000 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். பட்டியலின/பழங்குடியின பிரிவினர், பெண்கள் ஆகியோர் ரூ.600 கட்டணமாக செலுத்த வேண்டும். முன்னாள் ராணுவத்துறையினர் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. வரும் 15-ம் தேதிக்குள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.