CTET 2023 : மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி? முழு விபரம்

By Raghupati R  |  First Published Apr 28, 2023, 11:53 AM IST

வரும் ஜூலை மாதத்தில் நடைபெற உள்ள CTET தேர்வுக்கான விண்ணப்பிப்பதிவு தொடங்கி உள்ளது.


நாடு முழுவதும் சிபிஎஸ்இ நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு (CTET 2023) அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. கணினி அடிப்படையிலான தேர்வுகள் ஜூலை மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை நடத்தப்படும் என்றும், தேர்வுகளின் சரியான தேதிகள் அட்மிட் கார்டுகளில் சேர்க்கப்படும் என்றும் சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. 

இந்த தேர்வு எழுத ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் மே 26 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் கலந்துகொள்ள விரும்பும் விண்ணப்பதாரர்கள் ctet.nic.in என்ற CBSE CTET இன் அதிகாரப்பூர்வ தளத்தின் மூலம் பதிவு செய்யலாம்.

Tap to resize

Latest Videos

தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மே 26 என்றும், தேர்வுக்கான கட்டணத்தை மே 27 வரை செலுத்தலாம் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

CTET - எப்படி விண்ணப்பிப்பது: 

* தேர்வுக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள படிகளைப் பின்பற்றலாம்.

* அதிகாரப்பூர்வ இணையதளமான ctet.nic.in என்ற பக்கத்திற்கு செல்ல வேண்டும்.

* முகப்புப் பக்கத்தில் உள்ள CTET ஜூலை 2023 பதிவு இணைப்பைக் கிளிக் செய்யவும்.

* விண்ணப்பதாரர்கள் தங்களை முதலில் பதிவு செய்ய வேண்டும்.

* பிறகு விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தவும்.

* சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்து உறுதிப்படுத்தல் பக்கத்தைப் பதிவிறக்கவும்.

* பிறகு அதனை பிரிண்ட் செய்து கொள்ள வேண்டும்.

CTET இரண்டு தாள்களை உள்ளடக்கியது- I முதல் V வகுப்புகளுக்கு ஆசிரியராக இருக்க விரும்புபவருக்கு தாள் I மற்றும் VI முதல் VIII வகுப்புகளுக்கு ஆசிரியராக இருக்க விரும்புபவருக்கு தாள் II. CTET இல் உள்ள அனைத்து கேள்விகளும் மல்டிபிள் சாய்ஸ் கேள்விகள் (MCQகள்), நான்கு மாற்றுகளில் ஒரு பதில் மிகவும் பொருத்தமானதாக இருக்கும் என்ற வகையில் தேர்வு இருக்கும் என்று அறிவித்துள்ளது. மேலும் விபரங்களுக்கு அதிகாரப்பூர்வ தளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க: DRDO CEPTAM தேர்வு முடிவுகள் வெளியானது.. தெரிந்து கொள்வது எப்படி? முழு விபரம்

click me!