தமிழ்நாடு அரசின் தடவியல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாக உள்ளது.
தமிழ்நாடு அரசின் தடவியல் துறையில் காலியாக உள்ள 31 இளநிலை அறிவியல் அலுவலர் பதவியை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயம் வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு தகுதியானவர்கள் மே 26-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்த காலியிடங்கள் : 31
பணி : இளநிலை அறிவியல் அலுவலர்
துறைவாரியான காலியிடங்கள் :
வேதியியல் - 20
உயிரியல் -4
இயற்பியல் - 3
இயற்பியல் மற்றும் வேதியியல் பிரிவு ( கணினி தடயவியல் அறிவியல்-4)
சம்பளம் : மாதம் ரூ.36,900 - ரூ.1,36,000
இதையும் படிங்க : பிரதமர் மோடியின் மன் கி பாத் நிகழ்ச்சிக்காக ரூ.830 கோடி செலவு.. ஆம் ஆத்மி தலைவர் மீது வழக்குப்பதிவு
வயதுவரம்பு : 1.07.2023 தேதியின் படி, குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்சம் 32 வயதுக்குள் இருக்க வேண்டும்
தகுதி : தடய ஆறிவியல் பிரிவில் எம்.எஸ்.சி முடித்திருக்க வேண்டும். தமிழ் மொழியில் போதுமான தமிழறிவு பெற்றிருக்க வேண்டும்.
கட்டணம் : நிரந்தர பதிவுக்கட்டணம் ரூ.150. தேர்வு கட்டணமாக ரூ.150 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். விரிவான விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்.
தேர்வு முறை : கணினி வழி தேர்வு, நேர்முக தேர்வு அமைந்த வாய்மொழித்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : www.tnpsc.gov.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் : 26.05.2023
மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க : Watch : கர்நாடக தேர்தல் பொதுக்கூட்டத்தில் வைக்கப்பட உள்ள பிரதமர் மோடியின் ஓவியம்..