zomato share price: ஜோமேட்டோ பங்கு மதிப்பு வரலாற்று வீழ்ச்சி:14 % சரிவு: என்ன காரணம்?

By Pothy Raj  |  First Published Jul 25, 2022, 1:37 PM IST

ஜோமேட்டோ நிறுவனத்தின் பங்கு மதிப்பு இதுவரை இல்லாத வகையில்15 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது. ஒரு பங்கு மதிப்பு ரூ.46க்கு சரிந்தது.


ஜோமேட்டோ நிறுவனத்தின் பங்கு மதிப்பு இதுவரை இல்லாத வகையில்15 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது. ஒரு பங்கு மதிப்பு ரூ.46க்கு சரிந்தது.

ஜோமேட்டோ நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் ஒரு பங்கு மதிப்பு அதிகபட்சமா ரூ.169.10க்கு விற்பனையானது. ஆனால், அடுத்த ஓர் ஆண்டுக்குள் பங்கு மதிப்பு 65 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது. 

Tap to resize

Latest Videos

எலான் மஸ்க் மன்மத லீலைகள்: கூகுள் நிறுவனர் மனைவியுடன் கள்ளத் தொடர்பா?

ஜோமேட்டோ நிறுவனம் பங்கு வெளியிட்டுக்குப்பி்ன் லாக்கின் பீரட் காலம் ஓர் ஆண்டாக இருந்தது. இந்த ஓர் ஆண்டு காலம் கடந்த 23ம் தேதியுடன் முடிந்தது. இதனால்தான் முதலீட்டாளர்கள், பங்குதாரர்கள் ஜோமேட்டோ பங்குகளை விற்பதில் தடையில்லை என்பதால் அதிகளவில் விற்றனர். இதனால்விலை சரிந்தது.

மும்பை பங்குச்சந்தை, தேசியப் பங்குச்சந்தை இன்று காலை தொடங்கியதும் ஜோமேட்டோ பங்கு விலை ரூ.50ஆக இருந்தது. ஆனால், அடுத்த சில நிமிடங்களில் பங்கு மதிப்பு சரசரவென சரிந்து, ரூ.46க்கு வீழ்ச்சி அடைந்தது.

தங்கம் விலை தொடர்ந்து உயர்வு: மீண்டும் ரூ.38ஆயிரத்தை நோக்கி நகருமா? இன்றைய நிலவரம் என்ன?

ஐஐஎப்எல் செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் அனிஜ் குப்தா கூறுகையில் “ கடந்த ஓர் ஆண்டாக லாக்கின் காலம் என்பதால் ஜோமேட்டோ பங்குகளை வைத்திருந்த முதலீட்டாளர்கள், ஊழியர்கள், நிறுவனர்கள் விற்க முடியாமல் இருந்தனர். ஆனால், லாக்கின் காலம் கடந்த 23ம் தேதி முடிந்ததால், இன்று சந்தை தொடங்கியதும் ஜோமேட்டோ பங்கு மதிப்பு வீழ்ச்சி அடைந்தது. இதனால் பெரும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது” எனத் தெரிவித்தார்

பறக்கப்போகுது ஆகாசா ஏர்(akasa air) ! ஆகஸ்ட் 7 முதல் சேவைத் தொடக்கம்: கட்டணம் எவ்வளவு?

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஜோமேட்டோ பங்கு மதிப்பு ரூ.169ஆக உயர்ந்து, ஒருலட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள நிறுவனமாக ஜோமேட்டோ மாறியது. ஆனால்,அடுத்த ஓர் ஆண்டுக்குள், 65சதவீத மதிப்பை ஜோமேட்டோ இழந்துவிட்டது.
 

click me!