தங்கம் விலை கடந்தவாரக் கடைசியிலிருந்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த வாரத்தில் பாதி நாட்கள் சரிவில் இருந்த விலை, அதன்பின் படிப்படியாக உயர்ந்து வருகிறது.
தங்கம் விலை கடந்தவாரக் கடைசியிலிருந்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த வாரத்தில் பாதி நாட்கள் சரிவில் இருந்த விலை, அதன்பின் படிப்படியாக உயர்ந்து வருகிறது.
ஆபரணத் தங்கம் விலை தொடர்ந்து 3வது நாளாக இன்றும் அதிகரித்துள்ளது.
நிரவ் மோடியின் ரூ.253 கோடி சொத்துக்கள் முடக்கம்: அமலாக்கப்பிரிவு நடவடிக்கை
சென்னையில் இன்று காலை நிலவரப்படி, தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு 24ரூபாயும், சவரணுக்கு 192 ரூபாயும் அதிகரித்துள்ளது.
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,696க்கும், சவரண் ரூ.37,568க்கும் விற்பனை ஆனது. இன்று காலை தங்கத்தின் விலையில் 3-வது நாளாக உயர்ந்துள்ளது.
இதன்படி, சென்னையில் 22காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு 24 ரூபாய் அதிகரித்து ரூ4,720ஆகவும், சவரணுக்கு ரூ.192 அதிகரித்து ரூ.37,760க்கும் விற்கப்படுகிறது.
400 பிராண்ட், 30,000 பொருட்கள்: 75%வரை தள்ளுபடி: எதை எடுத்தாலு்ம் சலுகைகள்
கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.4720ஆக விற்கப்படுகிறது.
தங்கதத்தின் விலையில் கடந்த சில வாரங்களாக கடும் ஏற்ற இறக்கம் இருந்து வருகிறது. கடந்த 2 வாரத்தில் மட்டும் சவரன் ரூ.38ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்த தங்கம் விலை, ரூ.36ஆயிரத்தை தொடும் அளவுக்கு குறைந்தது. ஏற்ககுறைய சவரனுக்கு ரூ.2500 குறைந்தது.
ஆனால் கடந்த வாரத்தில் தொடர்ந்து இருநாட்கள் அதிகரித்து சவரனுக்கு ரூ.500க்கும் அதிகமாக அதிகரித்தது, இன்று 3வது நாளாக சவரனுக்கு ரூ.198 அதிகரித்து, சவரனுக்கு ரூ.700 வரை 3 நாட்களில் உயர்ந்துள்ளது.
அமெரிக்க பெடரல் வங்கியின் நிதிக்கொள்கை கூட்டம் 26 மற்றும் 27ம் தேதிகளில் நடக்கிறது. இந்தக் கூட்டத்தில், வட்டி வீதம் 75 புள்ளிகள் வரை உயர்த்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அறிவிப்பை எதிர்பார்த்துதான் சர்வதேச சந்தை, உலக நாடுகள் காத்திருக்கின்றன. பெடரல் வங்கியி்ன் வட்டிவீத உயர்வு, ஆசிய, ஐரோப்பியச் சந்தையில் பெரிய தாக்கத்தையும், தங்கம் விலையில் மாற்றத்தையும் உருவாக்கலாம்.
எஸ்பிஐ (SBI) வாடிக்கையாளர்களே! உங்களுக்காக வாட்ஸ்அப் பேங்கிங் சேவை தொடக்கம்: வசதிகள் என்ன?
வெள்ளி விலை இன்று சற்று குறைந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு 10 பைசா குறைந்து, ரூ.61.10 ஆகவும், கிலோவுக்கு ரூ.100 குறைந்து, ரூ.61,100க்கும் விற்கப்படுகிறது.