பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் லண்டனுக்கு தப்பி ஓடிய வைர வியாபாரி நிரவ் மோடிக்கு சொந்தமான நகைகள், சொத்துக்கள், வங்கி சேமிப்புகள் என மொத்தம் ரூ.253 கோடி சொத்துக்களை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் முடக்கினர்.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் லண்டனுக்கு தப்பி ஓடிய வைர வியாபாரி நிரவ் மோடிக்கு சொந்தமான நகைகள், சொத்துக்கள், வங்கி சேமிப்புகள் என மொத்தம் ரூ.253 கோடி சொத்துக்களை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் முடக்கினர்.
சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கையை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் எடுத்தனர்.
itr filing date: வருமான வரி ரிட்டன் தாக்கலுக்கு காலக் கெடு நீட்டிக்கப்படுமா? மத்திய அரசு பதில்
நிரவ் மோடிக்கு எதிராக, ஐபிசி பிரிவு 420,(மோசடி,நேர்மையற்றுநடத்தல்), 467, 471, 120-பி(சதித்திட்டம்), ஆகிய பிரிவின் கீழ் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர்.
இதுவரை இந்த வழக்கில் நிரவ் மோடியிடம் இருந்து ரூ.2,650.07 கோடிக்கு சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
நிரவ் மோடிக்கு சொந்தமான சொத்துக்களான விலை உயர்ந்த கற்கள், நகைகள் ஆகியவை தனியார் வாலட்களிலும், வங்கிலாக்கரிலும் உள்ளன. இந்தசொத்துக்களை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்யவில்லை என்றாலும் சட்டவிரோத பரிமாற்றச்ச ட்டத்தின் கீழ் முடக்கிவைத்துள்ளனர்.
bank holiday august :18 நாட்கள் வங்கிகள் விடுமுறை: ஆகஸ்ட் மாத பட்டியல் இதோ!
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14 ஆயிரம் கோடி கடன் பெற்ற வைர வியாபாரி நிரவ் மோடி, அதைத் திருப்பிச் செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டு, லண்டனுக்கு தப்பி ஓடினார். இது குறித்து சிபிஐ, அமலாக்கப்பிரிவு வழக்குப்பதிவு விசாணை நடத்தினர், இன்டர்போலுக்கும் தகவல் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, இன்டர்போல் உதவியுடன் கைது செய்யப்பட்ட நிரவ் மோடி தற்போது லண்டன் சிறையில் உள்ளார். அவரை இந்தியாவுக்கு அழைத்துவரும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.
ஆனால், இந்தியா சென்றால் நியாயமாக விசாரணை நடக்காது ஆதலால் நாடு கடத்த அனுமதிக்கக் கூடாது என்று நிரவ் மோடி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
sbi: எஸ்பிஐ (SBI) வாடிக்கையாளர்களே! உங்களுக்காக வாட்ஸ்அப் பேங்கிங் சேவை தொடக்கம்: வசதிகள் என்ன?
இதை விசாரித்த லண்டன் நீதிபதி, நிரவ் மோடிக்கு நியாயமற்ற விசாரணை நடக்கும் என்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. அவர் மீது இந்திய அதிகாரிகள் கூறிய குற்றச்சாட்டுக்கு ஆதாரங்கள் உள்ளன” என கடந்த பிப்ரவரி மாதம் நடந்த வழக்கு விசாரணையில் நீதிபதி தெரிவித்தார்