income tax return: ஐடி ரிட்டன் தாக்கல் செய்வது எப்படி , யாருக்கு வரிச் சலுகை, எதற்கு வரி? தெரிந்து கொள்ளவோம்

By Pothy Raj  |  First Published Jul 23, 2022, 1:47 PM IST

வருமானவரி செலுத்துவோர், 2021-22ம் நிதி ஆண்டுக்கான ரிட்டன் தாக்கல் செய்யக் கடைசித் தேதி வரும் 31ம் தேதி. இந்தத் தேதிக்குப்பின் நீட்டிப்பு இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.


வருமானவரி செலுத்துவோர், 2021-22ம் நிதி ஆண்டுக்கான ரிட்டன் தாக்கல் செய்யக் கடைசித் தேதி வரும் 31ம் தேதி. இந்தத் தேதிக்குப்பின் நீட்டிப்பு இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடைசி நேரத்தில் பரபரப்புடன் ஐடி ரி்ட்டனை தாக்கல் செய்வதைவிட, ஆன்-லைனில் எவ்வாறு எளிதாகத் தாக்கல் செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம். வருமானவரி செலுத்துவோர் ரிட்டன் தாக்கலில் 3 விதமான ஐடிஆர் இருக்கின்றன என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

Tap to resize

Latest Videos

amazom prime day sale 2022: 400 பிராண்ட், 30,000 பொருட்கள்: 75%வரை தள்ளுபடி: எதை எடுத்தாலு்ம் சலுகைகள்

வரிசெலுத்துவோரின் ஒட்டுமொத்த ஆண்டு வருவாய், ரூ2.50 லட்சத்துக்குள் இருந்தால், அவர்கள் வருமானவரி ரி்ட்டன் தாக்கல் செய்யத் தேவையில்லை. ஆனால், விலக்கு அளிக்கப்பட்டுள்ள வருமானத்துக்கு அதிகமாக வருவாய்ஈட்டும் ஒவ்வொருவரும் கண்டிப்பாக வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்வது அவசியமாகும்.

ஒருநிதியாண்டில் விலக்கு அளிக்கப்பட்ட தொகையைவிட, ஒரு தனிநபரின் வருமானம் இருந்தால், அந்த நபர் வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்ய வேண்டும். ஆண்டு வருமானத்தின் அடிப்படையில் வருமானவரியும் மாறுபடும்.

அதிகபட்ச விலக்கு எவ்வளவு

தனிநபர்கள் ஆண்டுக்கு ரூ.2.50 லட்சம் வரை வருமானம் இருப்பவர்களுக்கு ரிட்டன் தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு

60வயது முதல் 80 வயதுள்ள மூத்த குடிமக்களுக்கு ஆண்டு வருவாய் ரூ.3 லட்சம் வரை விலக்கு

சூப்பர் சீனியர் சிட்டிசன்ஸ் எனப்படும் 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு ரூ.5 லட்சம் வரை விலக்கு

விலக்கு அளிக்கப்பட்ட தொகையைவிட தனிநபர் ஒருவரின் ஆண்டு மொத்த வருமானம்அதிகரித்தால், பல்வேறு வரித்தள்ளுபடிகள் மூலம் வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கு கீழ்வந்தால், வரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.

bank holiday august :18 நாட்கள் வங்கிகள் விடுமுறை: ஆகஸ்ட் மாத பட்டியல் இதோ!

ஆன்லைனில் வருமானவரி ரிட்டன் எவ்வாறு தாக்கல் செய்வது

1.    வருமானவரித்துறையின் அதிகாரபூர்வ இணையதளமான incometaxindiaefiling.gov.in க்கு செல்ல வேண்டும்.

2.    பான் எண்ணை வைத்து லாகின் செய்ய வேண்டும்

3.    ஹோம்பேஜில், டவுன்லோடு பக்கத்தில் எந்த ஆண்டு தாக்கல் செய்கிறோமோ அதை கிளிக் செய்யது, ஐடிஆர்-1 தேர்வு செய்ய வேண்டும். அதன்பின் பதிவிறக்கம் செய்ய  வேண்டும்.

4.    எக்ஸெல் ஷீட்டில் ஃபார்ம் 16 கேட்டுள்ளபடி தேவையான விவரங்களை நிரப்ப வேண்டும்.

5.    அனைத்து விதமான விவரங்களையும் குறிப்பிட்டு, சேவ் செய்ய வேண்டும்.

6.    அதன்பின் சப்மிட் ரிட்டன் கிளிக் செய்து, எக்ஸெல் ஷீட்டை பதிவேற்றம் செய்யலாம்.

7.    உங்களின் டிஜிட்டல் கையொப்பத்தை பதிவேற்ற வேண்டும். 

8.    அனைத்தும் முடிந்தபின் ரிட்டன் தாக்கல் முடிந்ததாக செய்தி வரும். 

9.    ஐடிஆர் ஆய்வு முடந்தது குறித்த செய்தி உங்களின் அதிகாரபூர்வ மெயுல்குக தகவல் வருமானவரித்துறையிடம் இருந்து வரும்.

itr filing date: வருமான வரி ரிட்டன் தாக்கலுக்கு காலக் கெடு நீட்டிக்கப்படுமா? மத்திய அரசு பதில்

எதற்கு வரி

1.    மாத வருமானம் வரிவிதிப்புக்குள் வந்தால் வரி
2.    வீட்டு, கட்டிடங்கள் மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு வரி
3.    வணிகம், சுயதொழில் செய்தால், விலக்கிற்கு அதிகமாக சம்பாதித்தால் வரி
4.    பங்குச்சந்தையிலிருந்து கிடைக்கும் ஆதாயத்துக்கும், முதலீ்ட்டுக்கும் வரி
5.    பிற இனங்களில் செய்துள்ள முதலீட்டுக்கும் வரி


 

click me!