அமேசான் இந்தியா-வின்(Amazon India) பிரைம் டே(Prime Day sale) இன்று தொங்கியுள்ளது, இது நாளை நள்ளிரவு(24ம்தேதி) முடிந்துவிடும்.
அமேசான் இந்தியா-வின்(Amazon India) பிரைம் டே(Prime Day sale) இன்று தொங்கியுள்ளது, இது நாளை நள்ளிரவு(24ம்தேதி) முடிந்துவிடும்.
400 பிராண்ட், 30ஆயிரம் புதிய பொருட்களுக்கு ஏராளமான தள்ளுபடிகள் தரப்பட்டுள்ளன. 75 சதவீதம் வரை பொருட்களுக்கு தள்ளுபடி வழங்கப்படுகிறது.
bank holiday august :18 நாட்கள் வங்கிகள் விடுமுறை: ஆகஸ்ட் மாத பட்டியல் இதோ!
12 சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் தங்களின் எலெக்ட்ரானிக் பொருட்களையும், பேஷன் பொருட்களையும், நகைகளையும், விற்பனை செய்ய அமேசான் இந்தியா தளம் ஏற்படுத்தி வருகிறது.
அமேசான் இந்தியாவின் இயக்குநர் அக்ஸய் சஹி கூறுகையில் “ இந்தியாவில் எங்களின் 6-வது ப்ரைம் டே விற்பனை நடக்கிறது. மிகப்பெரிய அளவில், சிறப்பாக, யாரும் வழங்காத விலையில் பொருட்கள் கிடைக்கும்.
பிரைம் உறுப்பினர்களுக்கு நம்ப முடியாத தள்ளுபடி விலையில் பொருட்கள் கிடைக்கும். சில பொருட்களுக்கு 75 சதவீதம் வரை தள்ளுபடி இருக்கிறது. ஒட்டுமொத்தமாக 400 பிராண்ட்களில், 30ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய பொருட்கள் விற்பனைக்கு வருகின்றன” எனத் தெரிவித்தார்
வருமான வரி ரிட்டன் தாக்கலுக்கு காலக் கெடு நீட்டிக்கப்படுமா? மத்திய அரசு பதில்
பிரைம் வாடிக்கையாளர்களுக்கு 75 சதவீதம் வரை விலைத்தள்ளுபடி தரப்பட்டுள்ளது. இன்டெல், லெனோவோ, போட், ஹெச்பி, எல்ஜி, கேனன், நாய்ஸ், உள்ளிட்ட பல்வேறு டாப் பிராண்ட்களில் இருந்து ஆடியோ, லேப்டாப், கேமிரா, டேப்ளட், பிசிபோன்றவை அதிகமான தள்ளுபடியுடன் விற்பனைக்கு வந்துள்ளன
24ம் தேதிநள்ளிரவு(நாளை)வரை பிரைம் சேல் இருக்கும். எஸ்பிஐ,ஐசிஐசிஐ கிரெடிட், டெபிட் கார்டு மூலம் பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக 10% தள்ளுபடி, எஸ்பிஐ கிரெடிட் கார்டு, ஐசிஐசிஐ கிரெடிட் கார்டுகளில் பொருட்கள் வாங்கும்போது அதை இஎம்ஐ மூலம் எளிதாக மாற்றும் வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.
பறக்கப்போகுது ஆகாசா ஏர்(akasa air) ! ஆகஸ்ட் 7 முதல் சேவைத் தொடக்கம்: கட்டணம் எவ்வளவு?
பேஷன் பொருட்கள், ஆடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள், சமையலறைப் பொருட்கள் என ஏராளமான பொருட்கள் விற்பனைக்கு வந்துள்ளன. இந்தப் பொருட்களுக்கு ப்ரைம் சேலில் அதிகபட்சமாக 75 சதவீதம் வரை தள்ளுபடி தரப்படுகிறது