elon musk: elon: sergey brin: எலான் மஸ்க் மன்மத லீலைகள்: கூகுள் நிறுவனர் மனைவியுடன் கள்ளத் தொடர்பா?

By Pothy Raj  |  First Published Jul 25, 2022, 10:27 AM IST

கூகுள் நிறுவனத்தின் துணை நிறுவனர் செர்ஜி பிரின் மனைவியுடன் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்கிற்கு கள்ளத்தொடர்பு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


கூகுள் நிறுவனத்தின் துணை நிறுவனர் செர்ஜி பிரின் மனைவியுடன் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்கிற்கு கள்ளத்தொடர்பு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

எலான் மஸ்கிற்கும், செர்ஜிபிரின் மனைவி நிகோல் சனாஹன் இடையே தொடர்பு இருந்தது என்று தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

என் விந்தணுவுக்கு டிமான்ட் அதிகம்: எலான் மஸ்கை உருவாக்கியதே நான்தான்: சர்ச்சையில் எரோல் மஸ்க்

கூகுள் இணை நிறுவனர் செர்ஜி பிரிவின், அவரின் மனைவி நிகோல் ஷனாஹன் இருவரும் கடந்த 2021, டிசம்பர் 31ம் தேதி மனக்கசப்பு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள். ஜெர்ஜி பிரிவின் விவாகரத்துக் கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இந்நிலையில் தி வால் ஸ்டீர்ட் ஜர்னல் நாளேடு வெளியிட்ட செய்தியில் “ 2021, டிசம்பரில்தான் எலான் மஸ்கிற்கும், நிகோலுக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டது. மியாமி நகரில் ஆர்ட் பேஸல் என்ற நிகழ்ச்சி நடந்தது. உலகம் முழுவதிலிருந்தும் கோடீஸ்வரர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியாகும்.

இந்த விருந்து நிகழ்ச்சியில் நிகோலிடம் மஸ்க் அத்துமீறியுள்ளார், இது செர்ஜி பிரிவினுக்கு தெரியவே, பிரினிடம் மஸ்க் முழங்காலிட்டு மன்னிப்புகோரி தப்பித்தார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

 

This is total bs. Sergey and I are friends and were at a party together last night!

I’ve only seen Nicole twice in three years, both times with many other people around. Nothing romantic.

— Elon Musk (@elonmusk)

எலான் மஸ்க் மீது ட்விட்டர் நிறுவனம் வழக்கு: அக்டோபரில் விசாரணை : மஸ்க் கோரிக்கை நிராகரிப்பு

அதுமட்டுமல்லாமல் எலான் மஸ்க் டெஸ்கா கார் தயாரித்ததும் முதல் காரை செர்ஜி பிரினுக்கு வழங்கினார். கடந்த 2008ம் ஆண்டு அமெரிக்காவில் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது, டெஸ்லா நிறுவனத்தை காப்பாற்றியது செர்ஜி பிரின்தான். 5 லட்சம் டாலர்களை எலான் மஸ்கிற்கு செர்ஜி பிரின் வழங்கி உதவி செய்தார்” எனத் தெரிவித்திருந்தது.

இந்த செய்தியை எலான் மஸ்க் திட்டவட்டமாக மறுத்துள்ளார். எலான் மஸ்க் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ இது ஒட்டுமொத்தமாக ஆதாரமற்ற செய்தி. செர்ஜியும் , நானும் நண்பர்கள். கடந்த இரவில்கூட இருவரும் பார்டியில் ஒன்றாக இருந்தோம். செர்ஜி மனைவி நிகோலை கடந்த 3 ஆண்டுகளில் இரு முறை மட்டும்தான் பார்த்திருக்கிறேன். அந்த இருமுறையிலும் நாங்கள் அனைவரும் இருக்கும்போதுதான் சந்தித்தோம். எங்களுக்குள் எந்தவிதமான ரகசியத் தொடர்போ, கள்ளத்தொடர்போ இல்லை” எனத் தெரிவித்தார்.

நல்ல குடும்பம்ப்பா! 35 வயது வளர்ப்பு மகளுடன் குழந்தை பெற்ற 76வயதான எலான் மஸ்க் தந்தை

எலான் மஸ்க் தனது தோழியும் பாடகியுமான கிரிம்ஸுடன் உறவை சமீபத்தில் முறித்துக்கொண்டார். இருவருக்கும் 2 குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையே எலான் மஸ்க் தனது நியூராலிங்க் நிறுவனத்தில் பணியாற்றிய ஷிவன் ஜில்ஸுடன் சேர்ந்து இரட்டை குழந்தை பெற்றதும் சமீபத்தில் அவரே தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!