ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் மெட்டா நிறுவனமும் இணைந்து ஜியோ மார்ட் சேவையை வாட்சப்பில் கொண்டு வர புதிய திட்டமிட்டுள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பின்படி, ‘இந்தியாவின் டிஜிட்டல் மாற்றத்தை விரைவுபடுத்துவதற்கும், அனைத்து அளவிலான மக்களுக்கும் வணிகங்களுக்கும் புதிய வழிகளில் இணைவதற்கும், பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதற்கும் மெட்டா நிறுவனமும், ஜியோ நிறுவனமும் சேர்ந்து ஜியோ மார்ட் சேவையை வாட்சப்பில் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
இதன் மூலம், ஜியோமார்ட் நாடு முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான வணிகங்கள் தங்கள் நுகர்வோருடன் இணையும் விதத்தில் புரட்சியை ஏற்படுத்தும் என்றும், அதே நேரத்தில் மக்களின் ஷாப்பிங் அனுபவத்திற்கு எளிமையான வசதியைக் கொண்டுவரும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு..நிதியே இல்ல.. இதுல 80 கோடிக்கு பேனா அவசியமா? எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!
மெட்டாவின் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான மார்க் ஜுக்கர்பெர்க் இதுபற்றி பேசிய போது, ‘ இந்தியாவில் ஜியோமார்ட் உடன் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறோம். இது வாட்சப்பில் எங்களின் முதல் எண்ட்-டு-எண்ட் ஷாப்பிங் அனுபவம், மக்கள் இப்போது ஜியோமார்ட்டிலிருந்து மளிகைப் பொருட்களை நேரடியாக அரட்டையில் வாங்கலாம்’ என்று கூறினார்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் முகேஷ் அம்பானி இதுகுறித்து பேசிய போது, உலகின் முன்னணி டிஜிட்டல் சமூகமாக இந்தியாவை முன்னெடுப்பதே எங்கள் பார்வையாக இருக்கிறது. 2020 ஆம் ஆண்டில் ஜியோ இயங்குதளங்களும் மெட்டாவும் எங்கள் கூட்டணியை அறிவித்தோம்’ என்று கூறினார்.
மேலும் செய்திகளுக்கு..வங்கியில் ஜீரோ பேலன்ஸா; கவலையை விடுங்க உங்களுக்கு கிடைக்கும் ரூ. 10000 கடன்; என்ன செய்யணும்?
மெடா (Meta) நிறுவனம் ‘இந்தியாவுக்கான எரிபொருள் 2021” என்ற நிகழ்ச்சியை இன்று இணைய வழியில் நடத்தியது. அதில், வாட்ஸ் அப் வாயிலாக ஜியோ மார்ட்டில் காய்கறி, மளிகை பொருட்களை ஆர்டர் செய்வது தொடர்பாக இருவரும் செயல்முறை ஆற்றினர். வாட்ஸ் அப் செயலில் tap and chat என்ற வசதி மூலம் வாடிக்கையாளர்கள் மளிகை பொருட்களை ஆர்டர் செய்யலாம்.
டெலிவரி முற்றிலும் இலவசம் மற்றும் குறைந்தபட்ச ஆர்டர் தொகை என எதுவும் கிடையாது. வாடிக்கையாளர்கள் வாட்ஸ் அப் செயலி மூலம் தங்களது ஷாப்பிங் பட்டியலை நிரப்பிக்கொள்ளலாம். ஜியோமார்ட் செயலி மூலமோ கேஷ் ஆன் டெலிவரி மூலமாக பொருட்களுக்கான தொகையை செலுத்தலாம்’ என்று கூறினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு..செப்டம்பர் 8 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !