RIL: jio5g: mukesh ambani:5ஜி சேவைக்காக ரூ.2 லட்சம் கோடி: 2.23 லட்சம் பேருக்கு வேலை: முகேஷ் அம்பானி பெருமிதம்

By Pothy RajFirst Published Aug 29, 2022, 3:52 PM IST
Highlights

இந்தியாவில் 5ஜி சேவையை வழங்குவதற்காக ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.2 லட்சம் கோடி முதலீடு செய்துள்ளது. தீபாவளிக்குள் மெட்ரோ நகரங்களில் 5ஜிசேவை தொடங்கப்படும் என்று ரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிபர் முகேஷ் அம்பானி தெரிவித்தார்.

இந்தியாவில் 5ஜி சேவையை வழங்குவதற்காக ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.2 லட்சம் கோடி முதலீடு செய்துள்ளது. தீபாவளிக்குள் மெட்ரோ நகரங்களில் 5ஜிசேவை தொடங்கப்படும் என்று ரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிபர் முகேஷ் அம்பானி தெரிவித்தார்.

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின்(RIL) 45-வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் இன்று காணொலி வாயிலாக தொடங்கியது. முதலீட்டாளர்கள், பங்குதாரர்கள் மத்தியில் ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி பேசியதாவது:

தீபாவளிக்குள் ரிலையன்ஸ் ஜியோ 5ஜி சேவை: முகேஷ் அம்பானி அறிவிப்புகளின் முக்கிய அம்சங்கள்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்தியாவில் 5ஜி சேவையை தொடங்குவத்காக ரூ.2 லட்சம் கோடி முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது. நாட்டில் இதுவரைஇல்லாத அதிகவேகமான இணையதள சேவையை நமது நாட்டுக்கு ஏற்றார்போல் வழங்க ஜியோ தயாராகி வருகிறது.

அடுத்த இரு மாதங்களுக்குள், அதாவது தீபாவளிப் பண்டிகைக்குள் டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா உள்ளிட்ட மெட்ரோ நகரங்களில் 5ஜி சேவை தொடங்கப்படும். 2023ம் ஆண்டு டிசம்பர்மாதத்துக்குள் ஒவ்வொரு தாலுகா, நகரங்களிலும் ஜியே 5ஜி சேவை விரிவுபடுத்தப்படும்.

5ஜி ஏலத்தில் ரூ.88,078 கோடிக்கு ஸ்பெக்ட்ராம் அலைக்கற்றை ரிலையன்ஸ் வாங்கியுள்ளது. டிஜிட்டல் இணைப்பிலும் 5ஜி நெட்வொர்க்கிலும் இந்தியாவை சர்வதேச அளவில் முன்னணியில் கொண்டுவருவோம். மிகக்குறுகிய காலத்தில் 5ஜி சேவையைத் தொடங்க ரிலையன்ஸ் நிறுவனம் தயாராகி வருகிறது. 

வங்கியில் ஜீரோ பேலன்ஸா; கவலையை விடுங்க உங்களுக்கு கிடைக்கும் ரூ. 10000 கடன்; என்ன செய்யணும்?

ஜியோ நிறுவனம் இந்தியாவில் 4ஜி நெட்வொர்க்கில் சந்தாதாரர்கள் எண்ணிக்கையில் வலிமையானதாக விளங்குகிறது. மாதத்துக்கு சராசரியாக 20 ஜிபியை ஜியோ வாடிக்கையாளர்கள் பயன்படுத்துகிறார்கள். கடந்த ஓர்ஆண்டில் மட்டும் ரிலையன்ஸ் நிறுவனம். 2.32 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளது.
இவ்வாறு முகேஷ் அம்பானி தெரிவித்தார்

click me!