Yamaha hybrid scooter : ஹைப்ரிட் மாடல்களுக்கு அசத்தல் கேஷ்பேக் வழங்கும் யமஹா

Nandhini Subramanian   | Asianet News
Published : Feb 10, 2022, 11:53 AM ISTUpdated : Feb 10, 2022, 12:39 PM IST
Yamaha hybrid scooter : ஹைப்ரிட் மாடல்களுக்கு அசத்தல் கேஷ்பேக் வழங்கும் யமஹா

சுருக்கம்

யமஹா நிறுவனம் இந்தியாவில் தனது ஹைப்ரிட் ஸ்கூட்டர் மாடல்களுக்கு சிறப்பு கேஷ் பேக் சலுகைகளை அறிவித்துள்ளது

யமஹா மோட்டார் இந்தியா குழுமம் தனது ஹைப்ரிட் ஸ்கூட்டர் மாடல்களான ஃபசினோ 125 Fi ஹைப்ரிட் மற்றும் RayZR 125 Fi ஹைப்ரிட் மீது சிறப்பு கேஷ்பேக் சலுகையை அறிவித்து இருக்கிறது. இந்த சலுகைகள் பிப்ரவரி மாதம் முழுவதும் செல்லுபடியாகும். தமிழகத்தில் யமஹா ஃபசினோ 125 Fi ஹைப்ரிட் மற்றும் RayZR 125 Fi ஹைப்ரிட் மாடல்களுக்கு ரூ. 5 ஆயிரம் வரையிலான கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

யமஹா ஹைப்ரிட் ஸ்கூட்டர் மாடல்களில் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு பொருந்தும் , ஏர் கூல்டு, ஃபியூவல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட (Fi), 125-சிசி புளூ கோர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 8.2 பி.எஸ். பவரை 6,500 ஆர்.பி.எம்.-லும் மற்றும் அதிகபட்சமாக 10.3 நியூட்டன் மீட்டர் டார்க்கை 5,000 ஆர்.பி.எம்.-லும்  வெளிப்படுத்துகிறது. 

இத்துடன்  ஹைப்ரிட் பவர் அசிஸ்ட் தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்மார்ட் மோட்டார் ஜெனரேட்டர் (SMG) சிஸ்டம், சைலண்ட் என்ஜின் ஸ்டார்ட் சிஸ்டம் மற்றும் ஆட்டோமேட்டிக் ஸ்டாப் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஸ்கூட்டர் மாடல்களில் சைட் ஸ்டாண்ட் என்ஜின் கட் ஆஃப் ஸ்விட்ச் பொருத்தப்பட்டுள்ளது. இது இந்தியாவில் உள்ள அனைத்து யமஹா இரு சக்கர வாகனங்களிலும் கட்டாய அம்சமாக வழங்கப்பட்டு வருகிறது.

யமஹா நிறுவனம் இந்திய சந்தையில் தற்போது YZF-R15 வி4.0 (155சிசி) ABS, YZF-R15M (155cc) ABS, YZF-R15 வி 3.0 (155cc) ABS, YZF-R15S வி3.0 (155cc)ABS, FZ 25 (249cc) ABS, FZS 25 (249cc)ABS, FZ-S FI (149cc) ABS, FZ-FI (149cc) ABS, FZ-X (149cc) மாடல்களையும்,  ABS வசதியுடன் ஏரோக்ஸ் (155cc), ஃபசினோ 125 FI ஹைப்ரிட் (125cc), RayZR 125 FI ஹைப்ரிட் (125cc), ஸ்ட்ரீட் ரேலி 125 FI ஹைப்ரிட் (125cc) போன்ற மாடல்களையும் விற்பனை செய்து வருகிறது.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

அமெரிக்கா, சீனாவுக்கு இணையாக இந்தியா வளர 30 ஆண்டுகள் ஆகலாம்: ரகுராம் ராஜன்
IndiGo: 10,000 கார்கள், 9,500 ஹோட்டல் அறைகள், ரூ.827 கோடி ரீஃபண்ட்... மீண்டும் மீண்டு வந்த இண்டிகோ!