
குறுகிய காலக் கடனுக்கான வட்டிவீதத்திலும், வங்கிகளுக்கான ரிவர்ஸ் ரெப்போ ரேட் வீதத்திலும் எந்தவிதத்திலும் மாற்றம் செய்யாமல் ரிசர்வ் வங்கி தனது நிதிக்கொள்கையில் அறிவித்துள்ளது.
2 மாதங்களுக்கு ஒரு முறை ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கை அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. கொரோனா பெருந்தொற்றையடுத்து, கொண்டுவரப்பட்ட லாக்டவுனில், அதாவது, 2020-ம் ஆண்டு மே 22-ம் தேதி வட்டி வீதம் வரலாற்றில் இல்லாத அளவு குறைக்கப்பட்டது. அதன்பின் 9 முறை நிதிக்கொள்கைக் குழுக்கூட்டம் நடந்துள்ளது. இதுவரை வட்டி வீதம் மாற்றப்படவில்லை. தற்போது குறுகியகாலக் கடனுக்கான வட்டி வீதம் 4 % என்றும், ரிவர்ஸ் ரெப்போ 3.5% என்றும் நீடிக்கிறது.
இந்நிலையில் கடந்த 2 நாட்களாக ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கைக் குழுக் கூட்டம் நடந்தது. ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் தலைமையில் 6 உறுப்பினர்கள் கொண்ட கூட்டத்தில் கடனுக்கான வட்டிவீதம்(ரெப்போரேட்), வங்கிகளுக்கு கடன் வழங்கும் ரிவர்ஸ் ரெப்போ ரேட் வீதத்தில் எந்தவிதமான மாற்றமும் செய்ய வேண்டாம் என்று முடிவு எடுக்கப்பட்டது.
நிதிக்கொள்கைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய அம்சங்கள்
1. வங்கிகளில் வழங்கப்படும் குறுகியகாலக் கடனுக்கான ரெப்போ ரேட் வீதம் மாற்றமில்லாமல் 4% என்ற அளவில் தொடர்கிறது
2. வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் வைத்திருக்கும் டெபாசிட்களுக்குத் தரப்படும் வட்டி அதாவது ரிவர்ஸ் ரெப்போ ரேட் வீதமும் மாற்றமில்லாமல் 3.35% என்ற ரீதியில் தொடர்கிறது
3. 2022-23ம் ஆண்டில் இந்தியாவின் பொருளதார வளர்ச்சி7.8% வளர்ச்சி அடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது
4. 2022-23ம் ஆண்டில் நாட்டில் சில்லரைப் பணவீக்கம் 4.5 %இருக்கும். வரும் நிதியாண்டின் முதல் காலாண்டில் 4.9%, 2-வது காலாண்டில் 5 சதவீதமாகவும் இருக்கும்.
5. பொதுத்துறை வங்களின் வரவு செலவு அறிக்கை கடந்த ஆண்டைவிட வலுவாக, ஸ்திரமாக இருக்கிறது
6. இ-ருபி டிஜிட்டல் வவுச்சரில் அதிகபட்சமாக தற்போது ரூ.10ஆயிரம் வரை வைக்க முடியும்.அந்த அளவு ரூ.ஒருல ட்சமாகஉயர்த்தப்பட்டுள்ளது.
7. ஒமைக்ரான் பரவலால் பொருளாதார வளர்ச்சியில் சிறிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பொருட்களுக்கான தேவையிலும் சிறிய அளவிலான தேக்கம் ஏற்பட்டது.
8. நடப்பு நிதியாண்டில் பொருளாதாரவளர்ச்சி 9.2 % இருக்கும் என்று கணி்க்கப்பட்டுள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.