RBI Monetary Policy LIVE Updates: 10-வது முறையாக வீட்டு,வாகனக் கடனுக்கு வட்டிக் குறைப்பில்லை: காரணம் இதுதான்

By manimegalai aFirst Published Feb 10, 2022, 11:37 AM IST
Highlights

வீட்டு, வாகனக் கடனுக்கான வட்டிவீதத்தை தொடர்ந்து 10-வது முறையாக மாற்றாமல் ரிசர்வ் வங்கி தனது நிதிக்கொள்கை அறிவிப்பில் இன்று அறிவித்தது. 

வீட்டு, வாகனக் கடனுக்கான வட்டிவீதத்தை தொடர்ந்து 10-வது முறையாக மாற்றாமல் ரிசர்வ் வங்கி தனது நிதிக்கொள்கை அறிவிப்பில் இன்று அறிவித்தது. 

2 மாதங்களுக்கு ஒரு முறை ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கை அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. கொரோனா பெருந்தொற்றையடுத்து, கொண்டுவரப்பட்ட லாக்டவுனில், அதாவது, 2020-ம் ஆண்டு மே 22-ம் தேதி வட்டி வீதம் வரலாற்றில் இல்லாத அளவு குறைக்கப்பட்டது. 

அதன்பின் 9 முறை நிதிக்கொள்கைக் குழுக்கூட்டம் நடந்துள்ளது. இதுவரை வட்டி வீதம் மாற்றப்படவில்லை. தற்போது குறுகியகாலக் கடனுக்கான வட்டி வீதம் 4 % என்றும், ரிவர்ஸ் ரெப்போ 3.35% என்றும் நீடிக்கிறது.

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கைக் குழுக் கூட்டம் நடந்தது. ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் தலைமையில் 6 உறுப்பினர்கள் கொண்ட கூட்டத்தில் கடனுக்கான வட்டிவீதம்(ரெப்போரேட்), வங்கிகளுக்கு கடன் வழங்கும் ரிவர்ஸ் ரெப்போ ரேட் வீதத்தில் எந்தவிதமான மாற்றமும் செய்ய வேண்டாம் என்று 5:1 என்ற ரீதியில்  எடுக்கப்பட்டது.

ரிசர்வ் வங்கி நிதிக்கொள்கையில் ரெப்போ ரேட் வீதமும், ரிவர்ஸ் ரெப்போ ரேட் வீதமும் மாற்றப்படலாம் என்று பெருவாரியான சந்தை வல்லுநர்களும், பொருளாதார அறிஞர்களும் கணித்திருத்திருந்தனர். ஏனென்றால், ரெப்போ ரேட் வீதத்தில் சிறிய மாற்றத்தை ரிசர்வ் வங்கி செய்தாலும், அது நுகர்வோர்களின் வீட்டுக்கடன், வாகனக் கடனில் எதிரொலிக்கும். ஆனால், தொடர்ந்து 10-வது முறையாக ரெப்போ ரேட்டை ரிசர்வ் வங்கி மாற்றாமல் 4% சதவீதமாகவே வைத்திருக்கிறது

கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி முதல் வங்கிகள் வீ்ட்டுக்கடன், வாகனக் கடன் வழங்கும்போது, அது வெளிப்புற பெஞ்ச்மார்க் அடிப்படையில் இருக்க வேண்டும் என்றுஅறிவித்தது. அதாவது வங்கிகளின் ரெப்போரேட் அடிப்படையில்தான் கடனுக்கான வட்டிவீதம் இருக்க வேண்டும். 

தற்போது நாட்டில் பணவீக்கத்தின் அளவு 5.6 சதவீதமாக இருக்கிறது. இதை அதிகபட்சமாக 6% வரை பராமரிக்க ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கைக்குழு திட்டமிட்டுள்ளது. 

இப்போதுள்ளநிலையில் ரெப்போ ரேட் வீதத்தை குறைத்தால், நிச்சயமாக அது பணவீக்கத்தை மேலும் அதிகரிக்கும். ஏற்கெனவே விலைவாசி உயர்வால் மக்கள் சிரமப்பட்டு வரும் நிலையில் கடனுக்கான வட்டி வீதக் குறைப்பு வீட்டுக்கடன், வாகனக் கடன் வாங்கியவர்களுக்கு வேண்டுமானால் சாதகமாக இருக்கும். ஆனால், பொருளதாரத்தில் பணப்புழக்கத்தை அதிகப்படுத்தி, பணவீக்கத்தை மேலும் உயர்த்தி ரிசர்வ் வங்கிக்கு நெருக்கடியாக மாறும். அதனால்தான் வட்டிவீதத்தில் எந்தவிதத்திலும் குறைக்கவில்லை, பணவீக்கமும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் இருப்பதால், எந்தவிதமான மாற்றமும் செய்யவில்லை.

அதுமட்டுமல்லாமல் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிக்க வேண்டும். இப்போதுள்ள நிலையில் 4 சதவீதம் வட்டி  என்பதே போதுமானது, மிகக்குறைவான வட்டியாகும். இதற்கு மேல் குறைத்தால் அது பணவீக்கத்தைத் தூண்டிவிடும். அதேநேரம் அதிகரித்தால், பொருளாதாரம் தற்போது மீண்டெழுந்துவரும் நிலையில் அதை மேலும் சிரமத்தில் தள்ளிவிடும். இதன் காரணமாக ரெப்போ ரேட் ஏதும் மாற்றப்படவில்லை.

 

click me!