work from home jobs: ஆபிஸ் வரச்சொன்னது குத்தமாயா! 800 ஊழியர்கள் திடீர் ராஜினாமா

By Pothy RajFirst Published May 13, 2022, 2:16 PM IST
Highlights

work from home jobs : வீ்ட்டிலிருந்து வேலை பார்த்தது போதும், அலுவலகத்துக்கு நேரடியாகவந்து வேலைபாருங்கள் என்று நிறுவனம் கேட்டதற்கு 800 ஊழியர்கள் திடீரென ராஜினாமா செய்துள்ளனர். 

வீ்ட்டிலிருந்து வேலை பார்த்தது போதும், அலுவலகத்துக்கு நேரடியாகவந்து வேலைபாருங்கள் என்று நிறுவனம் கேட்டதற்கு 800 ஊழியர்கள் திடீரென ராஜினாமா செய்துள்ளனர். 

கொரோனா காலத்தில் அலுவலகம் வரமுடியாத காரணத்தால் வீட்டிலிருந்தே பெரும்பாலும் பணிபுரிந்தனர். தற்போது தொற்றுபரவல் குறைந்தநிலையில் இயல்புவாழ்கைக்கு பல நிறுவனங்கள் திரும்புகின்றன. பல எம்என்சிகள் ஊழியர்களை கட்டாயப்படுத்தாமல் விருப்பம் இருப்போர் அலுவலகம் வந்து பணிபுரியலாம், வாரத்துக்கு 3 நாட்கள் என்று சலுகை காட்டுகின்றன.

சில பன்னாட்டு நிறுவனங்கள் ஊழியர்களை முழுமையாக அலுவலகத்துக்கு அழைத்துள்ளன, பல நிறுவனங்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமதித்து வருகின்றன.

இந்நிலையில் ஒயிட்ஹாட் ஜூனியர் என்ற ஸ்டார்ட் அப்நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தைத்தான்2020ம் ஆண்டில் பைஜூஸ் நிறுவனம் விலைக்கு வாங்கியது.

கொரோனா தொற்று பரவல் குறைந்த நிலையில் வீட்டிலிருந்து பணிபுரிந்தது போதும் ஊழியர்கள் அலுவலகத்துக்கு நேரடியாகவந்து பணிபுரிய வேண்டும், ஒருமாதம் வரை காலஅவகாசம் எடுத்துக்கொள்ளலாம் என்று நிறுவனம் உத்தரவி்ட்டது. கடந்த மார்ச் 18ம் தேதி இந்நிறுவனம் உத்தரவிட்டு ஏப்ரல் 18ம் தேதிக்குள் அலுவலகத்துக்கு ஊழியர்கள் வர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டது.

ஆனால் வீட்டிலிருந்து பணிபுரிந்து பழகியதால், அலுவலகத்துக்கு வருவதற்கு மனமின்றி ஊழியர்கள் படிப்படியாக பணிவிலகினர். இந்த எண்ணிக்கை ஒரு மாதத்துக்குள் நூற்றுக்கணக்காக பெருகியது. 

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த ஊழியர்களில் 800 பேர் திடீரென ராஜினாமா செய்துள்ளனர். வீட்டிலிருந்துதான் பணிபுரிய விருப்பம் அலுவலகத்துக்கு வரமுடியாது எனத் தெரிவித்து ஊழியர்கள வேலையை உதறியுள்ளனர்.

இன்னும் ஏராளமான ஊழியர்கள் வரும் மாதங்களில் வேலையிலிருந்து விலகவும் ராஜினாமா கடிதம் அளித்துள்ளனர். இதனால் வரும்நாட்களில் வேலையிலிருந்து விலகுவோர் எண்ணிக்கை அதிகரிக்கும்.

வேலையிலிருந்து விலகியஊழியர் ஒருவர் கூறுகையில் “ எனக்கு குழந்தைகள் உள்ளனர், வயதான, நோய்வாய்பட்ட பெற்றோர் உள்ளனர், பல்வேறு பொறுப்புகள் உள்ளன. இந்த நேரத்தில் குறுகிய இடைவெளியில் ஊழியர்களை அலுவலகத்துக்குஅழைப்பது சரியல்ல” எனத் தெரிவி்த்தார்

மற்றொரு ஊழியர் கூறுகையில் “ அலுவலகத்துக்கு திரும்ப வந்து பணியாற்றுவதில் ஊதியம் சிக்கலாகஇருக்கி்றது. கடந்த 2 ஆண்டுகளாக வீட்டிலிருந்தே பணியாற்றியபோது, ஊதியம் உயர்த்தப்படவில்லை. அலுவலகத்துக்கு வரும்போது ஊதியம் சீரமைக்கப்பட்டு உயர்த்தப்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்

click me!