ஏடிஎம்மில் இத்தனை வசதிகளா? நாள் ஒன்றுக்கு எவ்வளவு பணம் அனுப்பலாம் தெரியுமா?

By Dhanalakshmi G  |  First Published Oct 28, 2024, 1:35 PM IST

பணம் எடுப்பது மட்டுமல்லாமல், ஏடிஎம் பயன்படுத்தி பணப் பரிமாற்றம், பில் பேமென்ட், இன்சூரன்ஸ் பிரீமியம் செலுத்துதல், செக் புக் கோரிக்கை, மொபைல் பேங்கிங் ஆக்டிவேட் எனப் பல வேலைகளைச் செய்யலாம். 


டிஎம் என்றாலே பணம் எடுப்பதற்கு மட்டுமே என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோம். ஆனால், இந்த வங்கி ஏடிஎம் வைத்து பத்து வேலைகளை முடிக்கலாம் என்பது உங்களுக்கு தெரியுமா?

பணம் எடுக்கலாம்:
ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்கலாம். உதாரணத்திற்கு டெபிட் கார்டு பயன்படுத்தும்போது பின் நம்பர் ஞாபகம் வைத்திருக்க வேண்டும். ஏடிஎம்மில் நமது கார்டை செலுத்துவதன் மூலம் பணம் எடுக்கலாம். அதேபோல் பணம் டெபாசிட் செய்யலாம்.

Latest Videos

undefined

பேலன்ஸ் பார்க்கலாம்:
நமது அக்கவுண்டில் பேலன்ஸ் எவ்வளவு இருக்கிறது என்று பார்க்கலாம். பலரும் இதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். வங்கிக்கு நீங்கள் செல்ல வேண்டியதில்லை. கடந்த பத்து  நாட்களில் எந்தளவிற்கு பண பரிமாற்றம் செய்து இருக்கிறீர்கள் என்பதை அறியலாம். இது ஒரு மினி ஸ்டேட்மென்ட் ஆக இருக்கும்.

மற்றொரு கார்டுக்கு பண பரிமாற்றம்:
எஸ்பிஐ கொடுத்து இருக்கும் தகவலின்படி, ஒரு எஸ்பிஐ அக்கவுன்டில் இருந்து மற்றொரு எஸ்பிஐ அக்கவுன்டுக்கு டெபிட் கார்டு மூலம் ரூ. 40,000 தினமும் அனுப்பலாம். இதற்கு எந்தக் கட்டணமும் எஸ்பிஐ வங்கி வசூலிப்பதில்லை. உங்களிடம் உங்களது ஏடிஎம் கார்டு, பின் நம்பர் அத்துடன் யாருக்கு பணம் அனுப்ப இருக்கிறீர்களோ அவர்களது அக்கவுன்ட் விவரங்கள் இருக்க வேண்டும்.

கிரடிட் கார்டு பேமென்ட்:
ஏடிஎம் மூலம் எந்த விசா கார்டின் பேலன்சையும் செலுத்தலாம். இதற்கு உங்களிடம் கார்டு இருக்க வேண்டும். பின் நம்பர் ஞாபகமாக வைத்திருக்க வேண்டும்.

ஒரு அக்கவுன்டில் இருந்து இன்னொரு அக்கவுன்ட் 
ஏடிஎம் மூலம் ஒரு அக்கவுன்டில் இருந்து இன்னொரு அக்கவுன்ட்டுக்கு பணத்தை அனுப்பலாம். ஒரு ஏடிஎம் கார்ட்டில் இருந்து 16 அக்கவுன்ட்களை லிங்க் செய்யலாம். இதற்குப் பின்னர் ஏடிஎம் சென்று எந்த பயமும் இன்றி பணத்தை அனுப்பலாம்.

இன்சூரன்ஸ் பிரீமியம்:
ஏடிஎம் பயன்படுத்தி இன்சூரன்ஸ் பிரீமியம் செலுத்தலாம். எல்ஐசி, ஹெச்டிஎப்சி லைப், எஸ்பிஐ லைப் ஆகியவை வங்கிகளுடன் இணைப்பை வைத்துள்ளன. இதன் கீழ் நீங்கள் இன்சூரன்ஸ் பிரீமியம் செலுத்தலாம். நீங்கள் மறக்காமல் வைத்திருக்க வேண்டியது இன்சூரன்ஸ் பாலிசி நம்பர் மற்றும் ஏடிஎம் கார்டு, பின் நம்பர்.

செக் புக்:
உங்களது செக் புக் தீர்ந்துவிட்டது என்று கவலைப்பட வேண்டாம். ஏடிஎம் மையத்திற்கு சென்று செக் புக் வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கலாம். நீங்கள் கொடுக்கும் முகவரிக்கு செக் புக் வந்துவிடும். உங்களது முகவரி மாறி இருந்தால், ஏடிஎம்மில் செக் புக் வேண்டும் என்ற கோரிக்கை வைக்கும்போதே புதிய முகவரியையும் கொடுத்து விடவும்,

பில் பேமென்ட்:
ஏடிஎம்மை பயன்படுத்தி சேவை கட்டணங்களையும் செலுத்தலாம். முன்னதாக நீங்கள் பணம் செலுத்த வேண்டிய நிறுவனம் ஏடிஎம்முடன் இணைப்பு வைத்திருக்கிறதா? என்று பார்க்க வேண்டும். பணத்தை அனுப்புவதற்கு முன்பு, வங்கி இணையதளத்திற்கு சென்று பணம் செலுத்த வேண்டியவர்களின் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். தற்போது சிலர் மட்டுமே ஏடிஎம் சேவை கட்டணம் அனுப்ப பயன்படுத்துகின்றனர். பெரும்பாலும் யுபிஐ மூலம் செலுத்தி விடுகின்றனர்.

மொபைல் பேங்கிங்:
தற்போது வங்கி கணக்கை துவங்கினாலே மொபைல் வங்கி, இண்டநெட் வங்கி கணக்கையும் வங்கி சார்பில் திறந்து விடுகின்றனர். ஏடிஎம் மையத்துக்கு சென்று மொபைல் கணக்கை ஆக்டிவேட் செய்யவும். உங்களுக்கு மொபைல் வங்கி சேவை வேண்டாம் என்றால் ரத்து செய்து விடலாம். 

ஏடிஎம் பின் மாற்றம்:
உங்களுக்கு ஏடிஎம் பின் நம்பர் மாற்ற வேண்டுமானால், ஏடிஎம் மையத்துக்கு சென்று மாற்றலாம். பெரும்பாலும் ஏடிஎம் பின் நம்பர் மாற்றம் செய்வது சஜகம் தான். நம்முடன் தொடர்பில் இருப்பவர்களுக்கு எளிதில் பின் நம்பர் தெரிந்துவிடும். ஆதலாம், பின் நம்பரை மாற்றிக் கொள்ளலாம். அடிக்கடி பின் நம்பரை மாற்றுவதன் மூலம் சைபர் மோசடியில் இருந்தும் நீங்கள் தப்பித்துக் கொள்ளலாம்.

click me!