நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது 7வது மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்து வரும் நிலையில், இந்த பட்ஜெட்டில் 8வது ஊதியக் குழு குறித்த அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு அரசு ஊழியர்களிடையே அதிகரித்துள்ளது
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது 7வது மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்து வரும் நிலையில், இந்த பட்ஜெட்டில் 8வது ஊதியக் குழு குறித்த அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு அரசு ஊழியர்களிடையே அதிகரித்துள்ளது. 49 லட்சத்துக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்களும், 67 லட்சம் ஓய்வூதியதாரர்களும், மோடி அரசு 8வது ஊதியக் குழுவை அமைக்குமா என்று ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.
மத்திய அரசு ஊழியர்களின் சங்கங்களும், தொழிற்சங்கங்களும், 8வது ஊதியக்குழு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மறுசீரமைத்தல், 18 மாத அகவிலைப்படி நிலுவைகளை வழங்குதல் போன்றவை தொடர்பான கோரிக்கைகளை மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளன.
7th Pay Commission: 27 % சம்பள உயர்வு.. ஆகஸ்ட் 1 முதல் கிடைக்கும்.. அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்!
இந்த நிலையில் இன்றைய பட்ஜெட்டில் 8வது சம்பள கமிஷன் அமைப்பது குறித்து நிதியமைச்சர் சீதாராமன் முக்கிய அறிவிப்பை வெளியிடலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
8வது ஊதியக் குழுவை அமைக்க வேண்டும் என்று மத்திய அரசு ஊழியர்கள் பல்வேறு மன்றங்கள் மூலம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அடிப்படை சம்பளம், அலவன்ஸ், ஓய்வூதியம் மற்றும் இதர சலுகைகளை சீரமைக்க 8வது ஊதியக் குழுவை அமைக்க வேண்டும் என்று பல ஊழியர் சங்கங்கள் மத்திய அரசை பலமுறை வலியுறுத்தி வருகின்றன.
ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் எஸ்.பி.யாதவ், இந்திய அரசின் அமைச்சரவைச் செயலாளருக்கு சமீபத்தில் எழுதிய கடிதத்தில் “ 8வது ஊதியக் குழுவை உருவாக்க வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 18 மாத அகவிலைப்படியை விடுவிக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார். அதே போல் மத்திய அரசு பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கூடுதல் நிவாரணம். தேசிய கூட்டு ஆலோசனை இயந்திரம் கவுன்சிலும் 8வது ஊதியக் குழுவை உருவாக்குவதற்கான கோரிக்கையை அரசிடம் வைத்துள்ளது. இந்தக் கோரிக்கை மத்திய அரசிடம் முறைப்படி அளிக்கப்படும் என்று பொதுச் செயலாளர் சி.ஸ்ரீகுமார் உறுதி செய்துள்ளார்.
எவ்வாறாயினும், மோடி அரசாங்கம் 8 வது ஊதியக் குழுவை நிறுவுவது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பதும், குறிப்பிட்ட அமலாக்கத் தேதி எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. பொதுவாக, சம்பள கமிஷன் நிறுவப்பட்ட பிறகு அதன் பரிந்துரைகளை உருவாக்க 12 முதல் 18 மாதங்கள் ஆகும்.
இந்த காலகட்டத்தில், தற்போதைய பொருளாதார நிலைமைகள் உட்பட பல்வேறு காரணிகளை ஆணையம் மதிப்பீடு செய்து, ஊழியர்களின் சம்பளம் மற்றும் சலுகைகளை மாற்றியமைக்க முன்மொழியும்.. அதன்பின்னர் இந்த கோரிக்கைகள் அரசால் பரிசீலிக்கப்படும்.
மத்திய அரசு ஊழியர்கள் ஃபிட்மென்ட் காரணியை 2.57ல் இருந்து 3.68 ஆக உயர்த்த வாதிட்டனர். ஃபிட்மென்ட் காரணி என்பது அரசு ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை கணக்கிட பயன்படும் ஒரு காரணி ஆகும். எடுத்துக்காட்டாக, 6வது மத்திய ஊதியக் குழுவிலிருந்து 7வது ஊதியக் குழு வரையிலான ஊதியங்களைத் திருத்தும் போது 2.57 ஃபிட்மெண்ட் காரணி பயன்படுத்தப்பட்டது.
6வது ஊதியக் குழு 1.86 ஃபிட்மென்ட் காரணியை முன்மொழிந்தது, 7வது ஊதியக் குழு 2.57 என்று நிர்ணயித்தது. மத்திய அரசு ஊழியர்களுக்கான குறைந்தபட்ச அடிப்படை ஊதியத்தை ரூ.7,000லிருந்து ரூ.18,000 ஆக உயர்த்தியது, இது முந்தைய கமிஷனை விட 2.57 மடங்கு அதிகரிப்பை பிரதிபலித்தது.. ஊழியர்கள் இப்போது தங்கள் சம்பளம் மற்றும் சலுகைகளை மேலும் அதிகரிக்க, ஃபிட்மென்ட் காரணியை 3.68 ஆக உயர்த்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி வருகின்றனர்.