மத்திய பட்ஜெட் 2024 பிப்ரவரி 1ஆம் தேதி செய்யப்படுவது ஏன்?

By SG Balan  |  First Published Jan 9, 2024, 6:24 PM IST

2017ஆம் ஆண்டு, அருண் ஜெட்லி நிதியமைச்சராக இருந்தபோது மத்திய அரசு பிப்ரவரி மாத கடைசி வேலை நாளில் பட்ஜெட் தாக்கல் செய்யும் பழைய முறையைக் கைவிட முடிவு செய்தது. 


நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யத் தயாராகி வருகிறார். இந்நிலையில், பட்ஜெட் தாக்கலுக்கு பிப்ரவரி 1ஆம் தேதி தேர்வு செய்யப்பட்ட பின்னணியைத் தெரிந்துகொள்ளலாம்.

2017ஆம் ஆண்டு, அருண் ஜெட்லி நிதியமைச்சராக இருந்தபோது மத்திய அரசு பிப்ரவரி மாத கடைசி வேலை நாளில் பட்ஜெட் தாக்கல் செய்யும் பழைய முறையைக் கைவிட முடிவு செய்தது. அப்போதுதான் ரயில்வே பட்ஜெட்டை தனியாக தாக்கல் செய்யும் வழக்கமும் கைவிடப்பட்டது.

Tap to resize

Latest Videos

பழைய முறையில் பிப்ரவரி மாத கடைசி வேலை நாளில் மாலை 5 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சி காலத்திலிருந்து நடைமுறையில் உள்ள இந்த வழக்கத்துக்கு டெல்லிக்கும் பிரிட்டனுக்கும் இடையிலான நேர வித்தியாசம்தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. பிரிட்டன் நேரத்தை விட இந்திய நேரம் 4.5 மணி நேரம் முன்னதாக உள்ளது.

1998 முதல் 2002 வரை வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் நிதி அமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்ஹாவும் பட்ஜெட் தாக்கல் செய்யும் நேரத்தை மாற்றும் திட்டம் இருந்தது. அவர் 1999 மத்திய பட்ஜெட்டை காலை 11 மணிக்கு தாக்கல் செய்ய விரும்பினார்.

பட்ஜெட் பற்றி அதிக விவாதம் நடத்த வேண்டும் என்ற நோக்கில் முன்வைக்கப்பட்ட இந்த கோரிக்கைக்கு ஒரு பெரிய வரவேற்பு கிடைத்தது. பிப்ரவரி 27, 1999 அன்று, சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதல் முறையாக, காலை 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

மத்திய அரசின் ஆட்சிக்காலம் முடிவடைந்து தேர்தல் அறிவிப்பு எதிர்பார்க்கப்படும் சூழலில், வரும் பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய பட்ஜெட் இடைக்கால பட்ஜெட்டாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!