cyrus mistry: tata sons: சைரஸ் மிஸ்திரி மறைவு!ஷபூர்ஜி பலூன்ஜி குழுமத்தின் 3,000கோடி டாலர் சொத்து என்னாகும்?

By Pothy Raj  |  First Published Sep 5, 2022, 3:52 PM IST

டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி கார் விபத்தில் திடீரென உயிரிழந்ததையடுத்து, ஷபூர்ஜி பலூன்ஜி குழுமத்தின் 3ஆயிரம் கோடி டாலர் சொத்துக்களை பராமரிப்பது குறித்த கேள்வி எழுந்துள்ளது.


டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி கார் விபத்தில் திடீரென உயிரிழந்ததையடுத்து, ஷபூர்ஜி பலூன்ஜி குழுமத்தின் 3ஆயிரம் கோடி டாலர் சொத்துக்களை பராமரிப்பது குறித்த கேள்வி எழுந்துள்ளது.

சைரஸ் மிஸ்திரியின் தந்தை ஷபூர்ஜி பலூன்ஜி கடந்த ஜூன் 28ம் தேதி உயிரிழந்தார். அவர் உயிரிழந்த அடுத்த 2 மாதங்களில் அவரின்இளைய மகனான சைரஸ் மிஸ்திரியும் உயிரிழந்துள்ளார்.

Tap to resize

Latest Videos

Cyrus Mistry : டாடாவின் வாரிசு முதல் டாடா சன்ஸை நீதிமன்றத்துக்கு இழுத்தவர் வரை.! யார் இந்த சைரஸ் மிஸ்திரி ?

இதனால் 157 ஆண்டுகால பழமையான ஷபூர்ஜி பலூன்ஜி குழுமத்தையும் அந்நிறுவனத்தின் சார்பில் பல்வேறு நிறுவனங்களில் இருக்கும் பங்குகளையும் பராமரிக்கும் பொறுப்பு யாருக்கு வரும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

கார்விபத்தில் மரணமடைந்த சைரஸ் மிஸ்திரிக்கு ரோஹிஹா என்றமனைவியும், பிரோஸ் மர்றும் ஜாஹன் என்ற இரு மகன்களும் உள்ளனர். 

2012ம் ஆண்டில் டாடா சன் குழுமத்தின் தலைவராக சைரஸ் மிஸ்திரி இருந்தபோது, எஸ்பி குழுமத்தின் பொறுப்புகளை ஷாபூர்ஜி மிஸ்திரியிடம் வழங்கினார். 2019ம் ஆண்டு எஸ்பி குழுமத்தின் நிர்வாகக்குழுவில் சைரஸ் மிஸ்திரி சேர்க்கப்பட்டாலும் ஈடுபாடுகாட்டவில்லை. ஆனால்,  சைரஸ் மிஸ்திரியின் சகோதரர் ஷபூர்ஜியின் மகள் தான்யாவுக்கு சிஎஸ்ஆர் பொறுப்பும், மகன் பலூன்ஜி நிர்வாகக்குழுவிலும் சேர்க்கப்பட்டனர்.

tmb ipo: tmb share price: தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் சிஇஓ-வாக சங்கரசுப்பிரமணியம் பொறுப்பேற்பு

2016ம் ஆண்டு டாடா சன்ஸ் குழுமத்தில் இருந்து சைரஸ் மிஸ்திரி நீக்கப்பட்ட பின் எஸ்பி குழுமத்தின் தலைவராக சைரஸ் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரின் தந்தை ஷபூர்ஜி பலூன்ஜியே தலைவர் பொறுப்பு வகித்தார். 2012ம் ஆண்டில் பலூன்ஜி ஓய்வு பெற்றாலும் நிறுவனத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகவில்லை.

டாடா குழுமத்தின் தலைவராக சைரஸ் மிஸ்திரி இருந்தபோதிலும்கூட தனது குடும்பத் தொழிலில் பெரிதாக ஈடுபட ஆர்வம்காட்டவில்லை. அவரின் சகோதரர் ஷபூர் மிஸ்திரிதான் கவனித்தார். 

டாடா குழுமத்தில் ஷபூர்ஜி பலூன்ஜி குடும்பத்துக்கு 18.6% பங்குகள் உள்ளன. ப்ளூம்பெர்க் இணையதளத்தின் மதிப்பின்படி, 2022ம் ஆண்டுபடி, ஷபூர்ஜி பலூன்ஜி குடும்பத்தின் சொத்து மதிப்பு 3 ஆயிரம் கோடி டாலர் இருக்கும் என மதிப்பிட்டுள்ளது.

ஷபூர்ஜி பலூன்ஜி குழுமத்தில் ஷபூர்ஜியின் பிள்ளைகளான தான்யா, பலூன்ஜி வந்தபின் பங்குதாரர்களிடம் இணக்கமான செயல்பாடு, டிஜிட்டல்முறை அறிமுகத்தால் சுமூகமான சூழல் கொண்டுவரப்பட்டது. 
ஷபூர்ஜி பலூன்ஜி குழுமம் என்றாலே கட்டுமானத்துறைக்கு புகழ்பெற்றதாகும்.

aadhaar card: ஆதார் கார்டு மூலம் வங்கி சேமிப்புக் கணக்கில் பேலன்ஸ் பார்க்க முடியுமா! தெரிந்து கொள்ளுங்கள்

இந்த நிறுவனத்தின் முதல் கட்டுமானமான தெற்கு மும்பையில் உள்ள கிர்காவும் சவுபதி, மலபார் ஹில் ஆகியவை முக்கியமானது. மும்பையில் விளையாட்டு அரங்குகள், மைதானங்கள், தொழிற்சாலைகள், ஹோட்டல்கள் போன்றவை கட்டப்பட்டன. 

ரிசர்வ் வங்கி தலைமை அலுவலகம், பங்குச்சந்தை சவர், ஓபிராய் ஹோட்டல், ஆலம் பேலஸ், ராஜஸ்தானில் உள்ள நாத்வாரா கோயில், துபாயில் உள்ள ஜூமைரா லேக் டவர், மொரிஷியஸ் எபினி சைபர் சிட்டி ஆகியவை புகழ்பெற்றதாகும். 

இது தவிர செனாப் ரயில்வே பாலம், அடல் குகைப்பாதை, தாக்கா-சிட்டகாங் ரயில்வே பாதை, கொல்கத்தா மெட்ரோ ஆகியவை சமீபத்தில் எஸ்பி குழுமம் கட்டிய கட்டியங்களாகும். 

யுரேகா ஃபோர்ஸ் நிறுவனத்தில் பங்குதாரராக இருந்த எஸ்பி குழுமம் தன்னிடம் இருந்த 8.7 சதவீத பங்குகளை லோனோலக்ஸ் நிறுவனத்திடம் விற்று வெளியேறியது. அதுமட்டுமல்லாமல் ஸ்டெர்லிங் அன்ட் வில்சன் சோலார் பவர் பங்குகளையும் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திடம் 2021ம் ஆண்டு விற்றது.

ஏறக்குறைய 157 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட எஸ்பி குழுமம் மற்றும் ஷபூர்ஜி பலூன்ஜி குழுமத்தின் 3000 கோடி டாலர்சொத்துக்களை யார் பராமரிப்பது என்பது முடிவாகவில்லை.

click me!