LPG gas cylinder price: bjp: கடந்த 5 ஆண்டுகளில் எல்பிஜி சிலிண்டர் விலை 45% உயர்வு: 58 முறை விலை மாற்றம்

By Pothy Raj  |  First Published Sep 5, 2022, 2:36 PM IST

கடந்த 5 ஆண்டுகளில் வீடுகளில் பயன்படுத்தப்படும் எல்பிஜி சமையல் சிலிண்டர் விலை 45 சதவீதம் உயர்ந்துள்ளது, 58 முறை விலை மாற்றப்பட்டுள்ளது என்று ஆய்வு தெரிவிக்கிறது.


கடந்த 5 ஆண்டுகளில் வீடுகளில் பயன்படுத்தப்படும் எல்பிஜி சமையல் சிலிண்டர் விலை 45 சதவீதம் உயர்ந்துள்ளது, 58 முறை விலை மாற்றப்பட்டுள்ளது என்று ஆய்வு தெரிவிக்கிறது.

வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடை கொண்ட எல்பிஜி சமையல் சிலிண்டர் விலை கடந்த ஜூன் மாதத்திலிருந்து மாற்றப்படாமல் இருக்கிறது. கடைசியாக ரூ50 உயர்த்தப்பட்டபின் விலை மாற்றம் ஏதும் இல்லை. கடந்த 2014ம் ஆண்டு 

Tap to resize

Latest Videos

tmb ipo: tmb share price: தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் சிஇஓ-வாக சங்கரசுப்பிரமணியம் பொறுப்பேற்பு

கடந்த 2014ம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வரும்போது வீடுகளில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் விலை ரூ.410 ஆக இருந்தது. தற்போது, ஒரு சிலிண்டர் விலை ரூ.1,105 ஆக அதிகரித்துள்ளது. ஏறக்குறைய இரு மடங்கிற்கும் மேலாக விலை உயர்ந்துவிட்டது.

இந்நிலையில் மத்திய பெட்ரோலிய துறை அமைச்சகம் இணையதளத்தில் வெளியிடப்பட்ட தகவலில் “ 2017ம் ஆண்டு ஏப்ரல்1ம்தேதி முதல் 2022, ஜூலை 6ம் தேதிவரை வீடுகளில் சமையலுக்கு பயன்படும் எல்பிஜி சிலிண்டர் விலை 45 சதவீதம் உயர்ந்துள்ளது, 58 முறை விலை மாற்றப்பட்டுள்ளது.

2017, ஏப்ரல் மாதத்தில் சிலிண்டர் விலை ரூ.723 ஆக இருந்தது, 2022, ஜூலை மாதம் 45 சதவீதம் உயர்ந்து, ரூ.1,053 ஆக அதிகரித்துள்ளது. 

gold rate today: ஏற்றத்துடன் தொடங்கிய தங்கம் விலை! சவரன் மீண்டும் ரூ.38ஆயிரத்தை எட்டுமா? இன்றைய நிலவரம் என்ன

அதேசமயம் சமையல் சிலிண்டர் விலை 2021, ஜூலை 1ம் தேதி முதல் 2022, ஜூலை 6ம் தேதிக்குள் கடந்த 12 மாதத்தில் 26% அதிகரித்துளளது. 2021, ஜூலை மாதத்தில் சிலிண்டர்விலை ரூ.834 ஆக இருந்தது. 2022, ஜூலையில் சிலிண்டர் விலை 26% அதிகரித்து ரூ.1,053 ஆக அதிகரித்துள்ளது”எ னத் தெரிவித்துள்ளது.

aadhaar card: ஆதார் கார்டு மூலம் வங்கி சேமிப்புக் கணக்கில் பேலன்ஸ் பார்க்க முடியுமா! தெரிந்து கொள்ளுங்கள்

எல்பிஜி சிலிண்டர் விலை ஒவ்வொரு மாநிலத்திலும் விலை மாறுபடும். அந்தந்த மாநிலத்தில் விதிக்கப்படும் வாட் வரிக்கு ஏற்றார்போல் விலை மாறுகிறது. கச்சா எண்ணெய் விலை அடிப்படையில் இந்த கணக்கீடு இருக்கிறது.

click me!