
தற்போதைய சூழலில் தவணை முறையில் வாங்காத பொருட்களே இல்லை என்ற நிலையே நிலவுகிறது. மொபைல் போன், சில்லறை பொருட்கள், வீட்டுப் பொருட்கள், கூடவே சில நேரங்களில் சுற்றுலா செலவுகள் கூட "தவணை முறையில்" (EMI) செலுத்துகிறோம்.அதிலும் "No Cost EMI" என்ற வார்த்தையை கேட்டால், அதில் மயங்கி கண்களை மூடிக்கொண்டு கிடைக்கும் பொருட்களை அப்படியே வாங்குகிறோம். ஆனால் அது குறித்த முழுமையான விவரம் யாருக்கும் தெரிவதில்லை. அதனை தெரிந்துகொள்ளும் பட்சத்தில் நாம் பல்வேறு நிதி சிக்கல்களில் சிக்காமல் தப்பிக்கலாம்.
No Cost EMI என்றால் என்ன?
“நோ காஸ்ட் ஈஎம்ஐ” என்பதன் பொருள், ஒரு பொருளை தவணையாக வாங்கும் போது வட்டி கட்ட வேண்டிய அவசியமில்லாமல், அதே விலையிலேயே மாதம் மாதம் கட்டிக்கொண்டு முடிக்கலாம் என்பதாகும். எடுத்துக்காட்டாக ₹30,000 மதிப்புள்ள மொபைல் போனை நீங்கள் 6 மாதத்துக்குள் கட்ட விரும்புகிறீர்கள் என்றால், மாதம் ₹5,000 கட்டி வாங்க முடியும். அதற்காக மேலாக வட்டி ஏதும் சேர்க்கப்படாது என விளம்பரப்படுத்தப்படுகிறது.
உண்மையில் நடப்பது என்ன?
விற்பனை விலை ஏற்கனவே உயர்த்தப்பட்டிருக்கும் என்று சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு பொருளின் உண்மையான விலை ₹28,000 இருந்தாலும், No Cost EMI-யில் அதை ₹30,000-க்கு விற்பனை செய்வார்கள் எனவும் இதன் மூலம் வட்டி உங்களிடம் மறைமுகமாக வசூலிக்கப்படுகிறது என்றும் கூறுகின்றனர்.
தள்ளுபடிகள் ரத்து செய்யப்படலாம்
தாங்கள் ஒரு பொருளை ஒரே கட்டணமாக வாங்கினால் கிடைக்கும் தள்ளுபடி, No Cost EMI-யில் கிடைக்காது. அதாவது, "இலவசம்" என்பது நிஜத்தில் தள்ளுபடியில் உங்களுக்குக் கிடைக்கும் நன்மையை விட்டுவிடும் வகையில் இருக்கலாம்.
பணத்தை நிதி நிறுவனம் எடுக்கும்
விற்பனையாளர், நிதி நிறுவனம் மற்றும் உற்பத்தியாளர் – இவர்களில் ஒருவர் உங்கள் வட்டியை ஏற்கின்றனர், ஆனால் அதை நீங்கள் எந்த தெரிந்துகொள்ளாமலேயே திருப்பி செலுத்துகிறீர்கள்.அதன் செலவு ஏற்கனவே உங்களிடமிருந்து வாங்கப்பட்டிருக்கும்.
நன்மைகள் என்ன?
திடீர் பணச் செலவில்லாமல், தேவையான பொருட்கள் உடனடியாக கிடைக்கும்.தவணைகளை நேரம் தவறாமல் செலுத்தினால், உங்கள் கிரெடிட் ஸ்கோர் (கடன் மதிப்பீடு) உயரலாம். குறைந்த வருமானத்திலும் பெரிய பொருட்கள் வாங்கும் வாய்ப்பு.
பாதிப்புகள் என்ன?
“No Cost EMI” என்பது சரியான முறையில் பயன்படுத்தினால் நன்மை தரும். ஆனால் அதே நேரத்தில் கணக்கீடு இல்லாமல் பயன்படுத்தினால் நம்மையே நம்மால் சிக்கலில் வீழ்த்திவிடும்.ஒரு வட்டியில்லா தவணை வாழ்க்கையை உயர்த்தக் கூடும்; தவறு செய்தால் வாழ்க்கையை சுருக்கவும் கூடும்!
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.