எச்டிஎஃப்சி வங்கியின் மூளையாக திகழ்ந்த ஹஸ்முக் தகோர்தாஸ் பரேக்; யார் இவர்?

Published : Jul 18, 2023, 02:07 PM ISTUpdated : Jul 18, 2023, 02:10 PM IST
எச்டிஎஃப்சி வங்கியின் மூளையாக திகழ்ந்த ஹஸ்முக் தகோர்தாஸ் பரேக்; யார் இவர்?

சுருக்கம்

எச்டிஎஃப்சி வங்கி இன்று உலகளவில் பெரிய வங்கிகளில் நான்காவது வங்கியாக உருவெடுத்துள்ளது. இதற்குக் காரணம் எச்டிஎஃப்சி வங்கியை இதன் தாய் வங்கியுடன் சமீபத்தில் இணைக்கப்பட்டதுதான். 

எச்டிஎஃப்சி வங்கியின் சந்தை மூலதனம் ரூ. 12.66 லட்சம் கோடியாக அதிகரித்து உலகின் முதல் பத்து வங்கிகளில் ஒன்றாக திகழ்கிறது. மோர்கன் ஸ்டான்லி, பாங்க் ஆப் சீனா வங்கிகளை விட மூலதனத்தில் பெரிய அளவில் எச்டிஎஃப்சி வங்கி உருவெடுத்துள்ளது. இதற்கு பின்னால் இருந்தவர் ஹஸ்முக் தகோர்தாஸ் பரேக். 

ஹவுசிங் அண்டு டிவலப்மென்ட் ஃபினான்ஸ் கார்பரேஷனை 1977ஆம் ஆண்டில் ஹஸ்முக் தகோர்தாஸ் பரேக் முதன் முதலில் திறந்தார். பல்வேறு தடைகளைக் கடந்தும் இந்த வங்கியை கைவிடாமல் காப்பாற்றி வந்துள்ளார். இவரது பிரம்மாண்ட வளர்ச்சி, வீடு கட்டுவோருக்கு கடன் கொடுத்து உதவியது போன்ற காரணங்களால் இவருக்கு மத்திய அரசு 1992 ஆம் ஆண்டில் பத்ம பூஷண் விருதை வழங்கி கவுரவித்தது. லண்டன் பொருளாதார பள்ளியும் இவருக்கு கவுரவப் பட்டம் கொடுத்து கவுரவித்துள்ளது.

பரேக்கின் படிப்பு:
குஜராத் மாநிலம் சூரத்தில் வங்கி பணியில் ஈடுபட்டு இருந்த குடும்பத்தில் 1911ஆம் ஆண்டு, மார்ச் 10ஆம் தேதி ஹஸ்முக் தகோர்தாஸ் பரேக் பிறந்தார். இவருக்கு தனது தந்தையிடம் இருந்து தொழில் திறன் இயற்கையாக ரத்தத்தில் இருந்துள்ளது. இவர் தனது தாயால் மிகவும் ஈர்க்கப்பட்டார். மும்பையில் ஒரு அறை வீட்டில் வசித்து வந்தனர். அப்போது பகுதி நேர வேலைக்கு சென்று கொண்டே மும்பை பல்கலைக் கழகத்தில் பொருளாதாரத்தில் பட்டமும் பெற்றார். பின்னர் லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸில் வங்கி மற்றும் நிதி குறித்த பி.எஸ்சி., பட்டப் படிப்பை முடித்தார். 

ஹிண்டன்பர்க் அறிக்கை அவப்பெயரை உண்டாக்கும் தவறான தகவல்: கவுதம் அதானி!

பங்குச் சந்தை புரோக்கர்:
பின்னர் 1936ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு திரும்பியவர் ஹர்கிசன்தாஸ் லுக்மிதாஸ் நிறுவனத்தில் பங்குச் சந்தை புரோக்கராக சேர்ந்தார். இத்துடன் மும்பையில் இருக்கும் செயின்ட் சேவியர்ஸ் கல்லூரியில் மூன்று ஆண்டுகள் பேராசிரியராகவும் பணியாற்றினார். இருபது ஆண்டுகள் பங்குச் சந்தை புரோக்கர் தொழிலில் கிடைத்த அனுபவத்தை வர்த்தகத்தில் எவ்வாறு பயன்படுத்துவது என்பதில் நாட்டம் காட்டினார்.

ஐசிஐசிஐ வங்கி:
இதன் முதல் துவக்கமாக 1956ஆம் ஆண்டில் ஐசிஐசிஐ வங்கியில் துணை பொது மேலாளராக பணியில் சேர்ந்தார். இதையடுத்து 1976ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். ஆனால், 1978 வரை பின்னர் ஐசிஐசிஐ போர்டில் சேர்மன் ஆக திகழ்ந்தார்.

Today Gold Rate in Chennai : ஆடி பொறந்ததும் ஆட்டம் காட்டும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

வீட்டுக் கடன் வழங்க வங்கி:
ஓய்வுக்குப் பின்னரும் ஏதாவது செய்ய வேண்டும் இவரை உறுதிக் கொண்டே இருந்தது. வீடு என்பது அனைவரின் கனவு என்பது அவரது மனதில் உதித்தது. உடனடியாக வீட்டுக் கடன் வழங்குவதற்கு என்று ஹவுசிங் டிவலப்மென்ட் ஃபினான்ஸ் கார்பரேஷன் லிமிடெட்டை 1977-ல் நிறுவினார். அப்போது அவருக்கு வயது 65. 

எச்டிஎஃப்சி வங்கி துவக்கம்:
இந்திய அரசாங்கத்தின் எந்த நிதி உதவியும் இல்லாமல் இந்தியாவின் முதல் சில்லறை வீட்டு நிதி நிறுவனமான எச்டிஎஃப்சி வங்கியை 10,000 ரூபாய் தனிப்பட்ட பங்களிப்புடன் நிறுவினார். பரேக்கின் திறன் மிகுந்த தலைமை மற்றும் வழிகாட்டுதலின் கீழ், எச்டிஎஃப்சி ஒரு நிறுவனமாக பன்மடங்கு வளர்ந்தது. இது ஒருங்கிணைப்பு, வெளிப்படைத்தன்மை மற்றும் தொழில்முறை கொள்கைகளில் உறுதியாக இருந்தது என்று வளர்ந்து வந்தது. 

1978 ஆம் ஆண்டு முதல் வீட்டுக் கடனை வழங்கி வந்தது. 1984 ஆம் ஆண்டுக்குள் ரூ. 100 கோடிக்கு மேல் ஆண்டுக் கடன் வழங்கும் வங்கியாக உருவெடுத்தது. இவரது முழு முயற்சியால், ஆசிய பிராந்தியத்தில் வீட்டுக் கடன் வழங்கும் விஷயத்தில் ரோல் மாடலாக திகழ்ந்தார். 

ஆயில் நிறுவனம்:
1983 ஆம் ஆண்டில், இந்தியாவின் முதல் தனியார் துறை எண்ணெய் ஆய்வு நிறுவனமான ஹிந்துஸ்தான் ஆயில் எக்ஸ்ப்ளோரேஷன் கம்பெனி லிமிடெட் மேம்படுத்தினார். 1986-ல் குஜராத் ரூரல் ஹவுசிங் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவினார். இது கிராமங்கள் மற்றும் சிறிய நகரங்களில் கிராமப்புற வீட்டு நிதியை வழங்குவதற்கான ஒரு நிறுவன கட்டமைப்பாக இருந்து வருகிறது. 

பரேக் மறைவு:
இவ்வளவு பெருமைக்கு உரிய பரேக் 1994ஆம் ஆண்டில், நவம்பர் 18ஆம் தேதி மறைந்தார். ஆனால், அவர் நிறுவிய எச்டிஎஃப்சி வங்கி இன்று உலகளவில் நான்காவது வங்கியாக உருவெடுத்துள்ளது.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
click me!

Recommended Stories

தங்க கடனில் புதிய விதிகள்.. ஆர்பிஐயின் அதிரடி மாற்றம்.. மக்களே நோட் பண்ணுங்க
அரசு ஊழியர்கள் வயிற்றில் பாலை வார்த்த மத்திய அரசு.. 1 கோடி குடும்பங்கள் நிம்மதி.!