
தங்கம் விலை கடந்த இரு நாட்களாக உயர்ந்தும், சரிந்தும் இருந்த நிலையில் இன்று விலையில் எந்த மாற்றமில்லாமல் நீடிக்கிறது
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய விலையிலேயே நீடிக்கிறது. கிராம் ரூ.4,790 ஆகவும், சவரன் ரூ.38,320ஆகவும் விற்கப்படுகிறது.
வாரன் பஃபெட்டுக்கு பிறந்த நாளும், அவரைப் பற்றி வெளிவராத உண்மைகளும்!!
கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.4790ஆக விற்கப்படுகிறது விலையில் எந்த மாற்றமும் இல்லை.
கடந்த வாரத்தைப் போல் இந்த வாரமும் தங்கம் விலை ஊசலாட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. வாரத்தின் முதல்நாளில் தங்கம் விலை கிராமுக்கு 35 ரூபாயும், சவரனுக்கு ரூ.280 குறைந்தது. ஆனால், நேற்று கிராமுக்கு 25ரூபாயும், சவரனுக்கு ரூ.200 அதிகரித்தது. ஆனால், இன்று தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
tmb: tmb ipo: தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி IPO வரும் செப் 5ல் வெளியீடு: பங்கு விலையை தெரிஞ்சுங்கோங்க!
அமெரிக்க பெடரல் வங்கி வட்டிவீதத்தை உயர்த்தும் என்ற அச்சத்ம் சந்தையில் முதலீட்டாளர்கள் மத்தியில் இருந்து வருகிறது. பெடரல் வங்கியின் வட்டி வீத அறிவிப்பு அடுத்த மாதம் வருகிறது. அப்போது தங்கத்தின் விலையில் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
இனிவரும் நாட்களில் டாலர் மதிப்பு வலுவடைந்தால், தங்கத்தின் விலையில் பெரிய ஏற்ற இறக்கம் இருக்கும் என்று சந்தை வல்லுநர்கள் தெரிவித்தனர்
ரிலையன்சின் தலைமை பொறுப்புக்கு வந்த இஷா அம்பானி.. அடேங்கப்பா.! சொத்து மதிப்பு இவ்வளவா?
வெள்ளி விலையிலும் மாற்றமில்லை. வெள்ளி கிராம் ஒன்று ரூ.60.10 ஆகவும், கிலோ ரூ.60,100க்கும் விற்கப்படுகிறது
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.