இன்றுடன் 92 வயது நிறைவடைந்து, 93 வயதில் அடியெடுத்து வைத்து இருக்கும் வாரன் பஃபெட்டின் நிகர சொத்து மதிப்பு நூறு பில்லியன் டாலர்கள், அதாவது ரூ. 10,000 கோடிக்கான அதிபதியாக இருக்கிறார்.
வாரன் பஃபெட்
பங்குச் சந்தை முதலீட்டாளர் வாரன் பஃபெட் இன்று ஆகஸ்ட் 30 அன்று 92 வயது பூர்த்தி அடைந்து 93 வயதில் அடி எடுத்து வைக்கிறார். ஃபோர்ப்ஸின் உலக பணக்காரர்கள் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளார். தனது பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனம் மூலம் இன்று 12க்கும் அதிகமான நிறுவனங்களுக்கு சொந்தக்காரராக இருக்கும் அமெரிக்க வர்த்தக அதிபர். முதன் முறையாக 11வது வயதில் பங்குச் சந்தையில் முதலீடு செய்யத் தொடங்கினார். 13 வயதில், வாரன் பஃபெட் தனது முதல் வருமான வரியை தாக்கல் செய்தார்.
மேலும் செய்திகளுக்கு..உலகின் 3வது பெரிய பணக்காரர் ஆனார் கவுதம் அதானி!
ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலில் நிராகரிப்பு
வாரன் பஃபெட் இன்று உலகெங்கிலும் உள்ள முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு ஒரு உத்வேகமாக இருந்தாலும், ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலுக்கு அவர் அனுப்பிய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது, அவர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
பஃபெட் தனது காலை உணவை மெக்டொனால்ஸ்சில் தான் சாப்பிடுவார். ஒரு கோடீஸ்வரர் உணவுப் பழக்க வழக்கங்களில் ஆர்வமாக இருப்பார், வித விதமாக சாப்பிடுவார் என்பது சகஜமான ஒன்று தான். ஆனால், வாரன் பஃபெட், 50 ஆண்டுகளுக்கும் மேலாக, அலுவலகத்திற்குச் செல்லும் வழியில் காலை உணவை சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
கோகோ கோலாவில் முதலீடு
பாஸ்ட் ஃபுட் மீதான அவரது காதல் சாப்பாட்டு மேஜையுடன் நின்றுவிடவில்லை. கோகோ கோலா பங்குகளிலும் முதலீடு செய்தார். ஆரம்பத்தில் 1988 ஆம் ஆண்டு, $3.25 க்கு வாங்கினார்.
மேலும் செய்திகளுக்கு..ரிலையன்சின் தலைமை பொறுப்புக்கு வந்த இஷா அம்பானி.. அடேங்கப்பா.! சொத்து மதிப்பு இவ்வளவா?
1958 முதல் ஒரே வீட்டில் வசிக்கிறார்
வாரன் பஃபெட் 1958 ஆம் ஆண்டு முதல் ஒரே வீட்டில் வசித்து வருகிறார். இந்த வீட்டை 31,500 டாலருக்கு வாங்கி இருந்தார். அதே நேரத்தில், உலகம் முழுவதும் உள்ள பில்லியனர்கள் வில்லாக்கள், விடுமுறை இல்லங்கள் மற்றும் பிற சொத்துக்களை வாங்கி குவித்து வருகின்றனர். சொகுசு வாழ்க்கை அனுபவிக்கின்றனர். இவரோ வித்தியாசமானவர்.
50 ஆண்டுகளாக ஒரே அலுவலகம்:
இதேபோல், 1960ஆம் ஆண்டுகளில் பெர்க்ஷயர் ஹாத்வேயில் சேர்ந்ததிலிருந்து அதே அலுவலக கட்டிடத்தில் பணிபுரிந்து வருகிறார். அலுவலகம் மாற்றவில்லை. ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகும் ஃபிளிப் ஃபோனைப் பயன்படுத்தி வருகிறார். ஸ்மார்ட்ஃபோன்கள் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட நீண்ட காலத்திற்குப் பிறகு, முதலீட்டாளர்கள் எளிமையான நோக்கியா ஃபிளிப் போனைப் பயன்படுத்தினர். குறைந்த விலை கார்களையே விரும்புவார்.
மேலும் செய்திகளுக்கு..இனி வாட்சப் மூலமாக ஈசியாக பொருட்கள் வாங்கலாம்.. ஜியோமார்ட் & மெட்டா அதிரடி அறிவிப்பு.!!