உங்கள் சுவரின் உட்புறத்தில் ஈரத்திட்டுகள் இருக்கிறதா? ஏசியன் பெயிண்ட்ஸ்-ன் வாட்டர்ப்ரூஃப் சாம்பியன் தீர்வு

By karthikeyan VFirst Published Aug 30, 2022, 6:07 PM IST
Highlights

உங்கள் வீட்டு சுவர்களுக்குள் நீர் புகுந்து ஈரமான திட்டுகளை மறைத்து உங்கள் சுவர்களை  பாதுகாக்க ஏசியன் பெயிண்ட்ஸ் வாட்டர்ப்ரூஃப் சாம்பியன் தான் தீர்வு. அதன் சிறப்பம்சங்கள் குறித்து பார்ப்போம்.
 

வீட்டுச்சுவர்களை வாட்டர்ப்ரூகிங் செய்து உட்புறத்தை பாதுகாப்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. சுவர்களின் வெளிப்புறத்தை பாதுகாக்க ஏராளமான பெயிண்ட்டுகள் மார்க்கெட்டில் உள்ளன. ஆனால் உட்புறத்தை பாதுகாப்பது எளிதல்ல. வெளிப்புறத்தில் அடிக்கப்பட்ட மிகச்சிறந்த பெயிண்ட் கூட, உட்புறத்தை பாதுகாக்க தவறுகிறது. வாட்டர்ப்ரூஃபிங் இல்லாத பெயிண்ட், ஈரமான திட்டுகள், சுவரின் மேற்புறம் உரிதல் ஆகியவற்றிற்கு வழிவகுக்கிறது.

ஈரப்பதம், தரம் குறைந்த வாட்டர்ப்ரூஃபிங் கெமிக்கல் உள்ளிட்ட பல காரணங்களால் வாட்டர்ப்ரூஃபிங் பிரச்னைகள் அதிகமாகும். அதனால் உங்கள் சுவர்களினுள் நீர் புகுவதால் ஈரமான திட்டுகள் உருவாவதுடன், சுவர்களையும் பழுதடைய செய்யும். சுவருக்குள் தண்ணீர் புகும் பிரச்னையை சரி செய்வதில் பல சவால்கள் உள்ளன. அதை சரிசெய்தாலும், ஆண்டுக்கு இரு முறையாவது மீண்டும் மீண்டும் சரி செய்தாக வேண்டிய நிலை உருவாகும்.

சுவர்களின் உட்புறத்தை பாதுகாக்க, ஏசியன் பெயிண்ட்ஸ் வாட்டர்ப்ரூஃபிங் திறன் கொண்ட ஸ்மார்ட்கேர் ஹைட்ரோலாக் என்ற புதிய பெயிண்ட்டை அறிமுகம் செய்துள்ளது. இந்த வாட்டர்ப்ரூஃபிங் சாம்பியன் அதிசயத்தை நிகழ்த்துகிறது. சுவர்களுக்குள் நீர் புகுந்து ஈரத்திட்டுகள் வெளியே தெரிகிறதா..? அதை சரிசெய்ய எளிமையான தீர்வு, இந்த ”ஸ்மார்ட்கேர் ஹைட்ரோலாக்” வாட்டர்ப்ரூஃபிங் சாம்பியன் தான். 

இப்போதைய சூழலில் வாட்டர்ப்ரூஃபிங் தீர்வுகள் பெரும்பாலும், சுவரின் கட்டுமானத்தை மறுசீரமைப்பு செய்வதாகவே உள்ளது. இது செலவை மேலும் அதிகரிக்கத்தான் செய்யும். ஆனால் ஸ்மார்ட்கேர் ஹைட்ரோலாக் நேரடியாக சுவரின் மீது ஒரு கோட்டிங் செய்தாலே போதும். ஈரத்திட்டுகள் மறைந்து, இனிமேல் சுவரினுள் நீர் புகாமல் தடுத்து பாதுகாக்கும். இதற்கு சுவரை பழுதுபார்க்க தேவையில்லை. எளிமையான பெயிண்டிங் முறையிலேயே சுவரின் உட்புறத்தை அழாக்குவதுடன் பாதுகாக்கவும் செய்யலாம். செலவும் மிகக்குறைவு.

இந்த ஸ்மார்ட்கேர் ஹைட்ரோலாக் பிராசஸ் வழக்கமான பெயிண்டிங் பிராசஸ் போன்றதுதான். இதற்கு 3 ஆண்டுகள் வாரண்டியும் வருகிறது. 

ஏசியன் பெயிண்ட்ஸ் ஸ்மார்ட்கேர் ஹைட்ரோலாக் சுவரின் உட்புறத்தை பாதுகாக்கும் வாட்டர்ப்ரூஃபிங் ஸ்பெஷலிஸ்ட் என்று ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனத்தின் எம்.டி மற்றும் சி.இ.ஓ-வான அமித் சிங்கிள் தெரிவித்துள்ளார்.

ஸ்மார்ட்கேர் ஹைட்ரோலாக்கை எப்படி எளிமையாக பயன்படுத்துவது என்பதை விளக்கும் விளம்பரத்தில் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து ஆகிய இருவரும் நடித்துள்ளனர். தனது அடுத்த திரைப்படத்தில் பேட்மிண்டன் வீரராக நடிக்கும் ரன்பீர் கபூர், பேட்மிண்டன் பயிற்சியை ஒழுங்காக எடுப்பதில்லை. அவரது கவனம் சிதறுகிறது. அதற்கு தன் வீட்டு சுவரில் நீர் புகுந்ததால் சுவரின் உட்புறத்தில் ஏற்பட்ட ஈரத்திட்டுகள் தனது மனதை பாதித்துவிட்டதாகவும், அதனால் பேட்மிண்டன் பயிற்சியில் கவனம் செலுத்த முடியவில்லை என்கிறார் ரன்பீர் கபூர். 

அதற்கான தீர்வையும் ரன்பீர் கபூரே சொல்கிறார். ஏசியன் பெயிண்ட்ஸ் ஸ்மார்ட்கேர் ஹைட்ரோலாக் மூலம் வாட்டர்ப்ரூஃபிங் செய்யலாம் என்று அதை செய்துகாட்டுகிறார். ஸ்மார்ட்கேர் ஹைட்ரோலாக் பயன்படுத்திய பின்னர் சுவரில் இருந்த ஈரத்திட்டுகள் மறைந்து சுவர் அழகாக பளபளப்பாக காட்சியளித்ததை கண்டு பி.வி.சிந்து வியக்கிறார். இப்படியாக முடிகிறது அந்த விளம்பரம்.

எனவே சுவரின் உட்புற பாதுகாப்பிற்கு ஏசியன் பெயிண்ட்ஸ் ஸ்மார்ட்கேர் ஹைட்ரோலாக் தான் சிறந்தது.

click me!