தங்கம் விலை மீண்டும் ஊசலாட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. தங்கம் விலை நேற்று குறைந்த நிலையில் இன்று உயர்ந்துள்ளது.
தங்கம் விலை கிடுகிடு உயர்வு: மீண்டும் ஊசலாட்டத்தை நோக்கி பயணம்: இன்றைய நிலவரம் என்ன?
தங்கம் விலை மீண்டும் ஊசலாட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. தங்கம் விலை நேற்று குறைந்த நிலையில் இன்று உயர்ந்துள்ளது.
தங்கம் விலை இன்று கிராம் ஒன்றுக்கு 25 ரூபாயும், சவரனுக்கு 200 ரூபாயும் விலை அதிகரித்துள்ளது.
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய நிலவரப்படி கிராம் ரூ.4,765க்கும், சவரன் ரூ.38,120க்கும் விற்கப்பட்டது.
உலகின் 3வது பெரிய பணக்காரர் ஆனார் கவுதம் அதானி!
தங்கம் விலை செவ்வாய்கிழமை(இன்று) காலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராம் ஒன்றுக்கு 25 ரூபாய் உயர்ந்து, ரூ.4,790 ஆகவும், சவரனுக்கு ரூ.200 அதிகரித்து, ரூ.38,320ஆகவும் விற்கப்படுகிறது.
கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.4790ஆக விற்கப்படுகிறது.
கடந்த வாரத்தைப் போல் இந்த வாரமும் தங்கம் விலை ஊசலாட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. வாரத்தின் முதல்நாளான நேற்று தங்கத்தின் விலை கிராமுக்கு 35 ரூபாயும், சவரனுக்கு ரூ.280 குறைந்துது. ஆனால், இன்று கிராமுக்கு 25ரூபாயும், சவரனுக்கு ரூ.200 அதிகரித்துள்ளது. இதனால் மீண்டும் தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது.
தீபாவளிக்குள் ரிலையன்ஸ் ஜியோ 5ஜி சேவை: முகேஷ் அம்பானி அறிவிப்புகளின் முக்கிய அம்சங்கள்
அமெரிக்க பெடரல் வங்கி வட்டிவீதத்தை உயர்த்தும் என்ற அச்சத்தால் அமெரிக்கப் பங்குப் பத்திரங்களுக்கான மதிப்பும் உயர்ந்தது, டாலர் மதிப்பு உயரத் தொடங்கியது.
இதனால் முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டை திரும்பப்பெற்று டாலரில் முதலீடு செய்து வருவதால் தங்கத்தின் மீதான முதலீடு குறைந்தது. இனிவரும் நாட்களில் டாலர் மதிப்பு வலுவடைந்தால், தங்கத்தின் விலையில் பெரிய ஏற்ற இறக்கம் இருக்கும் என்று சந்தை வல்லுநர்கள் தெரிவித்தனர்
வங்கியில் ஜீரோ பேலன்ஸா; கவலையை விடுங்க உங்களுக்கு கிடைக்கும் ரூ. 10000 கடன்; என்ன செய்யணும்?
வெள்ளி விலையும் இன்று சற்று உயர்ந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்று 10 பைசா உயர்ந்து, ரூ.60.10 ஆகவும், கிலோவுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.60,100க்கும் விற்கப்படுகிறது