tmb: tmb ipo: தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி IPO வரும் செப் 5ல் வெளியீடு: பங்கு விலையை தெரிஞ்சுங்கோங்க!

By Pothy Raj  |  First Published Aug 30, 2022, 1:58 PM IST

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி(TMB) வரும் செப்டம்பர் 5ம் தேதி ரூ.832 கோடி முதலீட்டுக்கான ஐபிஓ(IPO) வெளியிடுகிறது. ஒரு பங்கு விலை ரூ.500 முதல் ரூ.525 என நிர்ணயித்து அந்த வங்கி அறிவித்துள்ளது.


தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி(TMB) வரும் செப்டம்பர் 5ம் தேதி ரூ.832 கோடி முதலீட்டுக்கான ஐபிஓ(IPO) வெளியிடுகிறது. ஒரு பங்கு விலை ரூ.500 முதல் ரூ.525 என நிர்ணயித்து அந்த வங்கி அறிவித்துள்ளது.

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் பொதுப்பங்கு வெளியீடு செப்டம்பர் 5ம் தேதி தொடங்கி 7ம் தேதி முடிகிறது. ஆங்கர் முதலீட்டாளர்களுக்கு செப்டம்பர் 2ம் தேதி தொடங்குகிறது

Tap to resize

Latest Videos

தங்கம் விலை கிடுகிடு உயர்வு: மீண்டும் ஊசலாட்டத்தை நோக்கி பயணம்: இன்றைய நிலவரம் என்ன?

தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்ட தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி 1.58கோடி பங்குகளை விற்பனை செய்ய இருக்கிறது. தமிழ்நாடு மெர்கன்டல் வங்கி 100 ஆண்டுகள் பழமையான நம்பகத்தன்மையான வங்கியாக மக்கள் மத்தியில் விளங்கி வருகிறது. சிறு, குறு,நடுத்தர நிறுவனங்கள், வேளாண்மை மற்றும் சில்லரை வர்த்தகர்கள் ஆகிோயருக்கு பல்வேறு விதங்களில் கடனுதவியும், நிதிச்சேவையையும் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி அளித்து வருகிறது.

75 சதவீத முதலீடு நிறுவன முதலீட்டாளர்களிடமும், 15 சதவீதம் நிறுவனமில்லாத முதலீட்டாளர்களிடமும், 10 சதவீதம் சில்லரை முதலீட்டாளர்களிடமும் முதலீடு திரட்ட வங்கி முடிவு செய்துள்ளது. 

பங்குதாரர்களான டி பிரேம் பழனிவேல், பிரியா ராஜன், பிரபாகர் மஹாதியோ போப்டே, நரசிம்மன் கிருஷ்ணமூர்த்தி, எம் மல்லிகா ராணி, சுப்பிரமணியன் வெங்கடேஷ்வரன் ஐயர் ஆகியோர் வசம் இருக்கும் பங்குகள் விற்பனை செய்யப்பட உள்ளன.

உலகின் 3வது பெரிய பணக்காரர் ஆனார் கவுதம் அதானி!

பங்கு வெளியீடு தொடர்பாக ஐபிஓ ஆவணங்களை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் செபியிடம் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி தாக்கல் செய்தது, அதற்கு கடந்த மே மாதம் 30ம் தேதி செபி அனுமதியளித்துள்ளது.

2021, ஜூன்30ம்தேதி நிலவரப்படி, 509 கிளைகள் டிஎம்பி வங்கிக்கு உள்ளன. இதில் 247 வங்கிகள் சிறு நகரங்களிலும், 106 கிளைகள் கிராமங்களிலும், 80 கிளைகள் நகர்புறங்களிலும், 76 கிளைகள் மெட்ரோ நகரங்களிலும் செயல்படுகின்றன. 

ஏறக்குறைய 49.30 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளன, இதில் 70சதவீதத்துக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் 5 ஆண்டுகளுக்கும்மேலாக வங்கியில் தொடர்ந்து பரிமாற்றத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
 

click me!