உங்கப் பணம் கருப்பு பணமா ? நீங்களே ஆன்லைன்ல செக் பண்ணிக்கோங்க ...!!! வருமானவரித்துறையினர் கொடுத்த வாய்ப்பு ..!!!

Asianet News Tamil  
Published : Feb 03, 2017, 07:55 PM ISTUpdated : Sep 19, 2018, 03:03 AM IST
உங்கப் பணம் கருப்பு பணமா  ?  நீங்களே  ஆன்லைன்ல  செக்  பண்ணிக்கோங்க ...!!! வருமானவரித்துறையினர் கொடுத்த வாய்ப்பு ..!!!

சுருக்கம்

பழைய ரூபாய் நோட்டுகள் :

பழைய நோட்டு செல்லாது, என்ற அறிவிப்பு  வெளியான பிறகு, வங்கியில்  டெபாசிட் செய்த   பணம் எவ்வளவு எனவும்,வரம்புக்கு மீறி டெபாசிட் செய்திருந்தால், அது குறித்த  ஆய்வு  தற்போது வருமானவரைத்துரையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  

18 லட்சம் கணக்கு:

18 லட்சம் கணக்குகளில், இதுவரை கருப்பு பணம் டெபாசிட் வருமானவரித்துறையினர் சந்தேகிக்கின்றனர் .  இதற்கிடையில், பழைய நோட்டு டெபாசிட் செய்தவர்கள்( கருப்பு பணமாக  இருக்கலாம் )  தங்கள் வங்கிக் கணக்கு வருமான வரித்துறையால், சோதனை  செய்யப்பட்டு  வருகிறதா என்பதை தெரிந்துகொள்ள, தாமாகவே ஆன்லைனில் பார்த்துக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.

எப்படி ஆன்லைனில் பார்ப்பது :

இதுகுறித்து வருமான வரித்துறை வட்டாரங்கள் கூறுகையில், https://incometaxindiaefiling.gov.in என்ற இணையதளத்தில், 2016 பண பரிவர்த்தனை என்ற பகுதியில் விவரங்களை சரிபார்க்கலாம் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனை எவ்வாறு சரிபார்ப்பது குறித்த  அனைத்து  விவரங்களும் , அந்த இணையதளத்திலேயே  கொடுக்கப்பட்டுள்ளது  என்பது  குறிப்பிடத்தக்கது.

6௦  மாற்றங்கள் :

ரூபாய் நோட்டு செல்லாது என அறிவித்த பின்பு, 43 நாட்களிலேயே 60க்கும் மேற்பட்ட மாற்றங்களை மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் மேற்கொண்டன என்பது  குறிப்பிடத்தக்கது.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

உங்கள் பெயரில் எத்தனை கடன்கள் இருக்கிறது தெரியுமா.? ஒரே நிமிடத்தில் கண்டுபிடிக்கலாம்
இந்த சாதாரண பொருள் மாதம் ரூ.1 லட்சம் சம்பாதிக்க வைக்கும்! இந்த பிசினஸ் தெரியாம போச்சே