வங்கிகள்,ஏடிஎம் செல்லாமல் பணம்….புதிய நடைமுறையை அறிமுகம் செய்துள்ளது ஓடபோன்….

 
Published : Dec 14, 2016, 11:59 AM ISTUpdated : Sep 19, 2018, 02:48 AM IST
வங்கிகள்,ஏடிஎம் செல்லாமல் பணம்….புதிய நடைமுறையை  அறிமுகம் செய்துள்ளது ஓடபோன்….

சுருக்கம்

வங்கிகள்,ஏடிஎம் செல்லாமல் பணம்….புதிய நடைமுறையை  அறிமுகம் செய்துள்ளது ஓடபோன்….

500 மற்றும்  1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதையடுத்து  நாடு முழுவதும்  பண தட்டுப்பாடு  நிலவுகிறது. மேலும் பணம்  எடுப்பதற்கும் வங்கியில் பணம்   செலுத்துவதற்கும் பல்வேறுகட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி விதித்துள்ளது. இதனால் பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையங்களில் நீண்ட வரிசையில்  காத்திருந்த பின்னர்தான்  பொதுமக்கள் தாங்கள் சம்பாதித்த பணத்தை  எடுக்க முடிகிறது. 

இப்பிரச்சனையில் இருந்து பொதுமக்கள் சற்று விடுபட்டு கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ண வோடபோன் செல்லுலார் நிறுவனம் ஒரு புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்நிறுவனம் தனது எம்-பேசா பயனர்களின் டிஜிட்டல் வேலெட்டில் இருக்கும் தொகையை, பணமாக மாற்றி அதனை நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.

இதற்கென வோடபோன் நிறுவனம் 1 லட்சத்து 30 ஆயிரம் மையங்களை திறந்துள்ளது. வோடபோனின் எம்-பேசா சேவையினை நாடு முழுக்க 8 புள்ளி 4  மில்லியன் பேர் பயன்படுத்தி வருகின்றனர். 

எம்-பேசா செயலியைக் கொண்டு அருகாமையில் இருக்கும் எம்-பேசா மையத்தினை அறிந்து கொள்ள முடியும், அங்கு சென்று டிஜிட்டல் வேலெட்டில் இருக்கும் தொகையை மாற்றி அதனை பணமாக பெற்றுக் கொள்ள முடியும். இந்த சேவையை பயன்படுத்தி  வங்கிகளைப் போன்று நாள் ஒன்றுக்கு 2 ஆயிரம்  ரூபாய் மட்டுமே பெறமுடியும். இத்திட்டம் வெற்றிபெறும் பட்சத்தில் மற்ற செல்போன் நிறுவனங்களும் இதை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

அமெரிக்கா, சீனாவுக்கு இணையாக இந்தியா வளர 30 ஆண்டுகள் ஆகலாம்: ரகுராம் ராஜன்
IndiGo: 10,000 கார்கள், 9,500 ஹோட்டல் அறைகள், ரூ.827 கோடி ரீஃபண்ட்... மீண்டும் மீண்டு வந்த இண்டிகோ!