dollar vs rupee இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்று வீழ்ச்சி: காரணம் என்ன?ரிசர்வ் வங்கி தலையிடுமா?

By Pothy RajFirst Published Jun 13, 2022, 10:47 AM IST
Highlights

indian currency: dollar to rupee usd to inr : inr : அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாற்றில் இல்லாத வகையில் முதல்முறையாக 78 ரூபாய்க்கும் கீழ் இன்று  சரிந்தது. 

indian currency: dollar to rupee usd to inr : inr : அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாற்றில் இல்லாத வகையில் முதல்முறையாக 78 ரூபாய்க்கும் கீழ் இன்று காலை வர்த்தகத்தில்  சரிந்தது

டாலர்கள் வெளியேற்றம் அதிகமாக இருப்பதால் இன்று காலை அந்நியச் செலாவணிச் சந்தையில் வர்த்தகம் தொடங்கியது முதல் இந்திய ரூபாய்க்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது சரிந்து வருகிறது. 

என்ன காரணம்
அமெரிக்காவில் கடந்த மே மாதம் பணவீக்கம் 8.6 சதவீதமாக உயர்ந்துள்ளது. அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி எதிர்பார்த்த அளவைவிட பணவீக்கம் அதிகரி்த்து 40 ஆண்டுகளில் இல்லாத அளவு உயர்ந்துள்ளது.

இதனால், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த பெடரல் வங்கி வட்டிவீதத்தை உயர்த்த தீவிரம் காட்டியுள்ளது.அமெரிக்க பெடரல் வங்கி (ஜூன் 14,15)நாளை மற்றும் நாளைமறுநாள் நடக்கும் நிதிக்கொள்கை கூட்டத்தில் வட்டிவீதத்தை 50 முதல் 75 புள்ளிகள் வரை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க பெடரல் வங்கி ஏற்கெனவே வட்டிவீதத்தை உயர்த்தி வருவதால்தான் இந்தியப் பங்குச்சந்தையிலிருந்து அந்நிய முதலீட்டாளர்கள் பங்குகளை விற்று முதலீட்டை திரும்பப் பெற்று வருகிறார்கள். அந்நிய முதலீட்டாளர்கள் தங்களின் முதலீட்டை பாதுகாப்பாக அமெரிக்க பங்குப்பத்திரங்களில் முதலீடு செய்து வருகிறார்கள்.

அடுத்த சில நாட்களில் பெடரல் வங்கி வட்டிவீதத்தை உயர்த்தும் என்ற தகவலால் இன்று காலை முதல் அந்நிய முதலீட்டாளர்கள் முதலீட்டை திரும்பப்பெறுவது அதிகரித்தது . இதனால், டாலரின் தேவை சந்தையில் அதிகரித்துள்ளதால், ரூபாயின் மதிப்பு காலை வர்த்தகம் தொடங்கியதிலிருந்து மளமளவெனச் சரிந்தது.

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்தியரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத வகையில் முதலமுறையாக ரூ.78.28 பைசாவுக்கு சரிந்தது. வெள்ளிக்கிழமை வர்த்தகம் முடிவில் ரூபாய் மதிப்பு டாலருக்கு எதிராக ரூ.77.83 பைசாவாக இருந்தது. இன்று காலை வர்த்தகம் தொடங்கியது முதல் 45 பைசா சரிந்தது.

ஏற்கெனவே அந்நிய முதலீட்டாளர்கள் முதலீட்டை திரும்பப் பெறுவது அதிகரி்த்து வருகிறது. 2022ம் ஆண்டில் மட்டும் ரூ.1.81 லட்சம் கோடியை அந்நிய முதலீட்டாளர்கள் முதலீட்டை திரும்பப் பெற்றுள்ளனர். அமெரிக்கச்சந்தை நிலையான போக்கிற்கு வரும்வரை இந்தியச் சந்தையில் பெரும் ஏற்றத்தாழ்வு இருக்கும்.

இதுபோன்ற நேரங்களில் அதாவத இந்திய ரூபாயின் மதிப்பு அதளபாதாளத்துக்குச் செல்லும்போது, ரிசர்வ் வங்கி தலையிட்டு தன்னிடம் இருக்கும் டாலர்களை சந்தையில் வெளியிட்டு ரூபாய் மதிப்பு மேலும் சரிவடையாமல் தடுக்கும். அதுபோல் ரிசர்வ் வங்கி தலையிடுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த மாதத்தில் மட்டும் அந்நிய முதலீட்டாளர்கள் ரூ.14 ஆயிரம் கோடி முதலீட்டை வெளியே எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!