lic share price: எல்ஐசிய மறந்திருங்க! இந்த ஐபிஓவைப் பாருங்க: 8 மாதத்தில் 470% லாபம்: ரூ.6 லட்சமாக உயர்வு

Published : Jun 13, 2022, 08:47 AM ISTUpdated : Jun 13, 2022, 09:22 AM IST
lic share price: எல்ஐசிய மறந்திருங்க! இந்த ஐபிஓவைப் பாருங்க: 8 மாதத்தில் 470% லாபம்:  ரூ.6 லட்சமாக உயர்வு

சுருக்கம்

lic share price:எல்ஐசி பங்குகளில் முதலீடு செய்தவர்கள் தலையில் கைவைத்து அமர்ந்திருக்க, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிட்ட இந்த நிறுவன ஐபிஓவில் முதலீடு செய்தவர்களுக்கு 470 சதவீதம் லாபம் கிடைத்துள்ளது.

எல்ஐசி பங்குகளில் முதலீடு செய்தவர்கள் தலையில் கைவைத்து அமர்ந்திருக்க, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிட்ட இந்த நிறுவன ஐபிஓவில் முதலீடு செய்தவர்களுக்கு 470 சதவீதம் லாபம் கிடைத்துள்ளது.

எல்ஐசியில் மத்திய அரசு வைத்திருக்கும் பங்குகளில் 3.5சதவீதத்தை மட்டும் சந்தையில் விற்பனை செய்து ரூ.21ஆயிரம் கோடி நிதி திரட்டியது. இந்த பங்கு விலை ஒன்று ரூ.949 என்று நிர்ணயம் செய்யப்பட்டு லிஸ்டிங் செய்யப்படும்போது ர8 சதவீதம் குறைவாக ரூ.872 என நிர்ணயம் செய்யப்பட்டது.

அதிலிருந்து எல்ஐசி பங்கு விலை தொடர்ந்து சரிவுடனே காணப்படுகிறது. பொதுத்துறை நிறுவனத்தின் பங்கு லாபமீட்டலாம் என்று எண்ணி பங்கு வாங்கிய சில்லரை முதலீட்டாளர்கள், பாலிசிதாரர்கள், எல்ஐசி ஊழியர்கள் அனைவரும் கண்ணீர் விடுகிறார்கள். 

எல்ஐசி பங்கு பங்கு வர்த்தகத்தில் இதுவரை அதிகபட்சமாக ரூ.920 வரை விற்பனையாகியுள்ளது, குறைந்தபட்சமாக ரூ.720 வரை ஒரு பங்குவிலை சென்றது. வெள்ளிக்கிழமை பங்குச்சந்தை ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சியுடன் முடிந்தது. எல்ஐசி பங்கு விலை மேலும் சரிந்து ஒரு பங்கு ரூ.709.70க்கு விற்பனையானது. 

 ரூ.6 லட்சத்து 242 கோடியாக இருந்த எல்ஐசி பங்கு மதிப்பு, ரூ.42 ஆயிரத்து 500 கோடி குறைந்து, ரூ.5 லட்சத்து 57ஆயித்து 675 கோடியாகக் குறைந்தது. 

ரூ.6 லட்சம் கோடியாக இருந்த எல்ஐசி நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.4.59 லட்சம் கோடியாகக் குறைந்துவிட்டதை எண்ணி முதலீட்டாளர்கள் கண்ணீர் விடுகிறார்கள்.

ஆனால் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கோட்யார்க் இன்டஸ்ட்ரீஸ்(kotyark industries) நிறுவனம் ஐபிஓ வெளியிட்டது. இந்த ஐபிஓவில் முதலீடு செய்தவர்களுக்கு 8 மாதத்தில் 470 சதவீதம் லாபம் கிடைத்துள்ளது.

கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் கோட்யார்க் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ஐபிஓ வெளியிட்டது. நவம்பர் மாதம் பங்குச்சந்தையில் லிஸ்டிங் செய்யப்பட்டது. பங்குச்சந்தையில் வெளியிடும்போது பங்கு விலை ரூ.51 ஆக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த நிறுவனப் பங்கு மதிப்பு ரூ291 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டு கோட்யார்க் நிறுவனம் ஐபிஓ வெளியிட்டு ரூ.11.26 கோடி திரட்டியது. பங்குகளும் 7.15 மடங்கு வாங்கப்பட்டது. ஒரு செட் பங்கு மதிப்பு ரூ.1.02 லட்சம் என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த பங்குகளை வாங்கி முதலீட்டாளர்ளுக்கு ஜாக்பாட் அடித்தது போன்று அடுத்தடுத்து லாபம் கொட்டத்த ொடஹ்கியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் கூட கோட்யார்க் நிறுவனத்தின் பங்குகள் 7 சதவீதம்லாபமடைந்தன. கோட்யார்க் நிறுவனத்தில் ஒரு செட் பங்கு அதாவது ரூ.1.02 லட்சம் முதலீடு செய்தவர்களின் பங்கு மதிப்பு இன்று ரூ.6 லட்சமாக உயர்ந்துள்ளது.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

SBI to Hire: ஸ்டேட் பேங்கில் செம்ம வேலை வாய்ப்பு... ஒவ்வொரு காலாண்டுக்கும் 16000 பேருக்கு வேலை..! 300 புதிய கிளை திறக்கப்படும்.!
AI City Rising: பாலைவனத்தில் உருவாகும் பிரமாண்ட "ஏஐ" தொழில் நகரம்.! அரபு நாடுகளில் உருவாகிறதா "போட்டி" சிலிகன் வேலி?!