cryptocurrency:இந்தியாவில் டிஜிட்டல் ருப்பி உருவாக்கப்படுவதைப் போல், அமெரிக்காவிலும் டிஜிட்டல் டாலரை உருவாக்கும் உத்தரவில் அதிபர் ஜோ பிடன் இன்று கையொப்பமிடுவார் எனத் தெரிகிறது.
இந்தியாவில் டிஜிட்டல் ருப்பி உருவாக்கப்படுவதைப் போல், அமெரிக்காவிலும் டிஜிட்டல் டாலரை உருவாக்கும் உத்தரவில் அதிபர் ஜோ பிடன் இன்று கையொப்பமிடுவார் எனத் தெரிகிறது.
'டிஜிட்டல் டாலர்
அமெரிக்காவில் கிரிப்டோகரன்சிகளான பிட்காயின், எத்திரியம் போன்றவற்றில் முதலீடு செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துவி்ட்டது. ஆதலால், அதிகாரபூர்வ டிஜிட்டல் டாலர் உருவாக்குவது குறித்தும்,அதன் நன்மைகள், ரிஸ்க் ஆகியவற்றை பற்றி ஆய்வு செய்யும் உத்தரவில் அதிபர் பிடன் இன்று கையொப்பமிடுகிறார்.
அமெரிக்க நிதிஅமைச்சகம் மற்றும் வர்த்தக அமைச்சகம்இணைந்து டிஜிட்டல் டாலர் உருவாக்குவது குறித்து ஆய்வு செய்து அதன் சாத்தியக்கூறுகளை அரசிடம் தெரிவிக்கும்.
அதிகரிப்பு
உலகளவில் கிரிப்டோகரன்சிகளின் மீதான முதலீடு, புழக்கம், டிஜி்ட்டல் பேமெண்ட் வசதி அதிகரித்துள்ளது. இதனால் அதிகாரபூர்வமாக டிஜிட்டல் டாலரை உருவாக்கிவிடலாம் என்று அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
உலகளவில் பல நாடுகள் டிஜிட்டல் கரன்சி உருவாக்கும் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்யத்தொடங்கிவிட்டன். நைஜிரியா கடந்த ஆண்டு அக்டோபர் மாதமே தங்களுக்குரிய விர்ச்சுவல் கரன்சியை அறிமுகப்படுத்திக்கொண்டது. எல்சால்வடார் நாடு பிட்காயினை அதிகாரபூர்வமாக்கியது. இந்தியாவும் இந்தஆண்டுக்குள் டிஜிட்டல் ரூபாயை அறிமுகம் செய்யும் என நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார்.
100 நாடுகள்
டிஜிட்டல் கரன்சியை உருவாக்கும் திட்டத்தில் உலகளவில் 100 நாடுகள் பரிசோதனை முயற்சியில்ஈடுபட்டுள்ள நிலையில் அதில் உலகின் மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட அமெரிக்காவும் இன்று இணைகிறது.
இதுகுறித்து அமெரிக்க நிதித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில் “ நாங்கள்இதை தாமதமாகச்செய்யவில்லை.உலகளவில் டாலரில்தான் ஒட்டுமொத்த வணிகமே நடக்கிறது. டிஜிட்டல் டாலர் உருவாக்குவது குறித்து மிகுந்த வெளிப்படையாக ஆய்வு நடத்த இருக்கிறோம். அதன் தாக்கம் என்ன, பாதகம், சாதகம் ஆகியவற்றை தெளிவாக அறிய இருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.
நம்பிக்கை
அமெரிக்கா டிஜிட்டல் டாலரை புழக்கத்துக்கு கொண்டுவந்தாலும், உலகளவில் டாலரில் வர்த்தகம் செய்வதுதான் முக்கியமான அமையும் என அமெரிக்க அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.
டிஜிட்டல் கரன்சி புழக்கம்
கடந்த சில ஆண்டுகளாக கிரிப்டோகரன்சி உள்ளிட்ட டிஜிட்டல் சொத்துக்கள் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்வந்த கிரிப்டோகரன்சி கடந்த நவம்பரில் 3 லட்சம் கோடியைக் கடந்துள்ளது. அமெரிக்காவில் 16% வயதுவந்தோர் ஏறக்குறைய 4 கோடி பேர் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்து, வர்த்தகம் செய்து வருகிறார்கள்
அளவுக்கு அதிகமாக கிரிப்டோகரன்சி புழக்கம் அமெரிக்க பொருளாதாரத்துக்கு ஆபத்து, வர்த்தகம், தொழில், நிதித்துறை, தேசியப் பாதுகாப்பு ஆகியவற்றையே அசைத்துப்பார்த்து ஆபத்தில் முடிந்திவிடும் என்றும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.