
இந்தியாவிலிருந்து மருத்துவப் படிப்பு படிப்பதற்காக மாணவர்கள் ஏன் வெளிநாட்டுக்குச் செல்கிறார்கள். இந்தியாவில் இல்லாத வசதியா. கம்ப்யூட்டர் சிப்பில் கவனம் செலுத்துவதை விட்டு மனிதவளத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் விளாசியுள்ளார்.
ரஷ்யா உக்ரைன் போர்
ரஷ்யா உக்ரைன் இடையே நடந்துவரும் போரில் ஏராளமான இந்திய இளைஞர்கள், உக்ரைனில் சிக்கியிருந்தனர். அவர்களை நீண்ட போராட்டத்துக்குப்பின்புதான் மத்திய அரசு மீட்டு வந்தது. இந்திய மாணவர்கள் மருத்துவப் படிப்பை வெளிநாட்டில் சென்று படிப்பது பொருளாதார ரீதியாக நாம் வெளிநாடுகளில் சென்று நம்முடைய வளத்தை அளிக்கிறோம். அதுமட்டுமல்லாமல் உயர்கல்விக்குத் தேவையான வசதிகளும் இங்கு போதுமான அளவு இல்லை என்பதைத்தான் காட்டுகிறது.
ஆயிரக்கணக்கான மருத்துவ படிப்பு இடங்களுக்கு பல லட்சக்கணக்கான மாணவர்கள்போட்டியிடுவதால், ஏற்படும் விளைவுதான் வெளிநாடுகளில் சென்று மாணவர்கள் படிப்பதாகும்.
10 ஆண்டுகள்
ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன், சிஎன்பிசி தொலைக்காட்சி சேனலுக்கு இதுதொடர்பாக பேட்டியளித்துள்ளார். அவர் கூறியதாவது:
கடந்த 10 ஆண்டுகளாக நம்முடைய நாட்டின் பொருளாதாரம், பொருளதார மாடல் சராசரிக்கும் குறைவாகத்தான் இருக்கிறது. அதனால்தான் ஆயிரக்கணக்கானோர் இன்னும் வேலையி்ல்லாமல் இருக்கிறார்கள்.
மருத்துவப்படிப்பு
நான் கேட்கிறேன், ஏன் மாணவர்கள் இந்தியாவிலிருந்து வெளியேறி வெளிநாட்டுக்குப் மருத்துவம் படிக்கச் செல்ல வேண்டும். அதிலும் குறிப்பாக வெளிநாட்டில் உள்ள நோயைப் பற்றி படிக்க ஏன் செல்கிறார்கள். மீண்டும் இந்தியாவுக்கு திரும்பும்போது, அதை இந்தியாவில் செயல்படுத்துவதும் கடினமானாக இருக்கும். மனிதவளத்தை எதற்காக மிகப்பெரிய அளவில் நாம் ஏற்றுமதி செய்கிறோம். இந்தியாவில் மனிதவளத்தை தக்கவைக்க முடியாதா.நம்முடைய பலம் எதுவோ அதில் கவனம் செலுத்த வேண்டும்.
சராசரிக்கும் குறைவான வளர்ச்சி
கடந்த 10 ஆண்டுகளாகவே சராசரிக்கும் குறைவான வளர்ச்சியுள்ள பொருளாதார மாடலையே இந்தியா பின்பற்றுகிறது. அதனால்தான் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள். உண்மையிலேயே நாம் குறைவான செயல்திறனோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். இதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்.
ஐடி துறை
பணமதிப்பிழப்புக்குப்பிலிருந்து நாம் இன்னும் வலிமையாக மீண்டுவரவில்லை. ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. நம்முடைய சேவைத்துறை ஏற்றுமதி சிறப்பாகச் செயல்பட்ட காலம் இருந்ததை நாம் மறந்துவிடக்கூடாது.
தகவல்தொழில்நுட்பத்துறையில் இருக்கும் எனது நண்பர்களிடம் நான் தெரிவித்தது என்னவென்றால், ஐடி துறையில் திறமையானவர்களை கண்டுபிடிப்பது கடினம் அதை நாம் செய்துவருகிறோம் என்றேன்.
சிப் தொழிற்சாலை
நான் சிறிய உதாரணம் மூலம் விளக்குகிறேன். கம்ப்யூட்டர் சிப் தொழிற்சாலை தயாரிக்கும் நிறுவனம், உலகளவில் போட்டியிட 10 முதல் 2000 கோடி தேவை. இதைத்தான் இன்டெல் நிறுவனமும் கூறுகிறது.
சிப் உருவாக்கத்துக்காக உயர்தர விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களைக் கொண்ட உயர்தர பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் எத்தனை உருவாக்கலாம் என்று சிந்தியுங்கள்;. சிப்பை உருவாக்காமல் எவ்வளவு சாப்ட்வேர், எவ்வளவு சிப் டிசைன் செய்ய முடியும் என்று யோசியுங்கள். மனித வளத்தில் கவனம் செலுத்த வேண்டும், சிப்பில் அல்ல
இவ்வாறு ரகுராம் ராஜன் தெரிவித்தார்
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.