nlem:புற்றுநோய் மருந்து, ஆன்டிபயாடிக்ஸ் விலை குறையும்! அத்தியாவசிய பட்டியலில் 34 மருந்துகள் சேர்ப்பு

By Pothy RajFirst Published Sep 14, 2022, 10:18 AM IST
Highlights

புற்றுநோய்க்கு எதிரான பல மருந்துகள், ஆன்ட்டிபயாட்டிக்ஸ், தடுப்பூசிகள் ஆகியவற்றின் விலை குறையும். மத்திய அரசு புதிதாக 34 மருந்துகளை அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் சேர்த்துள்ளது. அதேநேரம் 26 மருந்துகளை நீக்கியுள்ளது.

புற்றுநோய்க்கு எதிரான பல மருந்துகள், ஆன்ட்டிபயாட்டிக்ஸ், தடுப்பூசிகள் ஆகியவற்றின் விலை குறையும். மத்திய அரசு புதிதாக 34 மருந்துகளை அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் சேர்த்துள்ளது. அதேநேரம் 26 மருந்துகளை நீக்கியுள்ளது.

புற்றுநோய்க்கு எதிரான மருந்துகள் விலை அதிகரிப்பால் மக்கள் படும் சிரமத்தைக் கருத்தில் கொண்டு 34 மருந்துகள் அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. 

எலான் மஸ்க் என்ன செய்வார்? ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தத்துக்கு பங்குதாரர்கள் ஒப்புதல்

தொற்றுநோய்க்கு எதிரான மருந்தான ஐவர்மெக்டின், முபிரோசின், மெரோபீனம் ஆகியவை 34 மருந்துகள் பட்டியலில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் படி அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் மருந்துகள் எண்ணிக்கை 384 ஆக அதிகரித்துள்ளது.

புற்றுநோய்க்கு எதிரான மருந்தான பென்டாமஸ்டின் ஹெட்ரோகுளோரைட், ஐரினோடிகேன் ஹெச்சிஐ டிரிஹைட்ரேட், லெனாலிடோமைட், லீபுரோலிட் ஆகியவை அத்தியாவசிய மருந்துகள் பட்டியலி்ல் சேர்க்கப்பட்டுள்ளன.இது தவிர உளவியல் சார் மருந்துகள், நிகோடின் நீக்கு மருத்துவத்துக்கான மருந்துகளான புபிரினோபிரின் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன.

அதேநேரம், ரானிடிடின், சக்ரால்பேட், வெயிட் பெட்ரோலியம், அடினோலால், மெதில்டோபா, உள்ளிட்ட 26 மருந்துகள் அத்தியாவசிய பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. செலவு செய்யும் திறன், சிறந்த மருந்துகள் கிடைக்கும் அளவு ஆகியவற்றின் அடிப்படையில் 26மருந்துகள் நீக்கப்பட்டுள்ளன. 

சராசரி குடும்பத்தை பற்றி நினைக்கவில்லை! நிர்மலா சீதாராமனை விளாசிய ப.சிதம்பரம்

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ட்விட்டரில் பதிவிட்ட செய்தியில் “ 2022ம் ஆண்டுக்கான தேசிய அத்தியாவசிய மருந்துகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் 27 பிரிவுகளில் 384 மருந்துகள்சேர்க்கப்பட்டுள்ளன. பல்வேறு ஆன்ட்டிபயோடிக்ஸ், தடுப்பூசிகள், புற்றுநோய்க்கு எதிரான மருந்து உள்ளிட்ட பல்வேறு முக்கிய மருந்துகள் விலை குறைவாகவும், நோயாளிகள் அதிகமாக செலவிடவேண்டாத வகையிலும் குறைக்கப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார்.

திருத்தப்பட்ட பட்டியலில், என்டோகிரின் மருந்துகள், கான்ட்ராசெப்டிவ் ப்ளோட்ரோக்ரோடிசோன், ஓர்மெல்லோஸ்பென், இன்சுலின் கிளார்ஜின், டெனிலெட்டின் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. 

நுரையீரல் பாதுகாப்புக்கு மருந்தான மான்டெலுகாஸ்ட், கண்சிகிச்சைக்கான லாடன்னோப்ரோஸ்ட், இதயநோய்களுக்கான டாபிகாட்ரன், டெனிசெட்பிளாஸ் ஆகியவையும்சேர்க்கப்பட்டுள்ளன.

ஆகஸ்ட் சில்லறைப் பணவீக்கம் 7சதவீதமாக உயர்வு: வட்டி வீதத்தை உயர்த்த ஆர்பிஐக்கு நெருக்கடி

மருந்துகளுக்கான தேசிய நிலைக்குழு துணைத் தலைவர் மருத்துவர் ஒய்கே குப்தா கூறுகையில் “ தொற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளான ஐவர்மெக்டின், மெரோபினம், சிபோரோக்ஸிம், அமிகாசின், பெடாகுயிலின், டெலாமான்டிட், ஐட்ராகோனாஜோல் ஏபிசி ஆகியவை அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. நாய்கடிக்கு எதிரான தடுப்பூசியாந ரோடாவைரஸ் தடுப்பூசியும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்

click me!