
2025ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் சீதாராமன் தனிநபர் வருமான வரி உச்ச வரம்பை உயர்த்தி இருக்கிறார். ரூ.12 லட்சம் வரை ஆண்டு வருமானம் ஈட்டுவோருக்கு வருமான வரியிலிருந்து விலக்கு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.7 லட்சமாக இருந்த வரம்பு இந்த பட்ஜெட்டில் அதிகரிக்கப்பட்டுள்ளது.
வருமான வரி விலக்கு உயர்வு:
2025 பட்ஜெட்டில் ரூ.12 லட்சம் வரை வருமான வரி விலக்கு அளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாதம் ரூ.1 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்கள் வருமான வரி செலுத்தத் தேவையில்லை. இத்துடன் கூடுதலாக ரூ.75,000 நிலையான கழிவும் பெறலாம்.
வீட்டு வாடகைக்கான TDS உச்ச வரம்பு ரூ.6 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் 2 வீடுகள் வைத்திருப்பவர்கள் வருமான வரியில் சலுகை பெறலாம் என்று கூறியுள்ளார்.
புதிய வருமான வரி மசோதா:
புதிய வருமான வரி சட்ட மசோதா அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். ஏற்கெனவே உள்ள வருமான வரி செலுத்தும் நடைமுறையை மேலும் எளிமையாக்கும் வகையில் புதிய சட்ட மசோதா இருக்கும் என மத்திய அரசு கூறியிருந்த நிலையில் மத்திய பட்ஜெட்டில் இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
புதிய மசோதா வரி செலுத்துவோர் புரிந்துகொள்வதற்கு எளிமையாக இருக்கும் என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். திருக்குறளை மேற்கோள் காட்டிப் பேசிய அவர், "வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் கோல்நோக்கி வாழுங் குடி" என்ற குறளின் அடிப்படையில் வருமான வரி தொடர்பான அறிவிப்புகள் இருக்கும் என்றார்.
தனிநபர் வருமான வரி தொடர்பான அறிவிப்புகள் நடுத்தர வர்க்கத்தினருக்கு நிவாரணம் வழங்கவதில் கவனம் செலுத்துவதாக இருக்கும் எனவும் குறிப்பிட்டார்.
புதிய வருமான வரிச் சட்டங்கள், தாக்கல் செய்யப்பட்டபடியே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால், புதிய 2025-26 நிதியாண்டின் தொடக்கமான ஏப்ரல் 1, 2025 முதல் அமலுக்கு வரும் எனவும் நிதிமையச்ச்சர் அறிவித்துள்ளார்.
Budget 2025: கிசான் கிரெடிட் கார்டு மூலம் ரூ.5 லட்சம் வரை கடன்! மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு!
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.