
2025ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் விவசாயத் துறையை முன்னேற்றுவதற்கும், இந்தத் துறையைத் தொடர்ந்து பாதிக்கும் பல்வேறு சவால்களைச் சமாளிக்க உதவுவதற்கும் முக்கியத்துவம் அளித்துள்ளது. கிசான் கிரெடிட் கார்டு மூலம் வழங்கப்படும் கடன் வரம்பு அதிகரிப்பு, தானியங்கள் மற்று் பஞ்சு உற்பத்திக்கான சிறப்புத் திட்டங்கள், பீகார் மாநிலத்தில் மக்கானா உற்பத்தியை ஊக்குவிக்கம் திட்டம் உள்ளிட்ட அறிவுப்புகள் வெளியாகியுள்ளன.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுன்றத்தில் 2025-26 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். இந்த பட்ஜெட்டில், முன்மொழியப்படும் வளர்ச்சி நடவடிக்கைகள் ஏழைகள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிப்பவை என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.
இந்த பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு என்னென்ன அறிவிப்புகள் உள்ளன என்பதை இங்கே பார்க்கலாம்.
Budget 2025 LIVE Updates: நிர்மலா சீதாராமன் சேலையின் சிறப்பு என்ன?
விவசாயத் துறைக்கான முக்கிய அறிவிப்புகள்:
பிரதமர் தன் தானிய கிருஷி யோஜனா: பிரதமர் தன் தானிய கிருஷி யோஜனா என்ற பெயரில் வேளாண் மாவட்டங்களை மேம்படுத்தும் திட்டம் அறிமுகம். மாநிலங்களுடன் இணைந்து செயல்படுத்தப்படும் இத்திட்டம் மேற்கொள்ளும். தற்போதுள்ள திட்டங்கள் மற்றும் சிறப்பு நடவடிக்கைகளின் ஒருங்கிணைப்பு மூலம், இந்த திட்டம் குறைந்த உற்பத்தித்திறன், மிதமான மகசூல் கொண்ட 100 மாவட்டங்கள் பயன் அடையும்.
இது இந்த மாவட்டங்களின் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. வேளாண் விளைபொருட்களை விளைச்சலை அதிகரிக்கும் இந்தப் புதிய திட்டம் மூலம் 1.7 கோடி விவசாயிகள் பயனடைவார்கள்.
யூரியா உற்பத்திக்கு சிறப்புத் திட்டம்: அசாமின் நம்ரூப்பில் ஆண்டுக்கு 12.7 லட்சம் மெட்ரிக் டன் யூரியா உற்பத்தி திறன் கொண்ட ஆலை அமைக்கப்பட உள்ளது.
கிழக்கு பிராந்தியத்தில் செயலற்ற நிலையில் இருந்த 3 யூரியா ஆலைகள் மீண்டும் திறக்கப்பட்டன.
பீகார் மாநிலத்துக்கு சிறப்பு திட்டம்: மக்கானா விவசாயத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பயன் அடைவார்கள். கூட்டுறவு அமைப்புகளுடன் இணைந்து இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
கிசான் கிரெடிட் கார்டு: கிசான் கிரெடிட் கார்டு மூலம் வழங்கப்படும் குறுகிய காலக் கடன் வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது கிசான் கிரெடிட் கார்டு வைத்திருக்கும் விவசாயிகள் ரூ.5 லட்சம் வரை குறுகிய கால கடன் பெறலாம். முன்பு இந்த வரம்பு ரூ.3 லட்சமாக இருந்தது.
பஞ்சு உற்பத்தியை அறிவிக்க சிறப்புத் திட்டம் அறிவிப்பு.
மத்திய பட்ஜெட் 2025: ரயில்வே, பாதுகாப்பு, ஐடி, சுகாதாரம், மருத்துவம் - எதிர்பார்ப்புகள்
இந்தியாவில் விவசாயத்துறையின் பங்களிப்பு:
சுதந்திரம் பெற்றதில் இருந்து, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத் துறை முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது. 1950-1951 நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 59% பங்களிப்பு விவசாயத் துறையிலிருந்து வந்தது. இன்னும் நாட்டின் வளர்ச்சியில் விவசாயத் துறையின் பங்கு முக்கியப் பகுதியாக உள்ளது.
2025 மத்திய பட்ஜெட்டில் விவசாயத் துறை முக்கிய கவனம் பெறுவதற்கான மற்றொரு காரணம், நாட்டின் மொத்த மக்கள்தொகையில் அனைவரையும் பாதிக்கும் துறையாக விவசாயத் துறை உள்ளது. வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடும் போது, இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 54.6% பேர் விவசாயத் துறையில் ஈடுபட்டுள்ளனர்.
டெலாய்ட் இந்தியா தரவுகளின்படி, விவசாயத் துறைக்கு வரும்போது 2025 மத்திய பட்ஜெட்டில் குறிப்பாக மூன்று எதிர்பார்ப்புகள் உள்ளன. ஒட்டுமொத்த விளைச்சலை மேம்படுத்த உதவுவதற்காக திட்டத்தை உருவாக்குவதற்கான பட்ஜெட் ஒதுக்கீடு முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.
இரண்டாவதாக, விதைகளின் வளர்ச்சி மற்றும் மகசூலை உயர்த்துவதற்கான அறிவிப்பு இருக்கலாம் என்று விவசாயிகள் எதிர்நோக்குகின்றனர். விவசாயம் தொடர்பான சேவைகளை விரைவாகப் பெறுவதற்கான சிறந்த டிஜிட்டல் வழிமுறைகள் உருவாக்கப்படும் என்பதும் வேளாண் அமைப்புகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மத்திய பட்ஜெட் 2025: ரயில்வே, பாதுகாப்பு, ஐடி, சுகாதாரம், மருத்துவம் - எதிர்பார்ப்புகள்
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.