.வருமான வரி உச்சவரம்பில் எந்த மாற்றமும் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-2025-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். அப்போது கடந்த 10 ஆண்டுகளில் பாஜக அரசின் சாதனைகளை பட்டியலிட்ட அவர் இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக முன்னேறி வருகிறது என்று கூறினார். மேலும் வருமான வரி உச்சவரம்பில் எந்த மாற்றமும் இல்லை என்று அறிவித்தார்.
மேலும் “ மக்களின் சராசரி வருவாய் 50% உயர்ந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். 4 கோடி பேருக்கு இலவச வீடுகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் அடுத்த 5 ஆண்டுகளில் 2 கோடி பேருக்கு இலவச வீடுகள் வழங்கப்படும் எனவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
undefined
ஒரு கோடி வீடுகளுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம்.. இடைக்கால பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு..
"கோவிட் கால கட்டத்தில் சவால்கள் இருந்தபோதும், பிரதமர் ஆவாஸ் யோஜனா கிராமப்புற திட்டத்தை செயல்படுத்துவது தொடர்ந்தது. மேலும் 3 கோடி வீடுகள் என்ற இலக்கை எட்ட திட்டமிடப்பட்டுள்ளது. குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தேவையை பூர்த்தி செய்ய அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 2 கோடி வீடுகள் காட்டப்படும்" என அவர் குறிப்பிட்டார்.
40,000 சாதாரண ரயில் பெட்டிகள் வந்தே பாரத் தரத்திற்கு தரம் உயர்த்தப்படும். விமான நிலையங்களின் எண்ணிக்கை 149 ஆக உயர்த்தப்படும். இந்திய விமான நிறுவனங்கள் 1,000 புதிய விமானங்களுக்கு ஆர்டர் செய்துள்ளன என்றும் அவர் கூறினார்.
ஆஷா மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு காப்பீடு வழங்கப்படும். ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க திட்டங்களை உருவாக்க 1 லட்சம் கோடி நிதி வழங்கப்படும். 5 ஒருங்கிணைந்த கடல்சார் பூங்கா அமைக்கப்படும்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் வருமான வரி உச்சவரம்பில் எந்த மாற்றமும் இல்லை என்று அறிவித்தார். இதுகுறித்து பேசிய போது நாட்டில் வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 8 கோடிக்கும் அதிகரித்துள்ளது. வரி செலுத்துவோருக்கு நான் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.வருமான வரி உச்சவரம்பில் எந்த மாற்றமும் இல்லை. தற்போதைய வருமான வரி விகிதமே அமலில் இருக்கும். இறக்குமதி வரிகள் உட்பட நேரடி மற்றும் மறைமுக வரி விகிதங்களுக்க ஏற்கனவே உள்ள விகிதங்களே தொடரும்.” என்று தெரிவித்தார்.
Union budget 2024 இந்தியாவில் 2 கோடி பெண்கள் லட்சாதிபதிகள்: நிர்மலா சீதாராமன் தகவல்!
இது இடைக்கால பட்ஜெட் என்பதால் எந்த புதிய அறிவிப்பும் சலுகைகளும் இருக்காது என்று கூறப்பட்டாலும், வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் இருக்குமா என்பது பலரின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் அதில் எந்த மாற்றமும் இல்லை என்று நிதியமைச்சர் அறிவித்துள்ளார். வெறும் 58 நிமிடங்கள் மட்டுமே நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை நிகழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.