லட்சத்தீவு உள்ளிட்ட தீவுகளில் சுற்றுலாவை மேம்படுத்த புதிய உள்கட்டமைப்பு வசதிகள்: நிர்மலா சீதாராமன்

By SG Balan  |  First Published Feb 1, 2024, 12:30 PM IST

லட்சத்தீவு உள்ளிட்ட தீவுகளில் உள்நாட்டு சுற்றுலாவை மேம்படுத்த, துறைமுக இணைப்பு, சுற்றுலா உள்கட்டமைப்பு வசதிகள் போன்றவை விரிவுபடுத்தப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.


உள்நாட்டு சுற்றுலாவுக்கான ஆர்வத்தை நிவர்த்தி செய்ய, துறைமுக இணைப்பு, சுற்றுலா உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் அறிவித்துள்ளது. இந்த சுற்றுலா மேம்பாட்டுத் திட்டங்கள் லட்சத்தீவு உள்ளிட்ட தீவுகளில் மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த ஐந்தாண்டுகள் முன்னோடியில்லாத வளர்ச்சியின் ஆண்டாக இருக்கும் எனத் தெரிவித்த அமைச்சர் நிர்மலா சீதாராமன், "2024-25 நிதியாண்டில் உள்கட்டமைப்பு வசதிகளுக்கான நிதி ரூ.11.11 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு சுற்றுலாவுக்கான ஆர்வத்தை ஊகுவிக்க, துறைமுக இணைப்பு, சுற்றுலா உள்கட்டமைப்பு திட்டங்கள் லட்சத்தீவு உள்ளிட்ட நமது தீவுகளில் மேற்கொள்ளப்படும்" என்றும் அமைச்சர் நிர்மலா கூறினார்.

Tap to resize

Latest Videos

வருமான வரி உச்சவரம்பில் எந்த மாற்றமும் இல்லை : பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு..

"விக்சித் பாரத் தொலைநோக்குத் திட்டத்தை நனவாக்க மாநிலங்களில் பல சீர்திருத்தங்கள் தேவை. அதற்காக 50 ஆண்டுகளுக்கு மாநிலங்களுக்கு 75,000 கோடி ரூபாய் வட்டியில்லா கடன் வழங்கும் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது" என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

2014 முதல் 2023 வரையிலான காலத்தில் அந்நிய நேரடி முதலீடு ரூ.596 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது. இது ஒரு பொற்காலத்தைக் குறிக்கிறது. இது 2005 முதல் 2014 வரையிலான அந்நிய நேரடி முதலீட்டை விட இரு மடங்கு அதிகமாகும். நீடித்த அன்னிய நேரடி முதலீட்டிற்காக, பல நாடுகளுடன் இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தங்கள் செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்." என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

40,000 ரயில் பெட்டிகள் வந்தே பாரத் தரத்திற்கு உயர்த்தப்படும்: பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன்

click me!