இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் தலைமை செயல் அதிகாரிகள் குறித்து இங்கு காணலாம்.
ஃபோர்ப்ஸ் கூற்றுப்படி, உலகிலேயே அதிக கோடீஸ்வரர்களைக் கொண்ட நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. ஸ்டார்ட்அப்கள் மற்றும் பன்னாட்டு வணிகங்களின் வளர்ச்சிக் களமாக இருக்கும் இந்தியா, சில பெரிய நிறுவனங்களால் உலகை மெதுவாக ஆக்கிரமித்து வருகிறது. இந்த நிறுவனங்களின் சூத்திரதாரிகளாக இருப்பவர்கள் அதன் தலைமை செயல் அதிகாரிகள். அந்த வகையில், 2023 நிதியாண்டில் இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் தலைமை செயல் அதிகாரிகள் மற்றும் அவர்களது சம்பள விவரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இது கண்டிப்பாக உங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும்.
சலில் பரேக் - இன்ஃபோசிஸ் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர்
undefined
இன்ஃபோசிஸின் தலைமை செயல் அதிகாரியாக ஐஐடியில் படித்த சலில் பரேக், 2017 ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டார். நிறுவனத்தின் வருடாந்திர அறிக்கையின்படி, 2023 நிதியாண்டிற்கான அவரது வருடாந்திர ஊதியத்தில் 21% குறைந்துள்ளது. 2023 நிதியாண்டில் ரூ 56.44 கோடி சம்பளம் பெற்றார், இது 2022ஆம் நிதியாண்டில் ரூ 71.02 கோடியாக இருந்தது. இது கிட்டத்தட்ட 43 சதவீதம் அதிகமாகும்.
2023 நிதியாண்டில் ரூ.18.73 கோடி போனஸுடன் ரூ. 6.67 கோடி அடிப்படை ஊதியமாகவும் அவர் பெற்றார். மேலும், கூடுதல் சலுகையாக ரூ.45 லட்சமும், பங்குகளாக ரூ.9.71 கோடியும் பெற்றுள்ளார். 2023 நிதியாண்டில், இன்ஃபோசிஸ் ஊழியர்களுக்கான சராசரி ஊதியம் 2022 நிதியாண்டில் ரூ. 8,14,332லிருந்து ரூ.9,00,012 ஆக உயர்ந்துள்ளது என்று மிண்ட் தெரிவித்துள்ளது.
விஜயகுமார் - ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர்
விஜயகுமார், 1994ஆம் ஆண்டில் ஹெச்சிஎல் நிறுவனத்தில் சேர்ந்தார். HCL அறிக்கைகளின்படி, அவரது ஆண்டு சம்பளம் ரூ. 130 கோடியாக உள்ளது. தற்போது நியூ ஜெர்சியில் வசிக்கும் விஜயக்குமார், மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றின் தலைவராக இருப்பதோடு, அமெரிக்க-இந்திய வணிக கவுன்சிலின் குழு உறுப்பினராகவும் உள்ளார்.
பங்குச் சந்தை போர்ட்ஃபோலியோவை எப்படி வடிவமைப்பது? தமிழ் சினிமாவும், ஷேர் மார்க்கெட்டும்!
ராஜேஷ் கோபிநாதன் - டிசிஎஸ் முன்னாள் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர்
ராஜேஷ் கோபிநாதன், 2017ஆம் ஆண்டில் டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டார். நிறுவனத்தின் ஆண்டறிக்கையின்படி, 2023ஆம் நிதியாண்டில் ரூ. 29.16 கோடியை ஊதியமாக அவர் பெற்றுள்ளார். இது 2022 நிதியாண்டை விட 13.17% அதிகமாகும். அவரது ஊதியம் ரூ. 1.73 கோடியாகவும், அவருடைய பலன்கள் மற்றும் கொடுப்பனவுகள் மொத்தம் ரூ. 2.43 கோடியாகவும் உள்ளது. மேலும் அவருக்கு ரூ. 25 கோடி கமிஷனும் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஊதியமாக ரூ. 25.75 கோடி சம்பாதித்து இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையில் ஐந்தாவது அதிக ஊதியம் பெறும் தலைமை நிர்வாக அதிகாரியாக ராஜேஷ் கோபிநாதன் ஆனார் என்று எகனாமிக் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
சஞ்சீவ் மேத்தா - இந்துஸ்தான் யூனிலீவர் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர்
முன்னணி நுகர்வோர் பொருட்கள் நிறுவனமான ஹிந்துஸ்தான் யூனிலீவர், 2013ஆம் ஆண்டில் சஞ்சீவ் மேத்தாவை தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது. 2023ஆம் நிதியாண்டில் ஆண்டு சம்பளமாக ரூ. 22.36 கோடியை அவர் பெற்றுள்ளார். அதற்கு முந்தைய ஆண்டு ஊதியமாக அவர் ரூ.22.07 கோடி பெற்றார். 2023 ஆம் ஆண்டில் ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தின் ஆண்டு வருவாய் ரூ. 58,154 கோடி.
தியரி டெலாபோர்ட் - விப்ரோ தலைமை செயல் அதிகாரி
நாட்டின் நான்காவது பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான விப்ரோவின் தலைமை நிர்வாக அதிகாரியான தியரி டெலாபோர்ட்டின் சம்பளம் 2023ஆம் நிதியாண்டில் சுமார் ரூ.82 கோடி. ஊதியமாக ரூ. 13 கோடி, வேரியபிள் பே, ஊக்கத்தொகை என பல்வேறு வகைகளில் ரூ. 34 கோடி, ரூ.12 கோடி, ரூ.23 கோடியையும் அவர் பெற்றுள்ளார்.