உலகின் டாப் 10 பெரும் பெண் பணக்காரர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
உலகின் டாப் 10 பெரும் பெண் பணக்காரர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. உலகளவில் உள்ள 2,781 பில்லியனர்களில், 2024 ஆம் ஆண்டில் மொத்த பில்லியனர் எண்ணிக்கையில் 13.3% பெண்கள் ஆவர். இது முந்தைய ஆண்டில் 12.8% ஆக இருந்தது.
உலகின் பெரும் பணக்கார பெண்கள் பட்டியலில் தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக உலகின் பணக்கார பெண்மணி என்ற பட்டத்தை பிரான்சுவா பெட்டன்கோர்ட் மேயர்ஸ் பெற்றுள்ளார்.இவர் லாரியல் நிறுவனரின் பேத்தி ஆவார். இவரின் சொத்து மதிப்பு $98.2 பில்லியன் டாலராகும். அவரின் சொத்து L'Oréal குழுமத்தின் கிட்டத்தட்ட 35% பங்குகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.
undefined
இரண்டாவது இடத்தில் அமெரிக்காவின் பணக்கார பெண்மணி ஆலிஸ் வால்டன் (Alice Walton) உள்ளார். இவரின் $77.2 பில்லியன் டாலராகும். கடந்த ஆண்டில் வால்மார்ட்டின் பங்கு விலையில் 34% அதிகரித்ததன் காரணமாக வால்டனின் செல்வம் உயர்ந்தது.
60 வயதில் தொடங்கிய தொழில்.. 15 கோடி நஷ்டம்.. ஆனா இன்று ரூ.2100 கோடி நிறுவனத்தை உருவாக்கிய நபர்..
ஜூலியா கோச் 66.3 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலக பணக்கார பெண்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். கோச் இண்டஸ்ட்ரீஸில் 42% பங்குகளைப் பெற்ற அவர், எண்ணெய் சுத்திகரிப்பு, மருத்துவத் தொழில்நுட்பம் மற்றும் காகிதத் தயாரிப்புகளில் ஆர்வமுள்ள பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார்.
ஜாக்குலின் மார்ஸ், மார்ஸ் இன்க். வாரிசு, 39.4 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் நான்காவது இடத்தில் உள்ளார். அவரது குடும்பத்துடன், M&Ms, Snickers மற்றும் Pedigree போன்ற பிராண்டுகளுக்கு செல்லப்பிராணி உணவு நிறுவனத்தை அவர் வைத்திருக்கிறார். Mars Inc. உலகின் மிகப்பெரிய தனியார் நிறுவனங்களில் ஒன்றாகும், இதன் வருவாய் $35 பில்லியனைத் தாண்டியுள்ளது
இந்தியாவின் பணக்காரப் பெண்மணியான சாவித்ரி ஜிண்டால் 38.0 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இந்த பட்டியலில் 5-வது இடத்தைப் பிடித்துள்ளார். ஜிண்டால் குழுமத்திற்கு தலைமை தாங்கும் அவர் எஃகு, மின்சாரம், சிமெண்ட் மற்றும் உள்கட்டமைப்பு போன்ற வணிகங்களை மேற்பார்வையிடுகிறார். ஜிண்டால் குழுமம் இந்தியாவில் உள்ள மிகப்பெரிய வணிக நிறுவனங்களில் ஒன்றாகும், இதன் வருவாய் $15 பில்லியனைத் தாண்டியுள்ளது. 2005 ஆம் ஆண்டு ஹெலிகாப்டர் விபத்தில் அவரது கணவர் ஓம் பிரகாஷ் ஜிண்டால் இறந்ததைத் தொடர்ந்து, குழுமத்தின் நிறுவனங்கள் அவர்களது நான்கு மகன்களிடையே பிரிக்கப்பட்டன, இப்போது அவை தனித்தனியாக நடத்தப்படுகின்றன.
முகேஷ் அம்பானியின் லாபம் மட்டும் 61 ஆயிரம் கோடிக்கும் மேல்.. ரிலையன்ஸ் சாதனை - எப்படி தெரியுமா?
ரஃபேலா அபோன்டே-டயமண்ட், $33.7 பில்லியன் நிகர மதிப்புடன், இந்த பட்டியலில் 6-வது இடத்தில் இருக்கிறார். இவர் உலகின் மிகப்பெரிய ஷிப்பிங் லைனான MSCயை தனது கணவர் ஜியான்லூகி அபோன்டேவுடன் இணைந்து நிறுவினார். அவர்களின் நிறுவனம் 1970 இல் தொடங்கப்பட்டது, உலகளாவிய கப்பல் துறையில் ஆதிக்கம் செலுத்தும் அளவிற்கு வளர்ந்துள்ளது,
மெக்கென்சி ஸ்காட், 35.5 பில்லியன் டாலர் மதிப்புடன் இந்த பட்டியலில் 7-வது இடத்தில் இருக்கிறார். அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸின் முன்னாள் மனைவி இவர், அவரின் விவாகரத்தைத் தொடர்ந்து, அவர் அமேசானில் 4% பங்குகளைப் பெற்றார். மேலும் கல்வி, அறிவியல் மற்றும் கலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக பில்லியன்களை நன்கொடையாக அளித்துள்ளார்.
ஜினா ரைன்ஹார்ட், 30.8 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் டாப் 10 உலக பணக்கார பெண்கள்பட்டியலில் 8-வது இடத்தில் இருக்கிறார்., ஹான்காக் ப்ராஸ்பெக்டிங் குழுமத்தின் தலைவராக உள்ளார், இது ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு முக்கிய சுரங்க மற்றும் விவசாய நிறுவனமாகும்
அபிகாயில் ஜான்சன், 29.7 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன், அவர் இந்த பட்டியலில் 9-வது இடத்தில் இருக்கிறார். பெரிய பரஸ்பர நிதி நிறுவனமான ஃபிடிலிட்டி இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்தை வழிநடத்துகிறார்.
மிரியம் அடெல்சன், 29.7 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன், இந்த பட்டியலில் 10-வது இடத்தில் இருக்கிறார். இவர் மருத்துவ ஆராய்ச்சி மற்றும் மருந்து கண்டுபிடிப்புகளுக்கு 1 பில்லியன் டாலருக்கும் மேல் நன்கொடை அளித்துள்ளார்.