How to check PF Balance in EPFO UMANG Portal with and without UAN: வருங்கால வைப்பு நிதி ஒழுங்காக பி.எஃப். கணக்கிற்குச் செல்கிறதா? அதில் பேலன்ஸ் எவ்வளவு இருக்கிறது என்பதை ஊழியர்கள் எப்போதும் வேண்டுமானாலும் சரிபார்த்துக்கொள்ளலாம்.
பணியாளர்களின் ஊதியத்தில் மாதம் தோறும் ஒரு குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படும். அந்தத் தொகை நிறுவனத்தின் சார்பில் ஊழியரின் பிஎஃப் கணக்கில் செலுத்தப்படும்.
தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதியாக செலுத்தப்படும் தொகை ஒழுங்காக பி.எஃப். கணக்கிற்குச் செல்கிறதா? அதில் பேலன்ஸ் எவ்வளவு இருக்கிறது என்பதை ஊழியர்கள் எப்போதும் வேண்டுமானாலும் சரிபார்த்துக்கொள்ளலாம்.
undefined
மத்திய அரசின் உமாங் (UMANG) மொபைல் அப்ளிகேஷன் மூலம் பிஎஃப் கணக்கை பார்வையிடலாம். கணக்கில் எவ்வளவு பேலன்ஸ் உள்ளது, எப்போது வரவு வைக்கப்பட்டது போன்ற விவரங்களைப் பார்க்கலாம். பிஎஃப் கணக்கு வைத்திருக்கும் தொழிலாளர்கள் அவர்களின் UAN எண் மற்றும் பி.எஃப். கணக்கில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் வைத்து இந்த விவரங்களைப் பார்க்கலாம்.
மனித மலத்தை ரூ.41,000 க்கு வாங்கும் கம்பெனி! ஒரு வருட டீலுக்கு ரெடியா இருந்தா ரூ.1.4 கோடி!
எஸ்.எம்.எஸ். மூலமாகவும் பி.எஃப். கணக்கு பேலன்ஸ் எவ்வளவு உள்ளது என்று அறியலாம். பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து EPFOHO என்று டைப் செய்து ஒரு ஸ்பேஸ் விட்டு UAN எண்ணை டைப் செய்ய வேண்டும். தொடர்ந்து எந்த மொழியில் பதில் வேண்டும் என்பதைக் குறிக்க, விருப்பமான மொழியின் பெயரில் முதல் மூன்று எழுத்துகளை டைப் செய்ய வேண்டும்.
அதாவது தமிழ் மொழியில் பதில் பெற EPFOHO UAN TAM என டைப் செய்யலாம். ஆங்கிலத்தில் வேண்டும் என்றால், EPFOHO UAN ENG என்று டைப் செய்யலாம். டைப் செய்த மெசேஜை 7738299899 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். உடனே கிடைக்கும் பதில் மெசேஜில் பிஎஃப் கணக்கு பேலன்ஸ் குறித்த தகவல் இருக்கும்.
மிஸ்டு கால் மூலமாகவும் பிஎஃப் கணக்கில் உள்ள இருப்புத்தொகையைத் தெரிந்துகொள்ளலாம். பணியாளர்கள் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து 9966044425 என்ற EPFO எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும். சற்று நேரத்தில் பிஎஃப் பேலன்ஸ், ஆதார் எண், பான் எண், கடைசியாக டெபாசிட் செய்த தொகை உள்ளிட்ட விவரங்கள் எஸ்.எம்.எஸ். மூலம் வந்துசேரும்.
சிறந்த வட்டி விகிதத்துடன் வரி விலக்கும் கொடுக்கும் போஸ்ட் ஆபீஸ் சிறுசேமிப்புத் திட்டங்கள்!