60 வயதில் தொழில் தொடங்கி, 15 கோடி நஷ்டத்தை சமாளித்து, 2100 கோடி ரூபாய் நிறுவனத்தை கட்டியெழுப்பிய மனிதரின் வெற்றிக்கதை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
தெளிவான குறிக்கோளும் உறுதியான மனநிலையும் இருந்தால் சாதிக்க வயது ஒரு தடையில்லை என்பதை நிரூபித்துள்ளார் கிருஷ்ணதாஸ் பால். அவரின் இந்த வெற்றிக்கதை துஆர்வமும் கடின உழைப்பும் வயதைப் பொருட்படுத்தாமல் குறிப்பிடத்தக்க சாதனைகளுக்கு எவ்வாறு வழிவகுக்கும் என்பதைக் காட்டுகிறது. கிருஷ்ணதாஸ் பால் தனது 60வது வயதில் தனது சொந்த நிறுவனமான SAJ Food என்ற பெயரில் தொடங்கினார்.
ஷர்மிஸ்தா, அர்பன் மற்றும் ஜெயீதா ஆகியோரின் முதலெழுத்துக்களை வைத்து இந்த நிறுவனத்தை தொடங்கினார். 2000 ஆம் ஆண்டில் சர்க்கரை இல்லாத பிஸ்கட்களை தயாரிப்பதே அவரது முக்கிய நோக்கமாக இருந்தது. இதற்காக பிஸ்க் ஃபார்ம் என்ற நிறுவனத்தை தொடங்கினார்.
இருப்பினும், நிறுவனத்தின் வெற்றிக்கான பயணம் அவ்வளவு எளிதானது இல்லை. மேலும் அவரின் நிறுவனம் ரூ. 15 கோடி நஷ்டத்தை சந்தித்ததுடன், பல நிதி சிக்கல்களை எதிர்கொண்டது. எனினும் கிருஷ்ணதாஸ் பால் மனம் தளரவில்லை. கிழக்கு இந்தியாவில் கவனம் செலுத்தினார் மற்றும் தனித்துவமான உள்ளூர் சுவைகளுடன் ஏழு புதிய பிஸ்கட் வகைகளை அறிமுகப்படுத்தினார்.
சிறந்த வட்டி விகிதத்துடன் வரி விலக்கும் கொடுக்கும் போஸ்ட் ஆபீஸ் சிறுசேமிப்புத் திட்டங்கள்!
அவரின் இந்த முயற்சி மேற்கு வங்காளம், ஜார்கண்ட், பீகார் மற்றும் ஒடிசாவில் அவரது பிஸ்கட் பிரபலமடைய செய்தது. நாட்கள் செல்ல சந்தையில் உள்ள சிறந்த பிராண்டுகளில் Bisk Farms நிறுவனம் முன்னணி நிறுவனமாக மாறியது. இந்நிறுவனம் கிழக்கு இந்தியாவில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது, இது சந்தையில் சுமார் 40% ஆகும். 2008 வாக்கில், நிறுவனத்தின் விற்பனை 200 கோடியாக உயர்ந்தது.
துரதிர்ஷ்டவசமாக, கிருஷ்ணதாஸ் பால் 2010 இல் கோவிட் தொற்றுநோயின் முதல் அலையின் போது காலமானார். அவரது மறைவை தொடர்ந்து அவரது மகன் அர்பன் பால் அந்நிறுவனம் செயல் தலைவராக பொறுப்பேற்றுள்ளார், மேலும் தனது தந்தையின் பார்வையை முன்னெடுத்துச் செல்வதில் உறுதியாக உள்ளார். SAJ Food நிறுவனம், 2023 நிதியாண்டில் ரூ.2,100 கோடி டர்ன் ஓவர் செய்தது.
கிருஷ்ணதாஸ் பால் பர்த்வானில் உள்ள கமர்கிதா கிராமத்தில் பிறந்தார். சட்டப் படிப்புக்குப் பிறகு அவர் 1947 இல் நிறுவப்பட்ட தனது தந்தையின் வர்த்தக மற்றும் விநியோக நிறுவனத்தில் சேர்ந்தார். அவரின் குடும்ப வணிகம் அவரது ஐந்து சகோதரர்களிடையே பிரிக்கப்பட்டபோது, கிருஷ்ணதாஸ் பால் தனது சொந்த நிறுவனமான அபர்ணா ஏஜென்சியை 1974 இல் தொடங்கினார்.
முகேஷ் அம்பானியின் லாபம் மட்டும் 61 ஆயிரம் கோடிக்கும் மேல்.. ரிலையன்ஸ் சாதனை - எப்படி தெரியுமா?
அவர் நெஸ்லே, டாபர் மற்றும் ரெக்கிட் & கோல்மேன் தயாரிப்புகளை விநியோகிக்கத் தொடங்கினார். 2000 ஆம் ஆண்டில் அவர் பிஸ்க் ஃபார்மை நிறுவினார், அது இப்போது ஐந்து ஐந்து தொழிற்சாலைகளை இயக்குகிறது. இது பிரிட்டானியாவிற்கு அடுத்தபடியாக கிழக்கில் இரண்டாவது பெரிய பிஸ்கட் பிராண்டாகும்.