அதிவேக இணையதள இணைப்பு வழங்கும் 5ஜி அலைக்கற்றை ஏலம் இன்று(ஜூலை26) தொடங்குகிறது
அதிவேக இணையதள இணைப்பு வழங்கும் 5ஜி அலைக்கற்றை ஏலம் இன்று(ஜூலை26) தொடங்குகிறது
இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, அதானி குழுமம், பார்தி ஏர்டெல், வோடபோன்ஐடியா ஆகிய 4 நிறுவனங்கள் பங்கேற்கின்றன. 72 ஜிகாஹெட்ஸ் அலைகற்றை ஏலத்தின் மதிப்பு ரூ.4.30 லட்சம் கோடியாகும்.
இன்று காலை 10மணிக்கு தொடங்கும் 5ஜி ஏலம் மாலை 6மணிக்கு முடியும். 5ஜி ஏலம் இன்றுடன் முடிந்துவிடும். ஆனால், ரேடியோ அலைவரிசைக்கான ஏலம் தேவைப் பொறுத்து எத்தனை நாட்கள் நடத்துவது என முடிவு செய்யப்படும் என்று மத்திய தொலைத்தொடர்பு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சோனியா காந்தியிடம் 2-வது முறையாக அமலாக்கப் பிரிவு இன்று விசாரணை: டெல்லியில் 144 தடை உத்தரவு
இதுவரை 4 நிறுவனங்கள் வைப்புத்தொகை செலுத்தியுள்ளன. அதில் அதிகபட்சமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ.14ஆயிரம் கோடியும், பார்தி ஏர்டெல் நிறுவனம் ரூ.5,500 கோடியும், வோடபோன்ஐடியா ரூ.2200 கோடியும், அதானி குழுமம் ரூ.100 கோடியும் செலுத்தியுள்ளன.
இந்த 5ஜி ஸ்பெக்ட்ராம் ஏலம் மூலம் அரசுக்கு ரூ.70ஆயிரம் கோடி முதல் ரூ.ஒரு லட்சம் கோடிவரை கிடைக்கும் எனத் தெரிகிறது. 5ஜி நடைமுறைக்கு வந்தால், 4ஜி இணையதளத்தைவிட 10 மடங்கு வேகமாக இணையதளம் இருக்கும்.
குறைந்த அலைவரிசையான 600 மெகாஹெட்ஸ், 700மெகாஹெட்ஸ், 800மெகாஹெட்ஸ், 900மெகாஹெட்ஸ், 1800மெகாஹெட்ஸ், 2100மெகாஹெட்ஸ், 2300மெகாஹெட்ஸ், நடுத்தர வேகம் கொண்ட 3300மெகாஹெட்ஸ், உயர்வேகம் கொண்ட 26ஜிகாஹெட்ஸ் ஏலம் விடப்பட உள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டிக்கப்பட வேண்டும்… அமைச்சர் கைது விவகாரத்தில் மம்தா கருத்து!!
5ஜி ஏலத்தில் 600மெகா ஹெட்ஸ், 700 மெகாஹெட்ஸ், 800,900 மெகாஹெட்ஸ், 1800 மெகாஹெட்ஸ், 2100மெகாஹெட்ஸ், 2300மெகாஹெட்ஸ், 2500மெகாஹெட்ஸ், 3300மெகாஹெட்ஸ், 26ஜிகாஹெட்ஸ் ஆகியவை ஏலம் விடப்படஉள்ளன.
இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம்தான் முன்னணியி்ல் இருக்கும் எனத் தெரிகிறது. ஏனென்றால், 4 நிறுவனங்களில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம்தான் அதிகபட்சமாக ரூ.14 ஆயிரம் கோடி இஎம்டி தொகை செலுத்தியுள்ளது. ஆதலால், ஸ்பெக்ட்ரம் வாங்க மற்ற நிறுவனங்களைவிட ரிலையன்ஸ் ஜியோ அதிகமாக செலவிடும்.
உலகிலேயே சுதந்திரமான நீதித் துறை இந்தியாவில்தான் உள்ளது: தலைமை நீதிபதிக்கு கிரண் ரிஜுஜு பதில்
5ஜி அலைக்கற்றை ஏலத்தில் வெற்றி பெறும் நிறுவனம், அடுத்த 20 ஆண்டுகளுக்கு ஸ்பெக்ட்ரமை பயன்படுத்துவார்கள். ஏலம் கேட்க வரும நிறுவனங்களைஈர்க்க பேமெண்ட் முறை எளிதாக்கப்பட்டுள்ளது.
முதல்முறையாக, ஏலத்தில் வெற்றி பெறும் நிறுவனங்கள், கட்டாய முன்பணம் கட்டத்தேவையில்லை.
ஏலத்தில் பெற்றி பெறும் நிறுவனங்கள், ஏலத்தின் தொகையை 20 தவணைகளாகப் பிரித்துச் செலுத்தலாம். ஒவ்வொருஆண்டின் தொடக்கத்திலும் அட்வான்ஸ் செலுத்த வேண்டும்.