ரூ.25 ஆயிரம் முதலீட்டில் ரூ.10 கோடி லாபம்: வியக்க வைத்த மகாராஷ்டிரா இளைஞர்கள்

By Pothy RajFirst Published Jul 25, 2022, 5:26 PM IST
Highlights

நாட்டில் கொரோனா பரவல் நேரத்தில் கொண்டுவரப்பட்ட லாக்டவுனில் வேலையிழந்த இரு நண்பர்கள், சேர்ந்து தொடங்கிய இறைச்சிக்கடையை 2 ஆண்டுகளில் ரூ.10 கோடிக்கு விற்பனை செய்துள்ளனர்.

நாட்டில் கொரோனா பரவல் நேரத்தில் கொண்டுவரப்பட்ட லாக்டவுனில் வேலையிழந்த இரு நண்பர்கள், சேர்ந்து தொடங்கிய இறைச்சிக்கடையை 2 ஆண்டுகளில் ரூ.10 கோடிக்கு விற்பனை செய்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம், அவுரங்காபாத்தைச் சேர்ந்தவர்கள் ஆகாஷ் மகாஸ்கே, ஆதித்யா கீர்தனா. இருவருமே சிறுவயது முதலே நெருங்கிய நண்பர்கள். கடந்த 2020ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட லாக்டவுன் நடவடிக்கையால், இருவரும் பணியாற்றிய நிறுவனம் மூடப்பட்டதால், வேலையிழந்தனர். 

பிஹார்கூட இல்லை, தமிழகம்தான் மோசமாம்! எஸ்சி,எஸ்டிக்கு எதிராக வன்முறை குறித்து மத்திய அரசு தகவல்

முதல்ஒரு மாதம் இருவரும் இருக்கின்ற பணத்தை வைத்து செலவு செய்தனர். அதன்பின் இருவருக்கும் வழிதெரியவில்லை, வேலையும் கிடைக்கவில்லை. அடுத்து என்ன தொழில் செய்யலாம் என்று பல்வேறு ஆலோசனை செய்தனர். ஒரு பல்கலைக்கழகம் நடத்தி, இறைச்சி மற்றும் கோழிப்பண்ணை நடத்துதல் குறித்த குறுகிய கால பயிற்சியை இருவரும் எடுத்தனர்.

இதையடுத்து, இந்த பயிற்சியையும், ரூ.25 ஆயிரத்தையும் முதலீடாக வைத்து அபிடிட்டி என்ற இறைச்சிக் கடையை இருவரும் தொடங்கினர். முதலி்ல் இருவரின் குடும்பத்தாரும் இந்த கடையைத் தொடங்க எதிர்ப்புத் தெரிவித்தநர். ஆனால் உறவினர் ஒருவரின் உதவியால் அவருடைய கடையின் ஒருபகுதியில் இறைச்சிக்கடையைத் தொடங்கினர்.

அடேங்கப்பா! இதுதான்யா மோசடி: ஆளுநர், எம்.பி. பதவி வாங்கித் தருவதாக ரூ.100 கோடி ஏமாற்றிய 4 பேர் கைது

கடந்த 2 ஆண்டுகளில் இருவரின் அபிடிட்டி இறைச்சிக்கடை காலப்போக்கில் பிரபலமாகியது. வியாபாரம் சூடுபிடிக்கத் தொடங்கியது, தற்போது மாதத்துக்கு ரூ.5 லட்சம் வரை விற்று முதல் இருக்கிறது. இதைக் கவனித்த, ஃபேர் கார்ப்பரேஷன் என்ற நிறுவனம், அபிடிட்டி நிறுவனத்தின் ஒருபகுதியை விலைக்கு வாங்க விரும்பியது.

இதையடுத்து, அபிஷேக்கும், ஆதித்யாகும் ஒப்புக்கொண்டு ரூ.10 கோடிக்கு 40 சதவீத  பங்குகளை ஃபேப் நிறுவனத்துக்கு அளித்தனர். மீதமுள்ள 40 சதவீதத்தை தாங்கள் வைத்துக்கொண்டனர். இருப்பினும், ஃபேக் கார்ப்பரேஷன் நிறுவனர் சயீத், கடையின் பெயரை மாற்றாம்ல அபிடிட்டி என்ற பெயரிலேயே இயங்கட்டும், அபிஷேக், ஆதித்யா இருவருமே நடத்தட்டும் என்று தெரிவித்துவிட்டார். அபிடிட்டி இறைச்சிக்கடை லாபத்தில் மட்டும் பங்கு எடுத்துக்கொள்வதாகவும், முதலீடு செய்வதாகவும் தெரிவித்தது.

n.v. ramana: cji:உலகிலேயே சுதந்திரமான நீதித் துறை இந்தியாவில்தான் உள்ளது: தலைமை நீதிபதிக்கு கிரண் ரிஜுஜு பதில்

அபிடிட்டி கடையின் உரிமையாளர் ஆதித்யா கூறுகையில் “ நாங்கள் இந்தக் கடையை தொடங்கியதும் இருவரின் குடும்ப உறுப்பினர்களே எங்களை எதிர்த்தார்கள். ஆனாலும் விடாமுயற்சியால் கடையைத் தொடங்கினோம். இன்று கடையை ரூ.10கோடிக்கு விற்பனை செய்துள்ளோம்” எனத் தெரிவித்தார்

ஃபேப் நிறுவனத்தின் தலைவர் சயீத் கூறுகையில் “ அபிடிட்டி நிறுவனம் மூலம்இன்னும் பல புதிய பொருட்களை விற்பனை செய்ய இருக்கிறோம். அதற்கான முயற்சியில் உள்ளோம. எங்கள் நிறுவனம் மூலம் அவுரங்காபாத்தில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 25 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கிறது. எங்கள் கடையை அவுரங்காபாத் கடந்து பல்வேறு நகரங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும்” எனத் தெரிவித்தார்

click me!