sbi : எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அலர்ட்! ஏடிஎம்-களில் பணம் எடுக்கும் முறையில் மாற்றம்

Published : Jul 25, 2022, 03:37 PM IST
sbi : எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அலர்ட்! ஏடிஎம்-களில் பணம் எடுக்கும் முறையில் மாற்றம்

சுருக்கம்

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கியின் வாடிக்கையாளர்கள் ஏடிஎம் மையத்தில் பணம் எடுப்பதில் மோசடிகளைத் தடுக்கும் வகையில் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கியின் வாடிக்கையாளர்கள் ஏடிஎம் மையத்தில் பணம் எடுப்பதில் மோசடிகளைத் தடுக்கும் வகையில் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதேபோன்ற பாதுகாப்பு அம்சத்தை அனைத்து வங்கிகளும் தங்கள் ஏடிஎம்களில் விரைவில் அறிமுகம் செய்யலாம்

https://tamil.asianetnews.com/india/who-is-president-thirelapathi-murmu-s-husband-how-many-children-how-did-she-lose-her-two-sons--rfkanx

இந்த புதிய முறையி்ன்படி, வாடிக்கையாளர்கள் ஏமாற்றப்படாமல்இருக்க கூடுதல் பாதுகாப்பு அம்சத்தை எஸ்பிஐ வங்கி அறிமுகம் செய்துள்ளது. 

இதன்படி, பணம் எடுப்பதற்கு முன், ஓடிபி எண், வாடிக்கையாளர் பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு வரும். அந்த எண்ணை ஏடிஎம் எந்திரத்தில் பதிவு செய்தால்தான் பணம் வெளியே வரும். இந்த ஓடிபி எண் ஒவ்வொரு பரிமாற்றத்துக்கும் புதிது புதிதாக வழங்கப்படும். ஒரு பரிமாற்றத்துக்கு ஒரு ஓடிபி எண் வழங்கப்படும்.

அடேங்கப்பா! இதுதான்யா மோசடி: ஆளுநர், எம்.பி. பதவி வாங்கித் தருவதாக ரூ.100 கோடி ஏமாற்றிய 4 பேர் கைது

இந்த திட்டத்தை கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி 1ம்தேதியே எஸ்பிஐ வங்கி அறிமுகம் செய்துவிட்டது. இருப்பினும் ஏடிஎம் மோசடிகள் குறித்து அடிக்கடி வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டியபின், தற்போது அனைத்து எஸ்பிஐ ஏடிஎம்களிலும் இது நடைமுறைக்கு வந்துள்ளது.

இதன்படி வாடிக்கையாளர்கள் ரூ.10ஆயிரம் அல்லது அதற்கு அதிகமாக எடுத்தால் எஸ்பிஐ ஏடிஎம்களில் ஓடிபி மூலம் பரிமாற்றம் செய்ய வேண்டும்.

droupadi murmu: india: new delhi: திரெளபதி என்பது உண்மை பெயரா? இயற்பெயர் ரகசியத்தை வெளியிட்ட ஜனாதிபதி முர்மு

ஓடிபி மூலம் எவ்வாறு பணம் ஏடிஎம்களில்இருந்து எடுப்பது?

1.    எஸ்பிஐ ஏடிஎம்களில் பணம்எடுக்க டெபிட் கார்டு அல்லது மொபைல் போன் தேவை.

2.    டெபிட்கார்டை ஏடிஎம்களில் சொருகியவுடன், பின் எண், தேவைப்படும் தொகை ஆகியவற்றை பதிவு செய்தால், ஓடிபி பாதுகாப்பு கேட்கும்.

3.    வங்கியில் வழங்கியுள்ள செல்போன் எண்ணுக்கு ஓடிபி எண் எஸ்எம்எஸ் வாயிலாக வரும்.

4.    ஓடிபி எண்ணை, பதிவு செய்தபின், பரிமாற்றம் முடிவடைந்து வாடிக்கையாளர்கள் கேட்டிருந்த பணம் கிடைக்கும்.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

Agriculture: தேங்காய், பாக்கு விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! வேளாண் பொருட்கள் நேரடி ஏலம்.! எங்கு நடக்குது தெரியுமா?
Gold Rate Today (December 06): இதுதான் இன்றைய தங்கம் விலை.! விலை உயர என்ன காரணம் தெரியுமா?