உலகின் முதல் கோடீஸ்வரும் டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் உரிமையாளரான எலான் எஸ்க், உலகளவில் எந்த அளவுக்கு அறியப்பட்டுள்ளாரோ அதே அளவுக்கு சர்ச்சையிலும் சிக்கி அறியப்படக்கூடியவராக இருக்கிறார்.
உலகின் முதல் கோடீஸ்வரும் டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் உரிமையாளரான எலான் எஸ்க், உலகளவில் எந்த அளவுக்கு அறியப்பட்டுள்ளாரோ அதே அளவுக்கு சர்ச்சையிலும் சிக்கி அறியப்படக்கூடியவராக இருக்கிறார்.
அவர் குறித்த சில தெரிந்துகொள்ள வேண்டிய அம்சங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
undefined
1. எலான் மஸ்க் கடந்த 1971ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் பிரிட்டோரியாவில் பிறந்தார். குடும்பத்தில் மூத்த மகனாகவும் இவருக்குப்பின் 2 சகோதரர்களும் உள்ளனர். இவரின் தந்தை எரோல் மஸ்க், பொறியாளர். தாய், கனடாவைச் சேர்ந்த மாடல்.
zomato share price: ஜோமேட்டோ பங்கு மதிப்பு வரலாற்று வீழ்ச்சி:14 % சரிவு: என்ன காரணம்?
2. 1980ம் ஆண்டு தாய் விவாகாரத்துப் பெற்றபின் எலான் மஸ்க் தனது தந்தையுடனே வளர்ந்தார்.
3. எலான் மஸ்க் சாதாரண நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர். படிப்புக்காக வாங்கிய கடனைச் செலுத்தமுடியாமலும், வீட்டுவாடகை கொடுக்க முடியாமலும் சிரமப்பட்டார்.
4. எலான் மஸ்க் சிறுவயதிலேயே கணினிதொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கினார். சுயமாக வீடியோ கேமே உருவாக்கும் அளவுக்கு சிறப்பான திறமையுடன் இருந்தார். கனடாவின் பாஸ்போர்ட் மட்டும் தொடக்கத்தில் எலான் மஸ்கிடம் இருந்தது. ஆனால், அமெரிக்காவில் பொருளாதார வளர்ச்ச்சியைப் பார்த்து அங்கு செல்ல முடிவெடுத்தார்
5. எலான் மஸ்க் அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தி்ல் இளநிலை இயற்பியல், பொருளாதாரம் பயின்றார்.
6. 1997ம் ஆண்டு ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் படித்தமுடித்தபின் எலான் மஸ்க் பல நிறுவனங்களைத் தொடங்கினார்.
elon musk: elon: sergey brin: எலான் மஸ்க் மன்மத லீலைகள்: கூகுள் நிறுவனர் மனைவியுடன் கள்ளத் தொடர்பா?
7. எலான் மஸ்க் தொடங்கிய முதல்நிறுவனத்தின் பெயர் ஜிப்2. கடந்த 1999ம் ஆண்டில் நிறுவனங்கள், நாளேடுகள், புத்தகங்களுக்கு வரைபடங்கள், வணிரீதியாக டைரிகள் வழங்கும் நிறுவனமாகச் செயல்பட்டது.
8. அதன்பின் எக்ஸ்.காம் என்ற நிறுவனத்தை எலான் மஸ்க் தொடங்கி அதை பின்னர் பேபால் நிறுவனத்துடன் இணைத்தார்.
9. 2002ம் ஆண்டு எலான் மஸ்க் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தைத் தொடங்கினார். தனியார் நிறுவனம் ராக்கெட்டை விண்ணுக்கு ஏவி, ஆட்களையும் அழைத்துச்செல்லும் என மஸ்க் அறிவித்தார்.
10. 2020ம் ஆண்டு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கான்9 ராக்கெட் நாசா விஞ்ஞானிகளை வெற்றிகரமாக அழைத்துச் சென்றுவிட்டு திரும்பியது.
11. 2004ம் ஆண்டு பேட்டரி வாகனத் தாயாரிப்பில் இறங்கிய எலான் மஸ்க் டெஸ்லா நிறுவனத்தை தொடங்கினார்.
12. 2008ம் ஆண்டு டெஸ்லா நிறுவனம் தனது முதல் காரை வெளியிட்டது. இந்த காரை வெளியிட்டபின்புதான் எலான் மஸ்க்கிற்கு சொத்து குவியத் தொடங்கியது, உலகக் கோடீஸ்வரர்களில்ஒருவராக மாறினார்.
13. 2022ம் ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தை 4400 கோடி டாலருக்கு வாங்க எலான் மஸ்க் ஒப்பந்தம் செய்திருந்தார். ஆனால், ட்விட்டர் நிறுவனத்துடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் அந்த ஒப்பந்தத்தை எலான் மஸ்க் ரத்து செய்தார்
14. எலான் மஸ்கிற்கு இதுவரை 3 திருமணங்கள் முடிந்துள்ளன. தலுவா ரிலே என்ற 2-வது மனைவியிடம் இருந்து மட்டும் மஸ்க் இருமுறை விவாகரத்து பெற்றார். 3வது மனைவி கனடா பாடகர் கிரிம்ஸ். இவருடன் சேர்ந்து மஸ்கிற்கு 2 குழந்தைகள் உள்ளனர். கிரிம்ஸையும் எலான் மக்ஸ் விவாகரத்து செய்துவிட்டார். முதல்மனைவி ஜஸ்டின் மஸ்கிற்கு 5 குழந்தைகள் உள்ளனர்.
15. எலான் மஸ்க் தன்னுடைய நியூரான் நிறுவனத்தில் பணியாற்றிய தலைமை நிர்வாக அதிகாரியுடன் சேர்ந்து கடந்த 2021ம் ஆண்டு இரட்டை குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளது சமீபத்தில் அவரே தெரிவித்தார்.
16. கூகுள் நிறுவனத்தின் நிறுவனர் செர்ஜியின் மனைவி நிகோலுடன் எலான் மஸ்கிற்கு தொடர்பு இருப்பதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால், மஸ்க் மறுத்துள்ளார்.
17. 2022 ஜூன் மாதம் கணக்கின்படி, எலான் மஸ்கின் சொத்து மதிப்பு 22000 கோடி டாலராகும்.